7ஆம் ஆண்டில்...!

பதிவு செய்த நாள் : 02 அக்டோபர் 2019

பொழு­து­போக்கு, ஆன்­மி­கம், ஆரோக்­கி­யம் மற்­றும் உணவு சார்ந்த பல்­வேறு நிகழ்ச்­சி­களை சுவா­ரஸ்­ய­மாக வழங்கி புது யுகம் டிவி தனது ஏழா­வது ஆண்­டில் அடி­யெ­டுத்து வைக்­கி­றது.

காலை வேளை பக்­தி­யு­டன் தொடங்க ‘ஆல­யங்­கள் அற்­பு­தங்­கள்,’ பிர­பல ஜோதி­டர்­கள் நேர­லை­யில் பங்­கேற்­கும் ‘நேரம் நல்ல நேரம்,’ நேயர்­க­ளின் வர­வேற்பை பெற்ற ‘ருசிக்­க­லாம் வாங்க,’ ‘அழைக்­க­லாம் சமைக்­க­லாம்,’ ‘நட்­சத்­திர ஜன்­னல்,’ ‘படித்­த­தும் ரசித்­த­தும்’ உட்­பட பல நிகழ்ச்­சி­களை ஒளி­ப­ரப்பி வரு­கி­றது. நாள்­தோ­றும் இரண்டு திரைப்­ப­டங்­களை ஒளி­ப­ரப்­பு­வ­தோடு திரை­யு­ல­கின் முக்­கிய நிகழ்­வு­க­ளை­யும் இதில் காண­லாம்.

வரும் இம்மாதம் 5ம் தேதி 7வது ஆண்­டில் அடி­யெ­டுத்து வைக்­கும் புது யுகத்­துக்கு தயா­ரிப்­பா­ளர்­கள் ஏவி.எம். சர­வ­ணன், அபி­ராமி ராம­நா­தன், டைரக்­டர்­கள் எஸ்.பி. முத்­து­ரா­மன், கே. பாக்­ய­ராஜ் உட்­பட சினிமா பிர­மு­கர்­கள் பல­ரும் வாழ்த்­துக்­களை தெரி­வித்­துள்­ள­னர்.