பாட்டிமார் சொன்ன கதைகள் – 236 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 04 அக்டோபர் 2019


‘நீறுபூத்த வீர நெருப்பு!

நான்காவது பரிட்சை தான் அதில் முக்கியமான பரிட்சை என்று விளம்பரம் செய்யப்பட்டது. மரங்கள் புதர்கள் மேடு பள்ளங்கள் இல்லாத ஓரிடத்தில் ஒரு சிலம்பக் கூடம் அமைத்தார்கள். ஒரு காட்சி மண்டபமும் அதை சார்ந்து இருந்தது. அந்த மண்டபத்தில் அரசர்க ளும் பிரபுக்களும் அவரவர் அந்தஸ்துக்கு தகுந்தபடி உட்காருவதற்கு வசதியான ஆசனங்கள் அமைக்கப்பட்டன. மாதர்க ளும் பிரத்தியேகமாக இருந்து பார்க்கும் படி வசதிகள் செய்யப்பட்டன. அந்தக் காட்சி சாலை சுற்றிலும் முத்துச் சரங்கள் தொங்கவிடப்பட்டதாய் பொன் மயமாக வும், ரத்ன மயமாகவும் தகதகவென்று ஜொலித்தது. திருதராஷ்டிர மகாராஜா மந்திரிகளோடும், சிற்றரசர்களோடும்,  பீஷ்மர் முதலான பெரியோர்களோடும்  வந்து சேர்ந்தான். காந்தாரி குந்தி முதலான ராஜகுல பெண்களும் தாதிக ளோடும் விருதுகளோடும் வந்து மஞ்சத் தில் வீற்றிருந்தார்கள்.  பட்டணத்திலுள்ள மக்கள் கடல் போல் திரண்டு வந்தார்கள். அலை மேல் அலை எறிவதுபோல் உற்சா கம் அடைந்து கொண்டிருந்த ஜனக் கடல் வழி விட வாத்திய கோஷங்களோடு வந்தார் ஒருவர். வெள்ளை ஆடை, வெளுத்த தலை ரோமம் ,மீசை தாடிகள் வெண்ணிறமான பூணல். அவர் வெண்மையான புஷ்ப சந்தனங்களையும் அணிந்திருந்தார் `அறிவு தெய்வத்தின் அவதாரம்’ என்று அனைவரும் கைகூப்பி னார்கள். ஆ! ஆ அந்த ஞானம்தான் நீறு பூத்த வீர நெருப்பு’ என்று போற்றி னார்கள்.

துரோணர் கூடத்தின் நடுவில் வந்து சேர்ந்தார். திருதராஷ்டிர மகாராஜா அவ ருக்கு பொண்ணையும் ரத்தினங்களை யும் முத்துக்களையும் அள்ளி அள்ளித் தட்சிணையாக கொடுத்தான் .பிறகு வேலைக்காரர்கள் பலவகையான ஆயு தங்களை எடுத்து வந்தார்கள் .ராஜ குமாரர்கள் உடம்பு தோலால் செய்த விரல் உறைகள் அணிந்து கவசம் பூண்டு கட்சைகட்டி அம்பறாத்தூணி களையும் கட்டிக்கொண்டு வில்லும் கையுமாக வந்து துரோணரை வணங்கினார்கள்.

அவர்கள் செஞ்சந்தனம் பூசிக் கொண்டு, சிவந்த மாலைகள் தரித்து, சிவந்த கொடிகள் பிடித்து வந்தார்கள். அவர்களுடைய கடைக்  கண்களும் வீராவேசத்தால் சிவந்திருந்தன. சிவந்த ரத்தினங்களாலும்,செம்பொன்னாலும்  செய்த ஆபரணங்களை அணிந்து இருந் தார்கள். வீர நெருப்பு விசிறி ஜ்வாலை செய்யப்பட்டது போல் இருந்தது அந்தத் தோற்றம். துரோணர் அனுமதிபெற்று அவர்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டார்கள். முதலில் வில்லை எடுத்து நாணேற்றி அம்புகளை தொடுத்தார்கள். வேறு ஆயுத பயிற்சிகளும் செய்து காட்டி னார்கள். சபையிலே சிலருடைய பூமா லைகளில் மட்டும் அம்புகள் விழுந்தன. ஆனால் அவர்களுக்கு ஒரு விதமான காயமும் ஏற்படவில்லை. சிலர் அம்பு விழும் என்ற பயத்தால் தலைகுனிய அந்த தலையில் சூட்டிக் கொண்டு இருந்த புஷ்பங்களில் பானங்கள் விழுந்தன .சிலர் பயத்தை மறந்து வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தார் கள். அவர்கள் கண்ணெதிரே எவ்வளவு லாவகமாக பானங்கள் ஓடி ஓடி விளை யாடுவது போல சென்றன. பெரியகுறி களும் சிறிய குறிகளும் எத்தனை விதமான பானங்களால் அடிக்கப்பட்டன. பெயர் அடையாளம் உள்ள பாணங்கள் கூடமெங்கும் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தன. இடி போன்ற நாண் ஒலிகேட்டு பெண்களில் சிலர் மூர்ச்சித்து போனார்கள்.

