சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 412 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 02 அக்டோபர் 2019

நடி­கர்­கள் : அதர்வா, வேதிகா, தன்­ஷிகா, ஜெர்ரி, சிவ­சங்­கர், உதய் கார்த்­திக், ரித்­விகா, மற்­றும் பலர். இசை : ஜீ.வி. பிர­காஷ் குமார், ஒளிப்­ப­திவு : செழி­யன், எடிட்­டிங் : கிஷோர், திரைக்­கதை : பாலா, நாஞ்­சில் நாடன், தயா­ரிப்பு, இயக்­கம்:   பாலா.

சுதந்­தி­ரத்­திற்கு முந்­தைய பிரிட்­டிஷ் ஆட்­சிக்­கா­லத்­தில் மெட்­ராஸ் மாகா­ணத்­தின் கிரா­மம் ஒன்­றில் வசிக்­கும் ராசா (அதர்வா) வெகு­ளி­யான இளை­ஞன். சிறு வய­தில் பெற்­றோரை இழந்து பாட்­டி­யால் வளர்க்­கப்­ப­டும் ராசா கிரா­மத்து மனி­தர்­கள் அனை­வ­ரி­ட­மும் பாச­மாக பழ­கு­கி­றான். ராசாவை கேலி செய்து விளை­யா­டும் அதே ஊரைச் சேர்ந்த அங்­கம்மா (வேதிகா) அவனை விரும்­பு­கி­றாள். இரு­வ­ரும் நெருங்­கிப்­ப­ழக, ஊரார் முன்­னி­லை­யில் அங்­கம்­மா­வின் தாய் பொறுப்­பில்­லா­த­வ­னுக்கு பெண் கொடுக்க முடி­யாது என்று அறி­விக்­கி­றார்.

வேலை தேடி பக்­கத்து கிரா­மத்­துக்­குச் செல்­லும் ராசா தேயிலை தோட்­டத்து வேலைக்கு ஆள் எடுக்­கும் கங்­கா­ணியை (ஜெர்ரி) சந்­திக்­கி­றான். ராசா­வோடு அவ­னது ஊருக்கு வரும் கங்­காணி பிரிட்­டி­ஷா­ரின் தோட்­டங்­க­ளில் வேலை செய்­தால் தங்­கு­மி­ட­மும், நிறைய கூலி­யும் கிடைக்­கும் என்று கூறி ஆட்­களை சேர்க்­கி­றான். ஆத­ர­வற்ற தனது பாட்­டிக்கு பணம் அனுப்­ப­லாம் என்ற ஆசை­யில் ராசா­வும் ஒப்­பந்­தத்­தில் கைநாட்டு வைத்து, புதி­தாக திரு­ம­ண­மான தனது நண்பன் (உதய் கார்த்­திக்), அவ­னது மனைவி (ரித்­விகா) மற்­றும் பல­ரோடு சேர்ந்து ஊரை விட்டு கிளம்­பு­கி­றான். பாட்­டி­யும், அங்­கம்­மா­வும் வருத்­தத்­தோடு விடை­கொ­டுக்­கி­றார்­கள்.

தேயிலை தோட்­டங்­க­ளுக்கு வரும் பய­ணத்­தி­லேயே உடல்­ந­லம் கெட்டு சிலர் இறக்­கின்­ற­னர். பெரும் கன­வு­க­ளோடு வரும் மக்­க­ளுக்கு அது கங்­கா­ணி­யும் அவ­னது ஆட்­க­ளும் நடத்­தும் ஒரு கொடிய சிறை என்று புரி­கி­றது. தின­சரி கூலி அவர்­க­ளது உண­வுக்­கும், தங்­கு­மி­டத்­துக்­கும் செல்­கி­றது. உடன் பணி­பு­ரி­யும் மர­க­த­மும் (தன்­ஷிகா) அவ­ரது மக­ளும் ராசா­வுக்கு ஆத­ர­வ­ளிக்­கி­றார்­கள். அங்­கி­ருந்து தப்­பிய ஒரே மனி­த­னான மர­க­தத்­தின் கண­வ­னுக்­கும் சேர்த்து மர­க­தம் உழைக்­கி­றாள். ராசா­வுக்கு வரும் கடி­தத்­தின் மூலம் ராசா­வின் குழந்­தையை சுமப்­ப­தால் அங்­கம்­மா விரட்­டப்­பட்டு தற்­ச­ம­யம் பாட்­டி­யு­டன் இருப்­ப­தாக தெரிய வரு­கி­றது.

