பிசினஸ் : சேட்டுகள் பிசினசில் எப்படி ஜெயிக்கிறார்கள்! – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 03 அக்டோபர் 2019

எல்­லோ­ரும்­தான் பிசி­னஸ் செய்­கி­றார்­கள். ஆனால் மார்­வா­டி­கள் செய்­யும் பிசி­னஸ் மட்­டும் அவர்­களை எப்­போ­துமே வெற்­றிப்­பா­தை­யில் கொண்டு செல்­கி­றது. அடகு பிடிப்­பது, நகைக் கடை­கள் நடத்­து­வது,டெக்ஸ்­டைல்ஸ் மற்­றும் இரும்பு சம்­பந்­த­மான தொழில்­கள் செய்­வது என்று மார்­வா­டி­கள் கைவைக்­காத துறை­கள் இல்லை. பதிக்­காத முத்­தி­ரை­கள் இல்லை. எப்­படி இவர்­க­ளால் மட்­டும் இவ்­வ­ளவு சிறப்­பாக பிசி­னஸ் நடத்த முடி­கி­றது? அந்த ரக­சி­யங்­க­ளைப் பார்க்­க­லாமா?

பிசி­னஸ் என்­பதை அவர்­கள் மிக­வும் பிராக்­டிக்­க­லான ஒரு விஷ­ய­மா­கப் பார்க்­கி­றார்­கள். அதை ஏதோ பர­ப­ரப்­பு­டன் செய்ய வேண்­டிய ஒரு செய­லாக அவர்­கள் பார்ப்­ப­தில்லை. தின­சரி வாழ்க்­கை­யின் ஒரு அங்­க­மாக அவர்­க­ளுக்கு அவர்­க­ளு­டைய பிசி­னஸ் இருக்­கி­றது.

அது­மட்­டு­மல்ல, குடும்­பம், பிசி­னஸ் இரண்­டை­யும் தனித்­த­னி­யா­கப் பார்க்­கும் மனோ­பா­வ­மும் மார்­வா­டி­க­ளி­டம் கிடை­யாது. தங்­கள் வீட்­டுப் பெரி­ய­வர்­கள் வீட்­டில் பேசிக்­கொள்­ளும் பிசி­னஸ் சம்­பந்­த­மான விஷ­யங்­க­ளைக் கேட்­டுக் கேட்டே அந்த வீட்­டுக் குழந்­தை­கள் வளர்­கி­றார்­கள். அத­னால், தொழில் என்­பதை, ஒரு குறிப்­பிட்ட வய­துக்கு மேல், ஒரு  புது விஷ­ய­மாக அவர்­கள் பார்ப்­ப­தில்லை.

அத­னால்­தான் அப்­பா­வி­ட­மி­ருந்தோ,தாத்­தா­வி­ட­மி­ருந்தோ பிசி­னஸ் பொறுப்பை எடுத்­துக்­கொள்­ளும் அடுத்த தலை­மு­றை­யி­னர், பிசி­ன­சில் ஏதோ பல வருட அனு­ப­வம் பெற்­ற­வர்­கள்­போல இயல்­பாக செயல்­பட ஆரம்­பித்­து­வி­டு­கி­றார்­கள். இவர்­கள் ராஜஸ்­தா­னின் மார்­வார் என்ற பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­ப­தால் மார்­வாரி என்று அழைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

மரி­யாதை, நம்­பிக்கை, சொன்ன வாக்­கைக் காப்­பாற்­று­வது இந்த மூன்­றும் மார்­வா­டி­கள் மிகத் தீவி­ர­மா­கப் பின்­பற்­றும் பண்­பு­கள். வரு­கின்ற வாடிக்­கை­யா­ளர்­களை நல்ல வித­மாக நடத்தி, திரும்­பத் திரும்ப தங்­கள் கடைக்கே அவர்­கள் வரும்­ப­டி­யான மேஜிக்கை நிகழ்த்தி விடு­கி­றார்­கள். இத்­தனை மணிக்கு கொடுத்­து­வி­டு­கி­றோம் என்று சொன்­னால், அதை சரி­யாக அத்­தனை மணிக்கே டெலி­வரி செய்­வ­தி­லும் மார்­வா­டி­கள் கவ­னத்­து­டன் இருப்­பார்­கள்.

