பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 29– 9–19

பதிவு செய்த நாள் : 29 செப்டம்பர் 2019

அந்த செய்­தி­யைப் பார்த்­தேன். மனி­தாபி மான­மும், பாச­மும், மதம் போன்ற எந்­தத் தடுப்­புச் சுவ­ரை­யும் உடைத்தெ­றிந்­து­வி­டும். உண்­மை­யில் சொல்­லப்­போ­னால், இந்­தி­யா­வில் மத­வேற்­றுமை என்­பது சரா­சரி மனி­தர்­கள் உரு­வாக்­கு­வ ­தில்லை. அர­சி­யல்­வா­தி­கள் தங்­க­ளின் பச்சை சுய­ந­லத்­திற்­கா­கத்­தான் இப்­படி மத­வேற்­று­மை­களை தங்­கள் வாக்கு வங்­கிக்­காக தூண்­டி­வி­டு­கி­றார்­கள்.

அந்­தச் சம்­ப­வம் குஜ­ராத்­தில் ஒரு சின்ன ஊரில் நடந்­தது. நான்கு இஸ்­லா­மிய சகோ­த­ரர்­கள், தங்­கள் தந்­தை­யின் நாற்­ப­தாண்­டு­கால பிரா­மண நண்­ப­ருக்­கும் இந்து முறைப்­படி இறு­திச் சடங்­கு­களை செய்து முடித்­தி­ருக்­கி­றார்­கள்.

குஜ­ராத்­தின் அம்­ரேலி மாவட்­டத்­தி­லுள்ள  சின்ன ஊர், சவர்­குந்­தியா. அங்கே இருந்­த­வர் பானு­சங்­கர் பாண்­டியா.  இவர் ஒரு குடும்­பத்தை தன் குடும்­ப­மாக நினைத்து பல வரு­டங்­க­ளாக வாழ்ந்து வந்­தார். பாண்­டி­யா­வுக்கு குடும்­பம் கிடை­யாது. அத­னால் தன் நெருங்­கிய நண்­பர் பிக்­கு­வின்  வீட்­டில் வாழ்ந்து வந்­தார். அந்த நெருங்­கிய நண்­பரோ ஒரு இஸ்­லா­மி­யர். பாண்­டியா அந்த வீட்­டி­லேயே தங்கி இருந்­தார். நண்­ப­ரின் குழந்­தை­களை தன் குழந்­தை­கள் போல் பாசத்­தைப் பொழிந்து வந்­தார். இஸ்­லா­மிய குடும்­பத் த­லை­வர் மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் இறந்து போனார். அவ­ருக்கு அபு, நசீர், சூபர் குரேஷி என்று மூன்று பிள்­ளை­கள். மூவ­ருமே தினக்­கூலி தொழி­லா­ளி­கள்.  தங்­கள் தந்தை இறந்த போது அந்த மூன்று பிள்­ளை­க­ளும் பாண்­டி­யாவை தங்­கள் வீட்­டி­லேயே வைத்து தங்­கள் தந்­தை­யைப் போல கவ­னித்து வந்­தார்­கள்.  பாண்­டியா குடும்­பம் இல்­லா­மல் தனி­யா­கத்­தான் வாழ்ந்து வந்­தார். ஆனால் பிக்­கு­வும், பாண்­டி­யா­வும் மிக நெருங்­கிய நண்­பர்­கள். இந்த நட்பு என்­பது நாற்­ப­தாண்­டு­க­ளா­கத் தொடர்­கி­றது. சில ஆண்­டு­க­ளுக்கு முன் ஒரு விபத்­தில் பாண்­டி­யா­வுக்கு கால் எலும்பு முறிவு ஏற்­பட்­டது. உடனே பிக்கு அந்த நண்­பரை தன் வீட்­டுக்கே அழைத்து வந்து வைத்­துக் கொண்­டார்.

