மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் எழுதும் வாலிப கவிஞர் வாலி – 10

பதிவு செய்த நாள் : 29 செப்டம்பர் 2019

வேலு­ம­ணி­யின் படத்­திற்கு வாலி பாட்­டெ­ழு­து­வது எம்.ஜி.ஆருக்­குத் தெரி­யாது. இரண்டு பாடல்­கள் ஒலிப்­ப­தி­வான பிற­கு­தான், வேலு­மணி ராமா­வ­ரம் தோட்­டத்­திற்­குச் சென்று பாட்­டுக்­களை எம்.ஜி.ஆருக்­குப் போட்­டுக் காண்­பித்­தார்.

 அன்று மாலையே பரங்­கி­ம­லை­யில் நடந்த ஒரு கூட்­டத்­தில் `என்­னு­டைய படங்­க­ளுக்கு, வாலி என்­னும் புதிய கவி­ஞர்­தான் பாட்­டுக்­கள் எழு­து­வார்’ என்று எம்.ஜி.ஆர்., அறி­வித்­தார்.

 அப்­போது எம்.ஜி.ஆருக்­கும், கண்­ண­தா­ச­னுக்­கும் நிறைய இடை­வெளி ஏற்­பட்­டி­ருந்­தது. அத­னால், தொழில்­ரீ­தி­யாக ஏற்­ப­டும் பாதிப்பை வாலி­யைக் கொண்டு சரி­செய்து கொள்­ள­லாம் என்று எம்.ஜி.ஆர்., எண்­ணி­னார். அவ­ரு­டைய எண்­ணத்­திற்­கேற்ப, வாலி­யின் வளர்ச்­சி­யும் அமைந்­தது.

‘பட­கோட்டி’ பாடல் பதி­வின் போது இன்­னொரு சம்­ப­வ­மும் நடந்­தது.  ‘பட­கோட்டி’ படத்­தில் மொத்­தம் ஏழு பாடல்­கள். வாலி ஆறு பாடல்­கள் எழு­திக்­கொ­டுத்­து­விட்­டார். வில்­லன் நம்­பி­யார் சரோ­ஜா­தே­வியை நினைத்­துப் பாடுற மாதிரி ஒரு பாட்டு வேணும்னு படத்­தோடு தயா­ரிப்­பா­ளர் ஆசைப்­பட்­டார். அப்­போது வாலிக்கு 104 டிகிரி ஜுரம். அவ­ரால் எழுந்­தி­ருக்­கக்­கூட முடி­யலை. அப்­போது தயா­ரிப்­பா­ளர் வேலு­மணி `வாலிக்கு உடம்பு சரி­யில்லே. இந்த பாட்டை வேற ஆளை வெச்சு எழு­திக்­க­லாம்’னு சொன்­னார். என் வீட்­டுக்­குத் தபேலா, ஹார்­மோ­னி­யம் மற்­றும் ஆர்­கெஸ்ட்­ரா­வு­டன் வந்­தார்.

 வாலி படுத்த படுக்­கை­யாய் இருந்­தார். தரை­யில் ஜமக்­கா­ளம் விரித்து விஸ்­வ­நா­தன் டியூன் போடு­வார். வாலி படுத்­துக் கொண்டே பல்­ல­விக்­கேற்ப பாட்­டுச் சொல்­வார்.  இப்­ப­டித்­தான் அந்­தப் பாடல் பதி­வா­னது.

வாலி­யின் வளர்ச்­சிக்­கெல்­லாம் அஸ்­தி­வா­ரம், விஸ்­வ­நா­தன். அவ­ரோடு இணைந்து வாலி சுமார் இரண்­டா­யி­ரம் பாடல்­க­ளுக்கு மேல் எழு­தி­யி­ருக்­கி­றார். வாலி­யின் எண்­ணற்ற பாடல்­க­ளுக்கு சாகா­வ­ரம் தந்த சரித்­திர புரு­ஷர், விஸ்­வ­நா­தன். அவ­ரு­டைய கூர்­மை­யான இசை அறி­வில், வாலி தன் தமிழை சாணை பிடித்­துக் கொண்­டார். வாலி­யும், கவி­ஞர் கண்­ண­தா­ச­னும் எழு­தித் தந்­தப் பாடல்­க­ளுக்கு விஸ்­வ­நா­தன் இசை­ய­மைத்­தார் என்­பது பாதி உண்­மை­தான்.  ஆனால் பெரும்­பா­லான இவர்­க­ளது பாடல்­கள் விஸ்­வ­நா­த­னு­டைய வர்ண மெட்­டுக்­கேற்ப வார்த்­தெ­டுக்­கப்­பட்­ட­வையே! மெட்­டுக்கு எழு­தப் பெற்ற பாடல்­கள் கூட, எழுதி மெட்­ட­மைக்­கப்­பட்­டது போல் கருத்­துச் செறி­வோடு விளங்­கும். அதற்­கான கால அவ­கா­சம் அப்­போது இருந்­தது என்­ப­தும் உண்மை.