ஊர் திரும்­பும் நாளுக்­காக அனை­வ­ரும் காத்­தி­ருக்­கி­றார்­கள். விரை­வி­லேயே அவர்­களை கலங்க வைக்­கும் வகை­யில் வெவ்­வேறு கார­ணங்­களை கூறி அவர்­க­ளது ஒப்­பந்­தம் நீட்­டிக்­கப்­ப­டு­கி­றது. தாங்­கள் அடி­மை­க­ளாக்­கப் பட்­டி­ருப்­பதை உணர்ந்து விரக்­தி­ய­டை­கி­றார்­கள். உற­வு­களை பார்க்­கும் ஏக்­கத்­தில் ராசா தப்­பிக்க முயற்­சிக்­கி­றான். கடை­சி­ நே­ரத்­தில் பிடி­ப­டும் ராசா­வுக்கு தப்­பிக்க நினைத்த மற்­ற­வர்­க­ளைப் போலவே காலின் முக்­கிய நரம்பு வெட்­டப்­பட்டு முட­மாக்­கப்­ப­டு­கி­றான்.

போதிய மருத்­து­வ­ வ­சதி இல்­லா­ம­லும், தொற்று நோயி­னா­லும் நிறைய தொழி­லா­ளர்­கள் இறக்­கி­றார்­கள். தோட்­டத்தை பார்­வை­யி­டும் மேல­தி­கா­ரி­யின் உத்­த­ர­வால், மெட்­ரா­ஸி­லி­ருந்து தமிழ் மருத்­து­வ­ரும் (சிவ­சங்­கர்) அவ­ரது பிரிட்­டிஷ் மனை­வி­யும் சேவை புரிய வரு­கி­றார்­கள். நோயா­ளி­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிப்­பதை விட, பிர­சா­ரத்­தின் மூலம் மத­மாற்­றம் செய்­வ­தி­லேயே மும்­மு­ர­மாய் இருக்­கி­றார்­கள்.

ஒரு­ வ­ழி­யாய் ராசா­வின் ஒப்­பந்­தம் முடி­வுக்கு வர, அதை எண்ணி மகிழ முடி­யா­மல் உடல்­ந­லம் குன்­றி­யி­ருந்த மர­க­தம் இறந்து போகி­றாள். அனா­தை­யாய் நிற்­கும் அவ­ளது பெண் குழந்­தைக்கு ஆத­ர­வ­ளிக்க அக்­கு­ழந்­தை­யின் பெற்­றோ­ருக்கு பதி­லாக வேலையை தொடர வேண்­டிய கட்­டா­யம் ராசா­வுக்கு ஏற்­ப­டு­கி­றது. மலை­யுச்­சி­யில் அமர்ந்து தனது நிலையை எண்ணி புலம்பி அழும் ராசா புதி­தாக வரும் அடி­மைக்­கூட்­டத்தை பார்க்­கி­றான். அக்­கூட்­டத்­தில் இருக்­கும் அங்­கம்­மா­வும் அவ­னது மக­னும் அவ­னைத் தேடி­வர, ”நீங்­க­ளும் இந்த நர­கக் குழி­யில் வந்து விழுந்து விட்­டீர்­களே” என்று கூறி கதறி அழு­கி­றான். மலை­யெங்­கும் அவ­னது கத­றல் எதி­ரொ­லிக்க மனம் கனக்க படம் நிறை­வ­டை­கி­றது.