அண்ணலின் ஆசிரமம்!

பதிவு செய்த நாள் : 04 அக்டோபர் 2019

குஜராத் மாநிலம், ஆமதாபாத் அருகே, சபர்மதி ஆற்றங்கரையில், சபர்மதி ஆசிரமம், 36 ஏக்கரில் அமைந்துள்ளது. இது, மகாத்மா காந்தியால் துவங்கப்பட்டது.

இங்கு, 1918 முதல், 1933 வரை, காந்தி வசித்து வந்தார். 'உப்பு சத்தியா கிரகம்' எனும், அறப்போராட்டத்தை இங்கு தான் துவங்கினார். சபர்மதியிலிருந்து, 240 கி.மீ., துாரத்தை, 23 நாட்கள் நடந்து, குஜராத் மாநில கடற்கரை கிராமமான தண்டியில், உப்பு எடுத்தார்.

சபர்மதி ஆசிரமம், தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது. காந்தியடிகள் வசித்த, நந்தன் குடில், வழிபாட்டு மையம், அருங்காட்சியகம், நுாலகம் போன்றவை இங்கு உள்ளன.

மிகவும் இயற்கையான சூழலில், மரங்கள், பறவைகள் நிறைந்துள்ள இந்த ஆசிரமம், மனதிற்கு அமைதி தரும்.