ஏற்றுமதி உலகம் : இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் தேக்கம்

பதிவு செய்த நாள் : 30 செப்டம்பர் 2019

அமெ­ரிக்கா ஈரான் மீது விதித்த பொரு­ளா­தா­ரத் தடை­யால்  ஈரா­னுக்கு இந்­தி­யா­வின் அரிசி ஏற்­று­மதி பெரிய அள­வில் தடை ஏற்­பட்­டுள்­ளது.  இந்த தடை­யி­னால் இந்­தியா கல்ப் நாடு­களை பெரு­ம­ள­வில் நம்பி இருந்­தது அரிசி ஏற்­று­ம­திக்கு.

 தற்­போது சவுதி அரே­பியா நாடு இந்­திய அரசு ஏற்­று­ம­திக்கு ஒரு புதிய கட்­டுப்­பாடு விதித்­துள்­ளது.  அதா­வது செப்­டம்­பர் 1-ஆம் தேதிக்­குப் பிறகு அனுப்­பப்­ப­டும் அரிசி ஏற்­று­மதி சர்­டி­பி­கேட் ஆப் கன்­பர்­மிட்டி (Certificate Of Conformity) சேர்த்து தான் அனுப்­ப­ட­வேண்­டும்  என்று கட்­டா­யப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதா­வது ஏற்­று­மதி செய்­யப்­பட்ட அரிசி எந்த நிலத்­தி­லி­ருந்து விளை­விக்­கப்­பட்­டது என்று. ஒரு சலுகை என்­ன­வென்­றால் இப்­போ­தி­லி­ருந்து டிசம்­பர் 31 வரை அனுப்­பப்­ப­டும் அரிசி ஏற்­று­ம­திக்கு டிசம்­பர் 31க்குள் இந்த சர்ட்­டி­பி­கேட்டை கொடுத்­தால் போதும் என்று கூறி­யுள்­ளது.

 இதி­லி­ருந்து என்ன தெரி­கி­றது? ஜன­வரி1க்கு  அப்­பு­றம் சவுதி அரே­பி­யா­விற்கு அனுப்­பப்­ப­டும் அரசி ஏற்­று­ம­தி­கள் குறை­யும் வாய்ப்­பு­கள் அதி­க­மாக இருக்­கின்­றன.

 இது­போல சர்­டி­பி­கேட் ஆப் கன்­பர்­மிட்டி வாங்கி அனுப்­பு­வ­தில் பல சிர­மங்­கள் இருக்­கின்­றன. இந்­தி­யா­வில்  விவ­சா­யி­கள்  அரை ஏக்­கர் அல்­லது ஒரு ஏக்­கர் என்ற அள­வில் தான் நிலங்­களை வைத்­துள்­ளார்­கள். இவர்­க­ளி­ட­மி­ருந்து அரி­சியை வாங்கி ஏற்­று­மதி செய்­யும்­போது, ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் சென்று இது­போல சர்­டி­பி­கேட்­டு­களை வாங்­கு­வது மிக­வும் கடி­ன­மான செயல். ஆகவே இதை கைவிட வேண்­டு­மென ஏற்­று­ம­தி­யா­ளர் சங்­கம் சவுதி அரே­பியா அரசை கேட்­டுக் கொண்­டுள்­ளது.

இந்­தி­யா­வின் விவ­சாய விளை­பொ­ருள் ஏற்­று­மதி 2022 ஆம் வரு­டம் 60 பில்­லி­யன் டால­ராக உய­ரும் வாய்ப்­பு­கள்

இந்­தி­யா­வின் விவ­சாய விளை­பொ­ருட்­களை ஏற்­று­ம­தியை கவுன்­சி­லர்­களை நிய­மித்­துள்­ளது 60 பில்­லி­யன் டால­ராக 2022ஆம் கூட்­டு­வ­தற்கு இந்­தியா பத்து நாடு­க­ளில்  கவுன்­சி­லர்­களை நிய­மித்­துள்­ளது.

