குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பதிவு செய்த நாள் : 29 செப்டம்பர் 2019 17:45

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக இன்று 29-9-2019 (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது.

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் அருள்தரும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பெருந்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நிகழாண்டு செப். 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக அக்டோபர் 8-ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். 

9-ஆம் தேதி காப்பு அவிழ்த்தலுடன் திருவிழா நிறைவு பெறும்.

இவ்விழாவில் 1,000-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு வேடங்கள் அணிந்து வீதிதோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பர்.

தசரா விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.