குண்டாக இருப்பது எங்கள் குடும்ப சொத்து என்கிறார் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ ஹீரோயின் அஸ்வினி.
அவருடைய பேட்டி:-
“எங்க குடும்பத்திலே தலைமுறை தலைமுறையா குண்டாகத்தான் இருந்துக்கிட்டு வர்றோம். அதே சமயத்திலே நல்ல உயரமாகவும் இருப்போம். இஷ்டத்துக்கு சாப்பிட்டு இப்படி குண்டாகலே. குண்டா இருக்கிறது எங்க குடும்ப சொத்து. எங்க ஜீன்ஸ் அப்படி! குண்டா இருக்கிறதால ஸ்கூல், காலேஜிலே படிக்கும்போது அவங்கவங்க விருப்பத்துக்கு தகுந்தாப்பிலே என்னை வெவ்வேறு ‘பட்ட’ பேர்கள்ல கிண்டல் பண்ணி கூப்பிடுவாங்க. அந்த சமயத்திலே நான் ரொம்பவே வருத்தப்பட்டிருக்கேன். அப்புறம் போகப்போக, அப்படிப்பட்ட கிண்டல்களை சீரியசா எடுத்துக்கக்கூடாது அப்படீங்கிற மனப்பக்குவத்துக்கு வந்துட்டேன்.
நான் நடிக்கிற சீரியல்ல இருக்கிற மாதிரியே எனக்கும் கல்யாணம் நடக்குமான்னு எங்க வீட்ல கவலைப்பட்டாங்க. ஆனா, கடவுள் அருளால, எனக்கு கல்யாணமாயிடுச்சு. காதல் கல்யாணம். நானும் என் கணவரும் பெங்களூருவில ஒரு சாப்ட்வேர் கம்பெனியிலே ஒண்ணா வேலை பார்த்தோம். அப்போ, எங்களுக்குள்ளே காதல் உண்டாயிடுச்சு. சீரியல்ல என்னோட உருவ அமைப்பை வச்சு என்னை வச்சு காமெடி பண்ணிடுவாங்களோன்னு எங்க வீட்ல முதல்ல பயந்தாங்க. ஆனா, அப்படி பயந்த அளவுக்கு எதுவும் நடக்கலே. கண்ணியமாகவே போய்க்கிட்டு இருக்கு.
‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’யிலே நான் நடிக்கிறது முழுக்க முழுக்க ஆக்சிடண்ட். ஒரு கன்னட டிவியிலே ஒளிபரப்பான ஒரு ரியாலிட்டி ஷோவிலே எங்க குடும்பமே கலந்துக்கிடுச்சு. அந்த ஷோவை பார்த்துட்டுத்தான் இந்த சீரியல்ல நடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்துச்சு. குண்டா இருக்கிற ஒரு பொண்ணுக்காக ஹீரோயின் கேரக்டருக்காக பயங்கரமா தேடியிருக்காங்க. அப்படிப்பட்ட சமயத்திலே என்னை இந்த ஷோவிலே பார்த்ததும் நான் ரொம்ப பொருத்தமா இருப்பேன்னு முடிவு பண்ணி என்னை அப்ரோச் பண்ணாங்க. எனக்கு நடிப்பு அனுபவமே கொஞ்சம் கூட இல்லையேன்னு சொன்னேன். நடிக்கிறதுக்கு உங்க சம்மதத்தை மட்டும் சொல்லுங்க, மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்னு தைரியம் கொடுத்தாங்க. அவங்க இப்படி சொன்னதும், எனக்கு ஒண்ணும் புரியலே. சரி, ஒரு நல்ல சான்ஸ் வருது, அதை இழப்பானேன்னு தைரியமா ஒத்துக்கிட்டேன். நாமளா நடிகையாயிட்டோம்னு என்னாலேயே நம்பமுடியலே. அப்புறம், நாம அநியாயத்துக்கு இவ்வளவு குண்டா இருக்கோமேன்னு நினைச்சு பார்த்திருக்கேன். ஆனா, என்னோட உருவ அமைப்பினாலதான் சீரியல் வாய்ப்பே கிடைச்சிருக்கு. அதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிட்டேன்.
எனக்கு பெங்களூரு பூர்வீகம். அங்கே பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். சில சீரியல், சினிமா வாய்ப்புகள் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. எனக்கு பொருத்தமா இருந்தா, நடிப்பேன்.”