நல்லதை மட்டும் ஏற்போம்!

பதிவு செய்த நாள் : 01 அக்டோபர் 2019

சிலர் விதண்டாவாதமாக குதர்க்கம் பேசுவார்கள்.

மது குடிப்பவனிடம், ‘’இது உடலுக்கு தீங்கானது எனத் தெரிந்தும் ஏன் குடிக்கிறாய்?” என்றால், “அப்படியானால் கடவுள் இதை ஏன் படைக்க வேண்டும்?’’என்பான்.

‘’சரி... கடவுள் பாவச்செயல் செய்யாதே என கூறியுள்ளாரே... ஏன் செய்கிறாய்?’’ என்றால் “அது வந்து....” என பதில் சொல்ல முடியாமல் இழுப்பான்.

அதாவது, உலகில் நல்லதும் கெட்டதும் உள்ளன. வானம், பூமி, மரங்கள், செடிகள் என நல்லதை எல்லாம் கடவுள் படைத்தார். மது, சிகரெட், போதை பொருட்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. கடவுளை மதிக்காத காரணத்தால் முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் நிர்வாண நிலையை அடைந்தனர். எனவே, கடவுளால் விலக்கப்பட்ட பொருட்களை மனதால் கூட நினைப்பது கூடாது.

அவர் கொடுத்த நல்லதை ஏற்றுக் கொண்டு, மனிதர்கள் உருவாக்கிய கெட்டதை எல்லாம் விலக்க வேண்டும். கெட்டதைப் பயன்படுத்தினால் விரைவில் மரணம் ஏற்படும்.

‘பாவத்தின் சம்பளம் மரணம்’.

ஆம்... தான் செய்வது எல்லாம் நியாயம் என நினைத்து பாவம் செய்கிறவர்கள் முடிவில் மரணத்தைச் சந்திப்பர்.