ஒரு சினிமா விமர்சன நிகழ்ச்சியாக இல்லாமல், கேஷுவலான கலந்துரையாடலாக திரைப்படங்களை பற்றி பேசுவதே ‘சினிமா கேம்பஸ்’. கலைஞர் செய்திகள் டிவியில் சனிதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. பார்வதி தொகுத்து வழங்குகிறார்.
திரைப்பட பாராட்டு மற்றும் ஒவ்வொரு படத்தையும் பற்றிய முழுமையான உரையாடலே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நல்ல சினிமா எந்த மொழியில் வந்தாலும் அது இந்த கேம்பஸை அலங்கரிக்கும். இது இன்னும் சிறப்பாக வரவேண்டும் என்பதால், வெவ்வேறு தளங்களில் இயங்கி வரும் சினிமா விமர்சகர்கள், ஆர்வலர்கள், சினிமாவில் பணியாற்றும் நபர்களை அழைத்து வந்து பேசவைத்து, 20 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.