 இந்த நாடு­க­ளில் அமெ­ரிக்­கா­வும் சீனா­வும், அடங்­கும். இந்த பத்து நாடு­கள் எப்­படி தேர்வு செய்­யப்­பட்­டந என்­றால், தற்­போது இந்­தி­யா­வில் இருந்து அதிக அள­வில் விவ­சாய விளை­பொ­ருட்­களை  மொத்­தம் 37 வகை­கள்­இ­ருக்­கின்­றன இந்த 37 வகை­கள் இருக்­கின்­றன. அந்த வகை­க­ளில் சிறப்­பாக இறக்­கு­மதி செய்­யும் முதல் 10 நாடு­களை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.  உதா­ர­ண­மாக வியட்­நாம் நாடு  இந்­தி­யா­வில் இருந்து அதிக அளவு எருமை மாமி­சத்தை இறக்­கு­மதி செய்­கி­றது.  இது­போல ஐக்­கிய அரபு நாடு­கள் இந்த 37 வகை­யி­லி­ருந்து, 10 வகை­க­ளில் அதி­க­ளவு விவ­சாய விளை பொருட்­களை இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­கி­றது.  இதை வைத்து இந்த 10 நாடு­கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அவை அமெ­ரிக்கா, சவுதி அரே­பியா, மலே­சியா, ஜப்­பான்,  ஐக்­கிய அரபு நாடு­கள்,  வியட்­நாம்,  மலே­சியா, ஈரான், சவுதி அரே­பியா, நேபாள் ஆகி­யவை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 10 நாடு­கள் ஆகும்.

ஏற்­று­ம­தி­யில் சந்­தே­கமா?

கேள்வி : எங்­க­ளூர் பக்­கம் நெல்­லிக்­காய் அதி­கம் உற்­பத்­தி­யா­கி­றது. நெல்­லிக்­காய் ஏற்­று­ம­தி­யா­கி­றதா?

பதில் :  ஏற்­று­மதி வாய்ப்­புக்­களை விட உள்­நாட்டு வாய்ப்­புக்­கள் அதி­கம் இருக்­கி­றது. அதா­வது இந்­தி­யா­வில் ஆயுர்­வேத மருத்­து­வம் வளர்ந்து வரு­கி­றது. அதற்கு நெல்­லிக்­காய் அதி­கம் தேவைப்­ப­டு­கி­றது. குறிப்­பாக ஆயுர்­வேத மருத்­துக் கம்­பெ­னி­க­ளும் (டாபர், சராக், ஹிமா­லயா, ஹிமாமி போன்ற கம்­பெ­னி­கள்), கேர­ளா­வில் இருக்­கும் ஆயுர்­வேத மருத்­துக் கம்­பெ­னி­க­ளும் பெரு­ம­ள­வில் வாங்­கு­கின்­றன. தமிழ்­நாட்­டில் இருந்து அதி­கம் அளவு கேர­ளா­விற்கு நெல்­லிக்­காய் விற்­கப்­ப­டு­கி­றது.

கேள்வி : நான் ஸ்ரீலங்கா சென்­றி­ருந்­தேன். வெங்­கா­யத்­திற்கு ஆர்­டர் கிடைத்­துள்­ளது. ஒபன் அக்­க­வுண்­டில் அனுப்­பு­மாறு சொல்­கி­றார்­கள். பண்­ண­லாமா?

பதில் : ஓபன் அக்­க­வுண்ட் என்­பது உங்­க­ளுக்கு மிக­வும் தெரிந்­த­வ­ருக்கு நீங்­கள் செய்­யும் ஏற்­று­மதி ஆகும். அதா­வது, உங்­கள் உற­வி­ன­ருக்கு, நண்­ப­ருக்கு அல்­லது நீங்­கள் தொடர்ந்து ஏற்­று­மதி செய்து வரு­ப­வ­ருக்கு செய்­யும் ஏற்­று­மதி ஆகும். இதில் வங்கி மூல­மாக ஆவ­ணங்­களை அனுப்ப மாட்­டீர்­கள். ஆவ­ணங்­க­ளை­யும், சரக்­கு­க­ளை­யும் நேர­டி­யாக வாங்­கு­ப­வ­ருக்கே அனுப்பி, பின்­னர் அவரை பணம் அனுப்­பு­மாறு கூறும் முறை. இம்­மு­றை­யில் வெளி­நாட்­டில் இருப்­ப­வர் நம்ம தகுந்­த­வ­ராக இல்­லை­யெ­னில் பணம் வராத சூழ்­நிலை கூட ஏற்­ப­ட­லாம். சில சம­யங்­க­ளில் இ.சி.சி.ஜி. ஓபன் அக்­க­வுண்ட் ஏற்­று­ம­திக்கு கவர் கொடுக்­காது. அவர்­க­ளி­டம் தெரிந்து கொண்டு செய்­வது நல்­லது.

மேலும், வெங்­கா­யம் விலை தாறு­மா­றாக கூடி எல்­லோர் கண்­ணி­லும் கண்­ணீரை வர­வ­ழைக்­கி­றது. ஆகை­யால் வெங்­கா­யம் ஏற்­று­ம­தி­யில் சிறிது கவ­னம் தேவை.