அமெரிக்கா ஈரான் மீது விதித்த பொருளாதாரத் தடையால் ஈரானுக்கு இந்தியாவின் அரிசி ஏற்றுமதி பெரிய அளவில் தடை ஏற்பட்டுள்ளது. இந்த தடையினால் இந்தியா கல்ப் நாடுகளை பெருமளவில் நம்பி இருந்தது அரிசி ஏற்றுமதிக்கு.
தற்போது சவுதி அரேபியா நாடு இந்திய அரசு ஏற்றுமதிக்கு ஒரு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு அனுப்பப்படும் அரிசி ஏற்றுமதி சர்டிபிகேட் ஆப் கன்பர்மிட்டி (Certificate Of Conformity) சேர்த்து தான் அனுப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது. அதாவது ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசி எந்த நிலத்திலிருந்து விளைவிக்கப்பட்டது என்று. ஒரு சலுகை என்னவென்றால் இப்போதிலிருந்து டிசம்பர் 31 வரை அனுப்பப்படும் அரிசி ஏற்றுமதிக்கு டிசம்பர் 31க்குள் இந்த சர்ட்டிபிகேட்டை கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? ஜனவரி1க்கு அப்புறம் சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்படும் அரசி ஏற்றுமதிகள் குறையும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
இதுபோல சர்டிபிகேட் ஆப் கன்பர்மிட்டி வாங்கி அனுப்புவதில் பல சிரமங்கள் இருக்கின்றன. இந்தியாவில் விவசாயிகள் அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர் என்ற அளவில் தான் நிலங்களை வைத்துள்ளார்கள். இவர்களிடமிருந்து அரிசியை வாங்கி ஏற்றுமதி செய்யும்போது, ஒவ்வொருவரிடமும் சென்று இதுபோல சர்டிபிகேட்டுகளை வாங்குவது மிகவும் கடினமான செயல். ஆகவே இதை கைவிட வேண்டுமென ஏற்றுமதியாளர் சங்கம் சவுதி அரேபியா அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் விவசாய விளைபொருள் ஏற்றுமதி 2022 ஆம் வருடம் 60 பில்லியன் டாலராக உயரும் வாய்ப்புகள்
இந்தியாவின் விவசாய விளைபொருட்களை ஏற்றுமதியை கவுன்சிலர்களை நியமித்துள்ளது 60 பில்லியன் டாலராக 2022ஆம் கூட்டுவதற்கு இந்தியா பத்து நாடுகளில் கவுன்சிலர்களை நியமித்துள்ளது.
இந்த நாடுகளில் அமெரிக்காவும் சீனாவும், அடங்கும். இந்த பத்து நாடுகள் எப்படி தேர்வு செய்யப்பட்டந என்றால், தற்போது இந்தியாவில் இருந்து அதிக அளவில் விவசாய விளைபொருட்களை மொத்தம் 37 வகைகள்இருக்கின்றன இந்த 37 வகைகள் இருக்கின்றன. அந்த வகைகளில் சிறப்பாக இறக்குமதி செய்யும் முதல் 10 நாடுகளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக வியட்நாம் நாடு இந்தியாவில் இருந்து அதிக அளவு எருமை மாமிசத்தை இறக்குமதி செய்கிறது. இதுபோல ஐக்கிய அரபு நாடுகள் இந்த 37 வகையிலிருந்து, 10 வகைகளில் அதிகளவு விவசாய விளை பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதை வைத்து இந்த 10 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவை அமெரிக்கா, சவுதி அரேபியா, மலேசியா, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், வியட்நாம், மலேசியா, ஈரான், சவுதி அரேபியா, நேபாள் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நாடுகள் ஆகும்.
ஏற்றுமதியில் சந்தேகமா?
கேள்வி : எங்களூர் பக்கம் நெல்லிக்காய் அதிகம் உற்பத்தியாகிறது. நெல்லிக்காய் ஏற்றுமதியாகிறதா?
பதில் : ஏற்றுமதி வாய்ப்புக்களை விட உள்நாட்டு வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது. அதாவது இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவம் வளர்ந்து வருகிறது. அதற்கு நெல்லிக்காய் அதிகம் தேவைப்படுகிறது. குறிப்பாக ஆயுர்வேத மருத்துக் கம்பெனிகளும் (டாபர், சராக், ஹிமாலயா, ஹிமாமி போன்ற கம்பெனிகள்), கேரளாவில் இருக்கும் ஆயுர்வேத மருத்துக் கம்பெனிகளும் பெருமளவில் வாங்குகின்றன. தமிழ்நாட்டில் இருந்து அதிகம் அளவு கேரளாவிற்கு நெல்லிக்காய் விற்கப்படுகிறது.
கேள்வி : நான் ஸ்ரீலங்கா சென்றிருந்தேன். வெங்காயத்திற்கு ஆர்டர் கிடைத்துள்ளது. ஒபன் அக்கவுண்டில் அனுப்புமாறு சொல்கிறார்கள். பண்ணலாமா?
பதில் : ஓபன் அக்கவுண்ட் என்பது உங்களுக்கு மிகவும் தெரிந்தவருக்கு நீங்கள் செய்யும் ஏற்றுமதி ஆகும். அதாவது, உங்கள் உறவினருக்கு, நண்பருக்கு அல்லது நீங்கள் தொடர்ந்து ஏற்றுமதி செய்து வருபவருக்கு செய்யும் ஏற்றுமதி ஆகும். இதில் வங்கி மூலமாக ஆவணங்களை அனுப்ப மாட்டீர்கள். ஆவணங்களையும், சரக்குகளையும் நேரடியாக வாங்குபவருக்கே அனுப்பி, பின்னர் அவரை பணம் அனுப்புமாறு கூறும் முறை. இம்முறையில் வெளிநாட்டில் இருப்பவர் நம்ம தகுந்தவராக இல்லையெனில் பணம் வராத சூழ்நிலை கூட ஏற்படலாம். சில சமயங்களில் இ.சி.சி.ஜி. ஓபன் அக்கவுண்ட் ஏற்றுமதிக்கு கவர் கொடுக்காது. அவர்களிடம் தெரிந்து கொண்டு செய்வது நல்லது.
மேலும், வெங்காயம் விலை தாறுமாறாக கூடி எல்லோர் கண்ணிலும் கண்ணீரை வரவழைக்கிறது. ஆகையால் வெங்காயம் ஏற்றுமதியில் சிறிது கவனம் தேவை.