அது­மட்­டு­மல்ல, பிசி­னஸ் பேச்­சு­வார்த்­தை­க­ளில் மார்­வா­டி­கள் கைதேர்ந்­த­வர்­கள். தங்­க­ளு­டைய இந்­தத் திற­மை­யின் மூலம் பிசி­னஸ் டீல்­களை தங்­க­ளுக்கு சாத­க­மாக்­கிக் கொள்­வார்­கள். அதே­போல கணக்­குப்­போட்டு ரிஸ்க் எடுக்­க­வும் இவர்­கள் தயங்க மாட்­டார்­கள்.

மார்­வா­டி­கள் பிசி­ன­சில் கோலோச்­சு­வ­தன் இன்­ன­பிற ரக­சி­யங்­களை அறி­வோம்.

மார்­வா­டி­கள் எத்­த­னையோ தொழில்­கள் செய்­தா­லும்,அதில் மிக­வும் குறிப்­பிட்­டுச் சொல்­லக் கூடி­யவை அடகு பிடிப்­பது மற்­றும் நகைக் கடைத் தொழில்­கள்­தான். நாடு முழுக்க இவர்­கள்  இந்­தத் தொழிலை செய்­து­வ­ரு­கி­றார்­கள்

இவர்­க­ளின் பூர்­வீ­கம் ராஜஸ்­தான். பாலை­வன பூமி. இங்கே வெயில் காலத்­தில் வெயில் ஐம்­பது டிகி­ரி­வரை செல்­லும். குளிர்­கா­லத்­தில் கடுங்­கு­ளிர் வாட்­டும். குடி­நீர்ப் பற்­றாக்­கு­றை­யும் அந்­தப் பகு­தி­க­ளில் கடு­மை­யாக இருக்­கும். இப்­ப­டிப்­பட்ட மண்­ணின் மைந்­தர்­க­ளாக இவர்­கள் இருப்­ப­தாலோ என்­னவோ, இந்­தி­யா­வின் எந்த ஒரு மூலைக்­கும் இடம் பெயர்ந்து அங்கு  தொழில் செய்து வாழ்­வ­து­என்­பது இவர்­க­ளுக்கு மிக­வும் இல­கு­வாக இருக்­கி­றது.எந்த ஒரு கால­நி­லை­யை­யும் சமா­ளித்து வாழ்­கின்ற சாமர்த்­தி­யம் இவர்­கள் மர­ப­ணுக்­க­ளி­லேயே இருப்­ப­தால், வாழு­மி­டம் இவர்­க­ளுக்­குப் பெரிய விஷ­ய­மல்ல.

அதே­போல,எங்கு தொழில் செய்­யச் செல்­கி­றார்­களோ அந்த இடத்து மொழியை சீக்­கி­ரம் கற்­றுக்­கொண்டு விடு­வார்­கள். அந்­தப் பகுதி மக்­க­ளின் வாழ்­வி­யல் அந்­தந்த கலாச்­சா­ரங்­க­ளைப் புரிந்து கொண்டு அதற்­கேற்ப தங்­கள் பிசி­னசை செய்ய ஆரம்­பிப்­பார்­கள். பெரும்­பா­லும் இவர்­கள் கூட்­டுக்­கு­டும்­ப­மாக இருப்­பார்­கள். எனவே,ஒரு­வ­ரது  பிசி­ன­ஸ­சுக்கு மற்­ற­வர் துணை நிற்­பது இவர்­க­ளுக்­குள் இயல்­பான விஷ­யம்..

அதே­போல அண்­ணன்,தம்பி ஒற்­றுமை இவர்­க­ளது மிகப் பெரிய பலம். ஒரு பிசி­னசை எந்த வித ஈகோ­வும் இல்­லா­மல்,அண்­ணன் தம்­பி­கள் சேர்ந்து நடத்­து­வதை இவர்­க­ளி­டம் நிறை­யப் பார்க்க முடி­யும்.

