எல்­லாம் தெரிந்த ஏகாம்­ப­ரம்!

பதிவு செய்த நாள் : 04 அக்டோபர் 2019

கடவுச்சொல்!

கணினி, அலைபேசி போன்ற மின்னணு சாதனங்களில் தகவல்களை பாதுகாப்பது, 'பாஸ்வேர்டு' என்ற கடவுச்சொல். எளிதாக கணிக்கக் கூடிய, '1 2 3 4 5 6' என்ற எண் தொகுப்பையே, கடவுச்சொல்லாக உலகம் முழுவதும் பலர் பயன்படுத்துவதாக, ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

'நன்கு அறிமுகமான எண் தொகுப்பு, சொல், பெயர்களை, கடவுச்சொல்லாக பயன்படுத்துவோரின் மின்னணு கணக்குகள் தான் அதிகளவில், 'ஹேக்' செய்யப்படுகின்றன. இது போன்ற எண்களையோ, பிரபலங்களின் பெயர்களையோ கடவுச்சொல்லாக பயன்படுத்துவது பாதுகாப்பற்றது...' என்று, ஐரோப்பா கண்டம், இங்கிலாந்து நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு மைய தொழில்நுட்ப இயக்குநர் இயன் லெவி கூறியுள்ளார்.

எளிதில் நினைவில் கொள்ளத்தக்க, மூன்று சொற்களை சேர்த்து, வலிமையான கடவுச்சொல்லை உருவாக்கி பயன்படுத்த, அவர் வலியுறுத்தியுள்ளார்.

மின்னணு சாதனங்களின் திறவுகோலை, பாதுகாப்பு மிக்கதாக உருவாக்கிக் கொள்வது மிகவும் அவசியம்.

நிலவேம்பு

கொசுக்கடியால் வரும் டெங்கு நோயை தடுக்கிறது, நிலவேம்பு கஷாயம். இதை குடித்தால், பலவகை காய்ச்சலில் இருந்தும் தப்பலாம்.

கொசுக் கடியைத் தடுக்க, நொச்சி இலை, வேப்பிலை உள்ளிட்டவற்றை எரித்து, வீட்டைச் சுற்றி, புகை மூட்டம் போடலாம்.

ஓமவல்லி, துளசி, நொச்சி, கற்றாழை போன்ற மூலிகை செடிகளை, வீட்டருகே வளர்ப்பதன் மூலம், கொசு வரவை தடுக்கலாம்.

சாம்பிராணி, மஞ்சள், காய்ந்த துளசி, வேப்பிலை, பூண்டுத்தோல், வெங்காயத்தோல் மற்றும் தேங்காய் நாரை எரித்து, வீட்டுக்குள் புகை காட்டுவதும் நல்ல பலன் தரும்.

கருப்பட்டி

பனை மரத்திலிருந்து எடுக்கப்படும், பதனீரைக் காய்ச்சி, கருப்பட்டி தயாரிப்பர். இதை, பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனை அட்டு என்றும் கூறுவது உண்டு. இது, ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறு சுறுப்பாக்கும்; மேனியை பளபளக்க வைக்கும். பெண்களின் இடுப்பு எலும்பு, கர்ப்பப்பையை வலுவாக்கும்.

காபியில், சர்க்கரைக்கு பதிலாக, கருப்பட்டி கலந்து குடித்தால், நன்மைகள் ஏராளம். கருப்பட்டியில், கலப்படமும் மலிந்து விட்டது. அசல் கருப்பட்டியை கண்டுபிடிக்க சில எளிய நடைமுறைகள் உள்ளன.

அசல் கருப்பட்டியை சுவைத்தால், இனிப்புக்கு இடையே, லேசான கரிப்பு சுவை தெரியும். போலி கருப்பட்டியை உடைத்தால் பளபளக்கும்; சில நாட்களில் இளகி, பிசுபிசுத்து விடும். அசல் கருப்பட்டி, எவ்வளவு நாளானாலும், கல் போல இருக்கும்.