 வாடி­கன் கிறிஸ்­தவ ஆல­யத்­தில் மைக்­கேல் ஏஞ்­ச­லோ­வின் வண்ண வண்ண ஓவி­யங்­கள் இன்­ன­மும் காலத்தை வென்று அந்த ஓவி­ய­ரின் மேன்­மையை பறை­சாற்­றிக்­கொண்­டி­ருக்­கி­றது. மைக்­கேல் ஏஞ்­சலோ ஒரு உன்­ன­த­மான சிற்­பி­யும் ஆவார். ` எப்­படி பாறை­க­ளி­லி­ருந்து இப்­படி சிற்­பங்­களை உண்­டாக்­கு­வது உங்­க­ளுக்கு சாத்­தி­ய­மாக இருக்­கி­றது?’ என்று மைக்­கேல் ஏஞ்­ச­லோ­வி­டம் ஒரு முறை கேட்­கப்­பட்­டது. அவர் சொன்­னார்.`பாறை­யி­லி­ருந்து நான் சிற்­பத்தை உண்­டாக்­கு­வ­தில்லை. சிற்­பம் ஏற்­க­னவே பாறை­யில் உருப்­பெற்­றி­ருக்­கி­றது. அதைச் சுற்­றி­யி­ருக்­கும் அனா­வ­சி­யக் கற்­க­ளைத்­தான் நான் உளி கொண்டு செதுக்­கித் தள்­ளு­கி­றேன்’ என்­றார். விஸ்­வ­நா­த­னும் இப்­ப­டித்­தான் சொல்­லு­வார். ஒரு பாட்டை எழுதி அவ­ரி­டம் நீட்­டி­னால், வெவ்­வேறு தாளங்­க­ளில் அழ­குற வர்ண மெட்­டுக்­களை அமைத்து அதி­ச­யிக்க வைப்­பார்.`எப்­படி, இவ்­வ­ளவு அழ­காக மெட்­ட­மைக்­கி­றீர்­கள்?’ என்று அவ­ரி­டம் கேட்­டால்,` நான் எங்கே மெட்­ட­மைத்­தேன்? பாட்­டுக்­குள்­ளேயே அதற்­கான மெட்டு ஒளிந்து கொண்­டி­ருக்­கி­றது. அதைத் தேடிக் கண்­டு­பி­டித்­தாலே போது­மா­னது. அந்­தப் பணி­யைத்­தான் நான் செய்­கி­றேன்’ என்­பார். அது போல, கவி­ஞர்­கள் மெட்­டுக்கு எழு­தும்­போது அதற்­கு­ரிய வார்த்­தை­களை – வார்த்­தை­க­ளென்­றால், வெறும் வார்த்­தைப் பந்­த­லல்ல – அர்த்­த­மும் ஆழ­மும் நிரம்­பிய அரு­மை­யான கவி­தையை கவி­ஞர் தர­வேண்­டு­மென்று விஸ்­வ­நா­தன் விரும்­பு­வார்.

 இந்­தப் பணி­யைச் செய்­கின்ற புல­வனை – தன் விரோ­தி­யாக இருந்­தா­லும், அவர் ஆரத் தழுவி வர­வேற்­பார். தகு­தி­யற்­ற­வரை, தன் உற­வி­ன­ரா­யி­ருப்­பி­னும் தூர ஒதுக்­கி­வி­டு­வார். அது­தான் விஸ்­வ­நா­தன். தகு­தியை மட்­டும் நிறுத்­துப் பார்க்­கும் துலாக்­கோல் போல் துலங்­கி­ய­வர் விஸ்­வ­நா­தன். நல்ல பாடலை நாம் எழுதி விட்­டால், அதைத் தன் தலை­யில் சுமந்து கொண்டு ஊர் ஊரா­கச் சென்று தண்­டோரா அடித்­துச் சொல்­லு­வார். ஒரு முறை பாடல் எழுத வாலி விஸ்­வ­நா­த­னோடு அமர்ந்­தி­ருந்­தார். `வாலி­யண்ணே,  நான் அசந்து போகிற மாதிரி நீங்க ஒரு பல்­லவி சொன்­னீங்­கன்னா, அந்த மூணை­யும் நீங்­கள் எடுத்­துக் கொள்­ள­லாம்’ என்­றார். ஆர்­மோ­னி­யப் பெட்­டி­யின் மீது தன்­னு­டைய எட்டு பவுன் கழுத்­துச் சங்­கி­லி­யை­யும், தங்­கச் செயின் கொண்ட ரோலக்ஸ் வாட்ச்­சை­யும், நான்கு பவுன் மதிப்­புள்ள மோதி­ரத்­தை­யும் எடுத்து வைத்­தார்.