 பானு­சங்­கரோ ஒரு வைதீக பிரா­ம­ணர். அசை­வம் உண்­ண­மாட்­டார். ஆனால் பானு­சங்­கர் அந்த வீட்­டுக்கு வந்த பிறகு அவ­ருக்­கென்று ஒரு தனி அடுப்பு வைத்து, சுத்­த­மாக சைவ சாப்­பாட்டை அந்த இஸ்­லா­மிய குடும்­பம் தனி­யாக செய்து கொடுக்­கும்.  பிக்கு இறந்து போன­பின், சென்ற வாரம் பாண்­டியா அதே வீட்­டில் தங்கி இருந்­த­வர் இறந்து போனார். ஈமச்­ச­டங்­கு­களை பிரா­மண முறைப்­படி, அதன் வைதீ­கப் பாணி­யில் செய்ய அந்த மூன்று சகோ­த­ரர்­க­ளும் முடி­வெ­டுத்­தார்­கள். தங்­கள் கழுத்­தில் பூணூல் அணிந்து கொண்­டார்­கள். ஒரு வைதீக பிரா­ம­ண­ருக்கு அவ­ரது வாரி­சு­கள் எப்­படி ஈமச்­ச­டங்­கு­கள் செய்­வார்­களோ அதை இஸ்­லா­மிய சகோ­த­ரர்­களே செய்­தார்­கள். அதில் ஒரு சகோ­த­ரர் சொன்­னார். ` பாண்­டியா அங்க்­கி­ளின் பன்­னி­ரண்­டா­வது நாள் காரி­யம் முடிந்த பின் நாங்­கள் சகோ­த­ரர்­கள் மூன்று பேரும் தலையை மொட்டை அடித்­துக் கொள்­வோம். அவர் இறந்த போது அவ­ரது இறு­திச் சடங்­கிற்­காக கங்­கை­யி­லி­ருந்து நீர் கொண்டு வந்து தெளித்­தோம்’ என்­றார்­கள். இந்த சகோ­த­ரர்­க­ளின் இந்த செய்­கை­யைப் பார்த்து, அந்த ஊரே வியந்து போனது. கார­ணம் அந்த சகோ­த­ரர்­கள் மூவ­ரும் இஸ்­லா­மிய அன்­றாட சடங்­கு­களை தவ­றா­மல் கடைப்­பி­டிப்­ப­வர்­கள். ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை நடத்­து­ப­வர்­கள். இவர்­கள் செய்­கை­யைப் பார்த்து அந்த ஊரே வியந்து போனது. அதை­விட ஆச்­ச­ரி­யம், இப்­படி ஒரு பிரா­ம­ண­னுக்கு வைதீக சடங்கு செய்­த­தில் அந்த ஊர் இஸ்­லா­மிய பெரி­ய­வர்­கள் யாரும் ஆட்­சே­பம் தெரி­விக்­க­வில்லை என்­ப­து­தான்.  கார­ணம், பிக்கு குடும்­பத்­திற்கு வந்த பிறகு, பிக்­கு­வின் இஸ்­லா­மிய நண்­பர்­கள் அனை­வ­ரும் பானு­சங்­கர் பாண்­டி­யா­வுக்­கும் நெருங்­கிய நண்­பர்­கள் ஆகிப்­போ­னார்­கள்.

 ‘இன்­ப­மும் காத­லும் இயற்­கை­யின் நியதி

 ஏற்­றத்­தாழ்­வு­கள் மனி­த­னின் ஜாதி – பாரில்

 இறை­வன் படைத்­ததை எல்­லாம் பாவி

 மனி­தன் பிரித்து வைத்­தானே,  -இது கண்­ண­தா­சன் ‘பாவ­ மன்­னிப்பு’ படத்­திற்­காக எழு­திய பாடல். அதில் கடைசி வரியை பாவி அர­சி­யல் பிரித்து வைத்­ததே என்று இனி மாற்றி வைக்­க­லாம்.

 ரசித்து படித்­தது !

 கவி­ஞர் வாலி தான் இறப்­ப­தற்கு முன்­னால் சொன்­னார்,`என் உடல்­ந­லம் குன்றி, நான் மனச்­சோர்­வு­ரும்­போ­தெல்­லாம் கண்­ண­தா­ச­னின் ‘அர்த்­த­முள்ள இந்­து­ம­த’த்தை அடிக்­கடி இப்­போது படிக்­கி­றேன்’ என்­றார்.  கண்­ண­தா­ச­னின் ‘அர்த்­த­முள்ள இந்­து­ம­தம்’ படிக்­கா­த­வர்­க­ளுக்கு வாலி சொன்­ன­தன் ஆழம் புரி­யாது. கண்­ண­தா­சன் இந்த நூலை இந்­துக்­க­ளுக்­கா­கவோ, இந்து மத போத­னைக்­கா­கவோ எழு­த­வில்லை. இதில் அவர் எழு­தி­யி­ருக்­கும் விஷ­யங்­கள் மானிட இனத்­திற்கே பொருந்­தும். அதற்கு உதா­ர­ணம் இந்த அத்­தி­யா­யம்

