இன்று நவராத்திரி துவக்கம்; பிரதமர் மோடி, சோனியா காந்தி நவராத்திரி வாழ்த்து

பதிவு செய்த நாள் : 29 செப்டம்பர் 2019 15:51

புதுடில்லி,

இன்று நவராத்திரி விழா தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களுக்கு, நவராத்திரி மற்றும் துர்கா பூஜை தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை இன்று செப்டம்பர் 29ம் தேதி தொடங்கி  அக்டோபர் 7 அன்று நிறைவடையும். 

அடுத்துவரும் ஒன்பது நாட்களுக்கு இப்பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும். அக்டோபர் 8 அன்று தசரா கொண்டாடப்படும்.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியர்களுக்கு துர்கா பூஜை வாழ்த்துகள் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

இன்று தொடங்கப்பட்டுள்ள நவராத்திரி விழா முன்னிட்டு, ஒன்பது தினங்களுக்கும் ஒன்பதுவிதமான தோற்றங்களில் தோன்றும் அம்மன் தெய்வங்களை மக்கள் வணங்கி மகிழ்வர். இந்திய சமுதாயத்தில் இந்த வழிபாடு பெண்களுடன் தொடர்புடையது.

தற்போதைய சூழ்நிலைகளில் பெண்களின் மரியாதை மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க நாம் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. பெண்கள் இந்த ஒன்பது நாட்களுக்கும் விரதமிருந்து வழிபடுவதன்மூலம் எதிர்மறை சக்திகளைக் கட்டுப்படுத்துகின்றனர்.

தைரியம், வீரம், செழிப்பு, செழுமை மற்றும் வலிமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் தேவியின் ஒன்பது வடிவங்களையும் வழிபடுவதன்மூலம் பெண்கள் விரும்பும் சக்தியை பெறுவர். அனைவருக்கும் எனது நவராத்திரி மற்றும் துர்கா பூஜை வாழ்த்துக்கள்.

இவ்வாறு சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.