 அது, கதா­நா­ய­கன் பாடும் ஒரு சாதா­ரண காதல் பாட்­டுக்­கான சூழல்­தான். இருந்­தா­லும் அதன் பல்­லவி, தன்னை அசத்­து­வ­தாக இருக்க வேண்­டும் என்று விஸ்­வ­நா­தன் வாலி­யி­டம் பந்­த­யம் கட்­டி­னார். வாலி தாம்­பூ­லம் தரித்­துக் கடை­வா­யில் புகை­யி­லை­யைத் திணித்­துக் கொண்டு, ஐந்து நிமிட சிந்­த­னைக்­குப் பிறகு, ஒரு பல்­ல­வியை எழுதி அவ­ரி­டம் நீட்­டி­னார்.

வாலி அதில் வெற்றி பெறு­கி­றாரா என்­னும் ஆர்­வத்­தில் பட இயக்­கு­நர் கே. சங்­கர், படா­தி­பதி ஜி.என்.வேலு­மணி, கதா­சி­ரி­யர் மா. லட்­சு­ம­ணன் ஆகி­யோர் ஒரு இறுக்­க­மான மவு­னத்­தோடு அமர்ந்­தி­ருந்­த­னர். வாலி கொடுத்த பல்­ல­வியை விஸ்­வ­நா­தன் வாங்­கிப் படித்­துப் பார்த்­தார். உடனே- ஆர்­மோ­னி­யப் பெட்­டி­யின் மீது வைத்­தி­ருந்த செயின், மோதி­ரம், வாட்ச் மூன்­றை­யும் எடுத்து வாலி­யி­டம் கொடுத்­தார்.  வாலி, உடனே அவை அனைத்­தை­யும் அவ­ரி­டம் திருப்­பித் தந்து, ` எனக்­குத் தேவை உங்க ஆசீர்­வா­தம் மட்­டுமே’ என்று அடக்­க­மா­கச் சொன்­னார்.

 வாலி எழு­திய பல்­லவி இது­தான்:

 ‘காற்று வாங்­கப் போனேன் – ஒரு

 கவிதை வாங்கி வந்­தேன் – அதைக்

 கேட்டு வாங்­கிப் போனாள் – அந்­தக்

 கன்னி என்ன வானாள்?

 என்ற பாடல்­தான் அது.

எந்த புதுக் கவி­ஞ­னுக்­குமே ஆரம்­பத்­தில் சினி­மா­வில் பல எதிர்ப்­பு­கள் இருக்­கும். அப்­போது எம்.ஜி.ஆருக்கு ஏறக்­கு­றைய ஏழு, எட்டு படங்­கள் எழுதி இருந்­தார் வாலி. லேனா செட்­டி­யார் எம்.ஜி. ஆரை வச்சு ஒரு படம் பண்­ணி­னார். பா.நீல­கண்­டன் டைரக் ஷன். சுப்­பையா நாயு­டு­தான் இசை. அதில் பர­தம் சம்­பந்­தப்­பட்ட பாடல் ஒன்று இருந்­தது. அந்த நட­னத்­துக்கு  நடன ஆசி­ரி­யர் ஒருத்­தர் வந்­தார். அந்­தக் காலத்­திலே பர­தத்­துலே பேர் போன­வங்­க­தான் படத்­திலே நாட்­டி­யம் சொல்­லித் தரு­வாங்க.

அந்­தப் படத்­தின் நடன  ஆசி­ரி­யர், `வாலி எல்லா பாட்­டும் நல்லா எழு­து­வார். ஆனா, இது பர­தம் சம்­பந்­தப்­பட்ட பதம். இது வாலி­யால எழுத முடி­யாது’ என்­றார்.

(தொட­ரும்)