மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘திருமால் பெருமை’ – 3

பதிவு செய்த நாள் : 01 அக்டோபர் 2019

‘மகாஞானியரான புலஸ்தியராலும் வசிஷ்டராலும் கூறப்பட்டவையெல்லாம் இப்போது நீர் கேட்ட கேள்விகளால் மீண்டும் என் நினைவுக்கு வந்தன. மைத்ரேயரே! பெரியோரின் அருள் பெற்றதால் சிறப்பான ஞானம் பெற்ற நான் யாவற்றையும் உமக்குக் கூறுகிறேன். நன்றாகக் கேளும்.

 புராணக் கருத்தின்படி பார்த்தால், உலகமானது விஷ்ணுவினாலேயே உண்டாக்கப்பட்டு, அவரிடத்திலேதான் இருக்கிறது. தொடர்புக்கும் முடிவுக்கும் அவரேதான் கர்த்தாவாகும். இந்த உலகங்கள் எல்லாம் அவராலேயே வியாபிக்கப்பட்டு, அவருடைய சொரூபமாகவே இருக்கின்றன. அவரேதான் உலகம்!’  இவ்வாறு மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி சுருக்கமாகப் பதில் சொன்னார். மைத்ரேயருக்கு பராசர முனிவர் புராணம் சொல்லத் துவங்கி, அதன் முக்கிய விஷயமான விஷ்ணுவை பலவகையாக துதிக்கலானார்.  விகாரமற்றவனாய், தூய்மையானவனாய், நித்தியனாய், பரமாத்மாவாய், எப்போதும் மாறாத  இயல்புடைய திவ்விய மங்கல விக்கிரகமுடையவனாய், சகலமும் ஸ்வாதீனமாய் இருக்கும்படியான ஜயசாலியான மகாவிஷ்ணுவுக்கு என் வணக்கம் உரித்தாகுக! படைக்கும்போது ஹிரண்ய கர்ப்பரூபியாகவும், காக்கும்போது ஹரிரூபியாகவும், சங்கரிக்கிற போது சங்கரரூபியாகவும் இருந்து வழிபடுவோருக்கு விடுதலையளிப்பவருமான  வாசுதேவருக்கு என் வணக்கம் உரித்தாகுக! ஒன்றாயும் பலவுமான சொரூபமுள்ளவராயும், அவ்யதமுமான ரூபத்தையும் காரியாவஸ்தையிலே அனேகமாய் ஸ்தூலமாய், வியக்தமுமான ரூபத்தையும் உடையவராகி, அனாதியான பிரகிருதிவாசனையாலே, கட்டுப்பட்ட சேதங்களுக்கெல்லாம் மோட்ச காரணமான விஷ்ணுவுக்கு என் வணக்கம் உரித்தாகுக. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு மூலமாய், நிமேஷொன மேஷ சூரிய கமனாதி சகல பதார்த்த ஸ்வரூபமான காலத்தையே தனது சரீரமாக உடையவராயும், அந்த காலத்துட்படாத மேன்மையான சொரூபமுடையவராயும், சர்வ வியாபகருமானவருக்கு  என் வணக்கம் உரித்தாகுக. பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஆதாரமாய், ஆதிசூட்சமத்துக்கும் சூட்சமான ரூபமாய், எல்லாவற்றினுள்ளும் அந்தரியாமியாய் பிரகிருதி சமந்தத்தினாலே குற்றமடையாமல் என்று உண்மையான ஞானத்துகுரியவராய், கல்யாண குணங்களால் ‘புருஷோத்தமர்’ என்று வழங்கப்படுபவருமான  எம்பெருமானை சேவித்தேன். தெண்டனிட்டேன். அதன் பிறகு இதனைச் சொல்லுகிறேன்.

பரமார்த்தமாக விசாரிக்குமிடத்தில் சுத்த ஞானசொரூபமாய், அஞ்ஞானம், துக்கம் ஆகியவை இல்லாத அத்தியந்த நிர்மலராய், அனாதிப் பிரகிருதி வாசனையினால் உண்டான பிரமிப்பு. அதனால் தேக இந்திரியாதிகளை ஆன்மாவாக நினைப்போருக்கு தேவ மனுஷ்யாதி ரூபமாகத் தோன்றுபவராய், சேதனங்களிலெல்லாம் வியாபித்து, ஜகங்களைக் கிரகித்து தனது சங்கல்ப மாத்திரத்தாலேயே, சிருஷ்டி, ஸ்திதி, சமஹாரங்களைச் செய்து கொண்டு, தன் திருவுளத்தாலல்லாது கருமவசத்தினாலே பிறப்பு, இறப்பில்லாதவருமான  விஷ்ணு பகவானை தட்சப் பிரஜாபதி முதலிய முனிவர்கள் சேவித்து வணங்குகிறார்கள். பிறகு அவர்கள், உலகத்துக் கெல்லாம் படைப்புக் கர்த்தராயும், எம்பெருமானின் நாபிக்கமலத்தில் உதித்தவராயும், யாவற்றின் உற்பத்தி நாசம் முதலியவற்றை அறிந்த உலகத் தந்தையாகவும் விளங்கும் பிரம்மாவினிடத்திலே கேட்க, அவர் அருளியதைச் சொல்கிறேன்.  பிரம்மதேவன் அருளியதை கேட்டறிந்தவர்களான தட்சர் முதலிய முனிவர்கள் உள்ளத் தூய்மையுடன் நர்மதை நதிக்கரையில் ஆட்சி புரிந்து வந்த புருகுத்சன் என்ற மன்னனுக்கு, தாம் பிரம்மனிடம் கேட்டவற்றைக் கூறினார்கள். அதை அந்த மன்னன் சாரஸ்பதன் என்ற முனிவருக்கு உபதேசித்தான். அந்த மாமுனிவரின் திருவருளால், நான் அவற்றை அறிந்தேன். இவ்விதமாக, ஆசாரிய பரம்பரைரீதியில் நான் அறிந்த இந்த மகாபுராணத்தை விளக்கமாக உமக்குச் சொல்கிறேன்.

