ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 2–10–19

பதிவு செய்த நாள் : 02 அக்டோபர் 2019

பாக்யராஜ் எழுதிய முதல் படம்!

(சென்ற வார தொடர்ச்சி...)

தன் முதல் பட­மான '16 வய­தி­னிலே'-வுக்கு பிறகு பார­தி­ராஜா தன் பரி­வா­ரங்­க­ளோடு அதே ஆண்டில் மீண்­டும் ஒரு சாதா­ரண கதை­யோடு 'கிழக்கே போகும் ரயி'லில் வந்­தார்.

“ஊரில் கவிதை எழு­தித் திரி­யும் ஒரு உருப்­ப­டாத வாலி­ப­னுக்­கும், கப­ட­மில்­லாத ஒரு பெண்­ணுக்­கும் காதல். காத­லுற்ற நாய­கன் நக­ரத்­திற்கு போய் பெரிய கவி­ஞ­னா­கத் திரும்பி வந்து நாய­கியை கைப்­பி­டிக்­கி­றான்.” இது­தான் கதை. புது­மு­கங்­க­ளான ராதி­கா­வும், சுதா­க­ரும் பார­தி­ரா­ஜா­வின் இயக்­கத்­தில் ஜீவ­னூட்­டி­னார்­கள். '16 வய­தி­னிலே' போலவே இந்த படத்­திற்­கும் மிக அரு­மை­யான பாடல்­க­ளைத் தந்­தி­ருந்­தார் இளை­ய­ராஜா.

இந்த படத்­தில் நடிப்­ப­தற்­காக வந்த ராதி­காவை பார்த்து “என்ன சார், இந்த மாதிரி ஒரு பொண்ணை செலக்ட் பண்­ணி­யி­ருக்­கீங்க!” என்று பார­தி­ரா­ஜா­வி­டம் உதவி இயக்­கு­ன­ரான பாக்­ய­ராஜ் சொல்­லி­யி­ருக்­கி­றார். கார­ணம், ராதிகா அணிந்து வந்­தி­ருந்த நாக­ரீ­க­மான உடை­யைப் பார்த்த அவ­ருக்கு கிரா­மத்து நாயகி வேடம் பொருந்­துமா என்று சந்­தே­கம். ஆனால் படத்­தில் ஒரு யதார்த்­த­மான கப­ட­மில்­லாத நாய­கிக்கு நன்­றா­கவே பொருந்­தி­யி­ருந்­தார்.

சுத்த சாவே­ரி­யில் அமைந்த “கோயில் மணி­யோசை” பாட­லின் அழ­கான வர்ண மெட்­டும், மலே­சியா வாசு­தே­வன், ஜான­கி­யின் குளிர்ச்­சி­யான குரல்­க­ளும், கண்­ண­தா­ச­னின் வரி­க­ளும் மன­திற்­குள் வந்­த­மர்ந்து போக மறுக்­கச் செய்­யும். கோயில் மணி­யோ­சையை காதல் சமிக்ஞை ஆக்­கி­ய­தும் இந்த பாட­லில்­தான்.

சுத்­த­தன்­யாசி ராகத்­தில் 'மாஞ்­சோலை கிளி­தானோ… மாந்­தானோ…' என்ற பாடலை பாட இளை­ய­ரா­ஜா­வின் தேர்வு மிகச் சரி­யான பொருத்­த­மாக இருக்­கும். பாட­லைப் பாடி­யது ஜெயச்­சந்­தி­ரன். இந்த பாட­லில் பர­த­நாட்­டி­யமே ஆடத்­தெ­ரி­யாத ராதி­காவை ஓர­ளவு நன்­றா­கவே படம்­பி­டித்­தி­ருப்­பார் பார­தி­ராஜா.

இந்­தப் படத்­தில் வானம்­பாடி கவி­ஞர் சிற்பி எழு­திய 'மலர்­களே… நாதஸ்­வ­ரங்­கள்…' என்ற ஒரு அரு­மை­யான பாடலை ஹம்­சத்­வனி ராகத்­தில் அமைத்­தி­ருந்­தார் இளை­ய­ராஜா. இசைத்­தட்­டில் வெற்­றி­பெற்ற அந்­தப் பாடல் ஏனோ படத்­தில் இடம்­பெ­ற­வில்லை. தோட்­டத்­திற்கு காவ­லுக்கு சென்ற நாய­க­னுக்கு பாட்­டெ­ழு­து­வ­தென்­றால் உயிர் என்று தெரிந்து கொண்ட திரு­டர்­கள் நாய­கனை பாடச் சொல்லி கதி­ரெல்­லாம் திரு­டிச் செல்­வது போல ஒரு காட்சி வரும். 'ஆடிப்­பாடி கதி­ர­றுப்­பான் ஆனந்­தத்­தோடு' என்ற பாடலை அமைத்­தி­ருப்­பார் இளை­ய­ராஜா. கேட்­டாலே போதும் கதி­ர­றுப்­ப­வர்­க­ளுக்கு அலுப்பே தட்­டாது. இளை­ய­ரா­ஜா­வின் இசை­யில் பாக்­ய­ராஜ் எழு­திய முதல் பாடல் இந்த 'ஆடிப்­பாடி கதி­ர­றுப்­பான் ஆனந்­தத்­தோடு' பாடல்.

ரயில் செல்­லும் ஓசையை அடித்­த­ள­மாக வைத்து 'பூவ­ர­சம்பூ பூத்­தாச்சு…' பாட­லில் ஒரு பெண்­ணின் எதிர்­பார்ப்­பை­யும், உற்­சா­கத்­தை­யும் இத­யத்­தின் சிற­க­டிப்­பை­யும் தன் இசை­யில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பார். ஜான­கி­யின் குர­லி­லும் இது பரி­பூ­ர­ண­மாக வெளிப்­பட்­டி­ருக்­கும். ஒரு உணர்ச்­சியை இசை­யில் படம்­பி­டித்­து­வி­டு­வ­தை­விட ஒரு இசை­ய­மைப்­பா­ள­ருக்கு வேறு என்ன வெற்றி வேண்­டும்?