 தலைப்பு

 வரும் – ஏற்­றுக்­கொள்

 தரும் – பெற்­றுக் கொள்

 உலக இச்­சை­க­ளு­ட­னேயே உடை­மை­க­ளை­யும் பெற்று பற்­றற்று வாழ்­வது என்­பது இந்து மதத்­தின் அடிப்­ப­டைக் கோட்­பாடு. இந்­தக் கருத்து புது­மை­யா­னது.  நம்­மு­டைய சுற்­றத்­தா­ரும்,  நண்­பர்­க­ளும், ஊழி­யர்­க­ளும், நமக்கு இழைக்­கின்ற துய­ரங்­க­ளால் நமது மனம் பக்­கு­வப்­ப­டு­கி­றது என்­கிற இந்து மதம். அது மிக­வும் உண்மை. சிலர் நாக்­கி­லும், உடம்­பி­லும் ஊசி­யைக் குத்­திக் கொள்­கி­றார்­கள். சிலர் கூர்­மை­யான ஆணி­கள் மீது படுத்­துப் புர­ளு­கி­றார்­கள். சிலர் கண்­ணா­டித் துண்­டு­களை விழுங்­கிக் காட்­டு­கி­றார்­கள்.

இந்­தக் காரி­யங்­கள் எல்­லாம் சரீ­ரத்­தின் புறத்தே பதப்­ப­டுத்­தப்­பட்டு,  பக்­கு­வம் பெற்­று­விட்­ட­தைக் குறிக்­கின்­றன. கடுந்­துன்­பங்­க­ளைத் தாங்­கிக் கொள்­வ­தன் மூலம் சரீ­ரம் ஒரு­வித யோகத்­தைச் செய்­வ­தைப் போல், பிறர் நமக்கு இழைக்­கும் துன்­பங்­களை தாங்­கிக் கொள்­வ­தன் மூலம், உள்­ளம் தவம் செய்­கி­றது.

ஆரம்­பத்­தில் சிறிய துன்­பம் கூட பெரி­தா­கத் தெரி­யும். அது வளர வளர எதை­யும் தாங்­கிக் கொள்­கிற சக்தி வந்­து­வி­டும். துன்­பங்­க­ளின் மூலம் உல­கத்­தைக் கற்­றுக் கொண்­ட­வன் ஞானியை விட சிறந்த மேதை­யா­கி­வி­டு­கி­றான்.  ஓர­ளவு துன்­பம் வந்­தால் அழுகை வரு­கி­றது.தொடர்ந்து துன்­பங்­கள் வந்­தால் அழு­வ­தற்கு சக்தி இல்­லா­மல் போய்,  வெறுப்­பும், விரக்­தி­யு­ மாகி சிரிப்பு வரு­கி­றது.

ஒரு கட்­டத்­தில் எந்­தத் துய­ரம் வந்­தா­லும் சிரிப்­பது பழக்­க­மா­கி­வி­டு­கி­றது. அதுவே ஞானம் வந்­து­ விட்­ட­தற்கு அடை­யா­ளம்.

 ‘ஆவின மழை­பொ­ழிய இல்­லம் வீழ

 அகத்­த­டி­யாள் மெய்­நோக அடிமை சாக

 மாவீ­ரம் போகு­தென்று விதை கொண்­டோட

 வழி­யிலே கடன்­கா­ரன் மறித்­துக் கொள்­ளச்

 சாவோலை கொண்­டொ­ரு­வன் எதிரே தோன்­றத்

 தள்­ள­வொணா விருந்து வர சர்ப்­பந் தீண்­டக்

 கோவேந்­தர் உழு­துண்ட கடமை கேட்­கக்

 குருக்­கள் வந்து தட்­ச­னை­கள் கொடு­என் றாரே!’

 என்­றொரு பாடல்.  ஒரு மனி­த­னுக்கு ஏற்­பட்ட துயர அனு­ப­வ­மாம் இது!

 கற்­ப­னை­தான்.  ஆனால் ஒரே நேரத்­தில் வரும் துன்­பங்­க­ளின் வரிசை இது­தான்.