தேர்கள் மேலும், யானைகள் மேலும், குதிரைகள் மேலும், ராஜகுமாரர்கள் ஏறி விளை யாட்டாக யுத்தம் செய்து காட்டி னார்கள். கத்தி கேடயங்களோடு கைச் சண்டைகளும் நடை பெற்றன. துரியோத னனும் பீம சேனனும் கதைகளை எடுத்துக்கொண்டு வலமும் இடமுமாக திரிந்து போர் செய்ய ஆரம்பித்தார்கள். விளையாட்டு சண்டை யாகத்  தொடங்கி யதார்த்த சண்டை ஆகவே அது முதிர்ந்து விடும் போல் தோன்றியது. உடனே அஸ்வத்தாமா எழுந்து` நீங்கள் காண்பித்த வேகமும் சாகசமும் போதும் போதும் குருவின் கட்டளை’ என்று சொல்லி ஒங்கின  கதைகளோடு கூடிய அந்த இருவரையும் தடுத்து அடக்கி னான். கடைசியாக அர்ஜுனன் பொன்மய மான கவசம் தரித்து தோன்றினான். இந்திர வில்லோடும் மின்னலோடும்  கூடிய சந்தியா காலத்துச் சிவப்பு மேகம் போல காணப்பட்டான். `நல்லது’` நல்லது’ என்று மலர்ந்த கண்களோடு சபை முழுமையும் அழகிலே மயங்கி போயிற்று. அந்த வீர வாத்தியங்களும் சங்கங்களும் முழங்கின. அந்த அஸ்திர சாதூர்யங்கள்  இப்போது துரோண ருக்கே வியப்பாக இருந்தது .ஒரு கணம் தேர்த்தட்டில் இருப்பான். மறுகணம் பூமியின் தோன்றுவான் .அந்த சபை எங்கும் திரிந்துகொண்டே எத்தனை விதமான பாணங்களால் குறிகளை அடிப்பான். சுழன்று கொண்டிருந்த இரும்பு பன்றியின் வாயில் ஏககாலத்தில் ஐந்து  பாணங்களை செலுத்தி விட்டான் கயிற்றில் தொங்கி ஆடிக் கொண்டி ருக்கும் பதுமையில் இருபத்தியோரு பாணங்களைப் செலுத்திவிட்டான்.

 சபை எங்கும் ஒரே நிசப்தம். வாத்திய கோஷம் ஓய்ந்து மக்களிடையே உற்சாக கோஷங்களும் ஓய்ந்திருந்தது .எல்லோ ரும் மெய்மறந்து ஏதோ ஒரு கந்தர்வ லோகத்தில் இருப்பது போன்ற உணர்ச்சிகளோடு இருக்கிறார்கள். ஆனால் அது என்ன ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். இடிமுழக்கமில்லை! மலை பிளக்கப்படுகிறதா? பூமிதான் வெடிக்கிறதா? கண்களெல்லாம் கூடத்தின் வாசலை நோக்குகின்றன. சரி சரி என்ன உக்கிரமான முகமும் கண்க ளும். மலைப்பாதை போன்ற தோள்கள் அந்த வீரன் யார்?

ஜனக்கூட்டம் விலகி வழிவிட, மலை யொன்று கவசம் தரித்து வில்லேந்திக் கத்தி கட்டிக்கொண்டு வருவது போல அந்த விசாலமான அரங்கத்திலே பிரவேசித்தான் ஒரு வீரன். அவனுடைய உயரமும், சிங்கம் போன்ற சரீரக்கட்டும், நீண்டு பருத்த கைகளும், யெவன வயதும், குண்டலங்களோடு சோபிக்கும் முக மண்டலமும், சபையை மதியாத உக்கிரமான பார்வையும், பார்த்த வர்களையெல்லாம் அப்படியே வசீக ரித்து விட்டன.  அந்த வட்டமான சபை, அசைவற்றுக் கண் கொட்டாமல் அவனையே பார்த்தது.

(தொடரும்)