பெரி­ய­வர்­க­ளின் வார்த்­தை­களை கேட்­கும் பழக்­கம் இவர்­க­ளி­டம் அதி­கம். பிசி­ன­சில் பழம் தின்று கொட்டை போட்ட அப்பா மற்­றும் தாத்­தா­வின் வார்த்­தை­களை இவர்­கள் பெரி­தும் மதிப்­பார்­கள். அதே­ச­ம­யத்­தில் பிசி­ன­சில் புதுப்­புது மாற்­றங்­க­ளைப் புகுத்­து­வ­தி­லும் இவர்­கள் தவ­று­வ­தில்லை.

’தரம்’ என்­கிற விஷ­யத்க்­தில் இவர்­கள் ஒரு­போ­தும் சம­ர­சம் செய்­து­கொள்­வ­தில்லை. தரம் சரி­யாக இருக்­கும்­போ­து­தான் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்­பது இவர்­க­ளது தாரக மந்­தி­ரம்.

ஐம்­பது ரூபாய் பிசி­னஸ் என்­றா­லும் சரி, ஐந்­து­லட்ச ரூபாய் பிசி­ன­சாக இருந்­தா­லும்­சரி, இவர்­க­ளது அர்ப்­ப­ணிப்பு உணர்வு ஒரே மாதி­ரி­யாக இருக்­கும்.

அதே­போல, நேரம் தவ­றாமை இவர்­க­ளது மிக முக்­கி­யக் கோட்­பாடு. இத்­தனை மணிக்கு கடை திறக்க வேண்­டு­மென்­றால், அத்­தனை மணிக்கு டானென்று திறந்து விடு­வார்­கள். இத்­தனை மணிக்கு டெலி­வரி செய்­கி­றோம் என்று வாக்­குக் கொடுத்­தால், அந்த நேரத்­துக்கு சரி­யா­கக் கொடுத்­தி­டு­வார்­கள்.

வாடிக்­கை­யா­ளர்­களை கையாள்­வ­தில் இவர்­கள் மிக கவ­ன­மாக இருப்­பார்­கள். குறிப்­பாக அவர்­களை மரி­யா­தை­யாக நடத்­து­வார்­கள்.ஒரு நகையை வாங்­கு­வ­தற்­காக அவர்­கள் இவர்­கள் கடைக்கு வந்­து­விட்டு,எது­வும் வாங்­கா­மல் போனால், இவர்­கள் ஒரு­போ­தும் கோபப்­ப­ட­மாட்­டார்­கள். என்ன கார­ணங்­க­ளால் நகை வாங்க வந்­த­வர்­களை தங்­க­ளால் தக்க வைக்க முடி­ய­வில்லை என்­பதை யோசித்து அதற்­கேற்ப செயல்­ப­டு­வார்­கள். மார்­வா­டி­கள், வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் கறா­ராக நடந்­து­கொள்­வ­தில்லை. எடுத்­துக்­காட்­டாக, தங்­க­ளி­டம் நகை­களை அடகு வைப்­ப­தற்­காக நிறை­யப் பேர் வரு­வார்­கள். அப்­படி வரு­ப­வர்­க­ளில் பலர், அவர்­க­ளது பிள்­ளை­க­ளின் படிப்­புச் செல­வுக்­காக பணம் கேட்டு வரு­வார்­கள். அத­னால்,அவர்­கள் அடகு வைக்­கும் பொரு­ளின் மதிப்­புக்கு சற்று அதி­க­மா­கவே பணம் வேண்­டும் என்று எதிர்­பார்ப்­பார்­கள்.

அது­போன்ற சூழ்­நி­லை­க­ளில் இவா­கள் விடாப்­பி­டி­யாக நிற்க மாட்­டார்­கள். இவர்­க­ளும் கொஞ்­சம் இறங்கி வந்து,அவர்­க­ளின் எதிர்­பார்ப்­பைப் பூர்த்தி செய்­வார்­கள் .இது­போன்ற தங்­க­ளின் விட்­டுக்­கொ­டுத்­தல்­க­ளால் வாடிக்­கை­யா­ளர்­க­ளைத் தக்க வைக்க கொள்­கி­றார்­கள்.