 அடாத மழை பெய்­த­தாம்

 வீடு விழுந்து விட்­ட­தாம்

மனை­விக்கு கடு­மை­யான நோய் வந்­த­தாம்

 வேலைக்­கா­ரன் இறந்து போக

வய­லில் ஈரம் இருக்­கி­றது.

விதைக்க வேண்­டு­மென்று ஓடி­னா­னாம்.

  வழி­யிலே கடன்­கா­ரர்­கள் மடி­யைப் பிடித்து இழுத்­தார்­க­ளாம். `உன் மகன் இறந்து போனான்’ என்று சாவுச் செய்­தி­யோடு ஒரு­வன் வந்­தா­னாம்.  இந்த நேரத்­தில் விருந்­தா­ளி­கள் வீடு வந்து சேர்ந்­தார்­க­ளாம்.  குருக்­க­ளும் தட்­சி­ணைப் பாக்­கிக்­காக வந்து நின்­றா­ராம்.  ஒரே நேரத்­தில் இத்­த­னை­யும் வந்­தால் ஒரு­வ­னுக்கு அழு­கையா வரும்?  

இவ்­வ­ளவு துன்­பங்­க­ளைச் சந்­தித்த பிற­கும் ஒரு­வ­னின் மனம் மரத்­துப் போகும். மரத்­துப் போன நிலை­யில் துன்­பங்­க­ளைக் கண்­டு­பி­டிக்­கா­மல் அலட்­சி­யப்­ப­டுத்­தத் தோன்­றும்.

`நாமார்க்­கும் குடி­யல்­லோம் நமனை அஞ்­சோம்’ என்று தைரி­யம் வந்­து­வி­டும். சிறி­த­ள­வும் இன்­ப­மும் பெரி­தா­கத் தோன்­றும்; பேராசை அடி­பட்­டுப் போகும். பல ஆண்­டு­கள் தவம் செய்து பெற்ற ஞானத்தை விட இந்த ஞானம் அழுத்­த­மா­னது. ஆழ­மா­னது; உண்­மை­யா­னது. உறு­தி­யா­னது.  ஆகவே லவு­கீக வாழ்க்­கை­தான் – அதில் ஏற்­ப­டும் இன்ப துன்­பங்­கள்­தான் ஒரு மனி­த­னைப் பக்­கு­வம்  பெற்ற ஞானி­யாக்­கு­கின்­றன.  எனக்கு இதிலே அனு­ப­வம் உண்டு.

 என் ஞானம் என்­பது என் வாழ்க்கை அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து திரட்­டப் பெற்ற தொகுப்பு நூல். அனு­ப­வங்­களே இல்­லா­மல், இரு­பது வய­தி­லேயே ஒரு­வன் பற்­றற்ற வாழ்க்­கை­யைத் தொடங்­கி­னால், அடுத்த சில ஆண்­டு­க­ளி­லேயே அவன் லவு­கீக வாழ்க்­கைக்­குத் திரும்­பி­வி­டு­வான். இல்­லை­யேல், கள்­ளத்­த­ன­மான உற­வு­க­ளில் இறங்­கு­வான்.  அந்­தத் துறவு போலித்­த­ன­மா­னது. அண்ணா ஒரு முறை சொன்­னது போல் ` படுக்­கை­யிலே படுக்க வேண்­டும். பாம்பு வர­வேண்­டும். கடிக்க வேண்­டும். உயிர் துடிக்க வேண்­டும். ஆனால் சாவு வரக்­கூ­டாது’ இப்­படி தின­மும் ஒரு­வ­னுக்கு நேர்ந்­தால், பாம்பே அவ­னுக்கு வேடிக்­கை­யான ஜந்து ஆகி­வி­டும்.  பிறகு பாம்பு வரு­மென்று தெரிந்தே அவன் படுப்­பான்.`கடிக்­கும் என்று தெரிந்தே தயா­ரா­யி­ருப்­பான். கவ­லைப்­ப­ட­மாட்­டான்.’  யார்­யா­ருக்கு நான் சோறு போட்­டேனோ, அவர்­க­ளெல்­லோ­ரும் என் கையை கடித்­தி­ருக்­கி­றார்­கள். அதி­லி­ருந்து யாருக்­குப் போட­லாம், யாருக்­குப் போடக்­கூ­டாது என்­கிற புத்தி எனக்கு வந்­து­விட்­டது.                  ***