மைத்ரேயரே! சொரூப குணங்களில் மேம்பட்ட லோகாதிபதிகளுக்குள்ளே உயர்ந்தவர்களான பிரம்மாதிகளில் உயர்ந்தவரும், தன்னைவிட உயர்ந்தோரில்லாதவருமாய்ப் பரமாத்மாவாய், சேதனா, சேதனங்களுக்கெல்லாம் தானே ஆதாரமாய், தனக்கு வேறெதுவும் ஆதாரமில்லாதவராய், தன்னிடத்திலே தானிருப்பவராய், தேவ மனுஷ்யாதி ஜாதிகளையும்  கருப்பு, வெளுப்பு முதலிய வர்ணங்களையும், கிரியைகளையும், திரவியங்களையும் சொல்கின்ற விசேஷணங்கள் இல்லாதவராய் குறைதல், விநாசம், திரிதல், வளர்தல், பிறப்பு என்ற விவகாரங்களை விட்டுருக்கையால், சர்வகாலங்களிலும் அப்பிரமேயங்களான ஞானம், சக்தி, தேஜஸ், பலம் முதலிய சட்குண சொரூபத்தோடே இருப்பவர் என்று சொல்லக்கூடியவராய், சேதனா சேதனங்கள் யாவற்றிலும் மேலும், கீழும், உள்ளும், புறமும், பக்கமும் தான் வசித்துக்கொண்டு சேதனா சேதனங்களும் தன்னிடத்தில் வசிக்கத் தக்கதாகிய, சர்வலோக வியாபகமான சொரூபமுடையவராய், ஒன்றிலும் ஒட்டாமல் எல்லாமே தன்னால் என்று வேதாந்த அறிஞர்கள் கொண்டாடும்படியிருக்கிறார். சொரூபத்திலும், குணத்திலும் பெருமையுடையவர். ஆகையால் பிரமம், பரமன் என்றும் சொல்லப்பட்டு நித்தியனும்,  ஜனன ரசிகனும், அட்சரனும் எப்பொழுதும் ஒரேவிதமான சொரூபனுமாய், துக்கம் அஞ்ஞானம் முதலிய ஈரன் குணங்களற்றவராகையினாலே, நிர்மலராய், தோன்றுவதும், தோன்றாததுமான சகல லோகங்களையும் சரீரமாகக் கொண்டவராய், புருஷ ரூபமாயும் கால ரூபராயும் இருக்கிற பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் பகவான் ஒருவர் உண்டல்லவா? அந்தப் பிரமத்துக்குச் சாதனமான சேத்ரக்கியன் முக்கிய சரீரம்.  அறிஞர்கள் பிரதானம், புருஷம், வியக்தம், காலம் ஆகியவையே விஷ்ணுவின் தூய்மையும் மிகவுயர்வுடை யதுமான நிலை என்று கருதுகின்றனர்.

இந்த நான்கு நிலைகளும் தக்க அளவுகளின் அமைப்புகளாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்விக்கின்றன. மூலப் பிரகிருதியும், சீவனும், தேவமனுஷ்யாதி வியக்தங்களும் காலமும் வகுத்தபடியே அந்தப் பரமாத்மாவின் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களி னுடைய தோற்றத்திற்கும் விளக்கத்திற்கும் சாதனமான ரூபங்களாக இருக்கும். அது எப்படியெனில் வியக்தமான சராசரங்களும் அவ்வியக்தமான பிரகிருதியும், சேதனமான சேத்ரக்கியனும், களாகாஷ்டபதி ரூபமான காலமும் விஷ்ணுவினாலேயே தாங்கப்பட்டும் ஆளப்பட்டும் இருப்பதால், அவருக்கே சொரூபமாக இருக்கும்.  சகல இஷ்டங்களும் நிறைந்துள்ள அவருக்கு சிருஷ்டி முதலியவற்றை ஏன் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பீராயின்...?