பாட்டிமார் சொன்ன கதைகள் – 235 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 27 செப்டம்பர் 2019

‘பார்க்கிறாயா’ பார்க்கவில்லை!

‘இன்று என்ன பரீட்சை ஏற்படுத்த லாம்?’ என்று எண்ணிக்கொண்டே கங்கையில் நீராடிக் கொண்டிருந்தார் குரு. ஒரு முதலை பளிச்சென்று வந்த கணைக் காலைப் பிடித்துக் கொண்டது. விடுவித்துக் கொள்ள வல்லவரே அஸ்திர சாஸ்திர வித்தைகளில் மகா நிபுணரல்லவா? எனினும் ‘ஐயோ செத்தேன்? என்னைச் சீக்கிர விடுவிக்க மாட்டீர்களா?’ என்று கதறினார். சிஷ்யர் களோ ஒன்று தோன்றாமல் அங்கு மிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் திடிரென்று கூர்மையான அம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக முதலை மீது பாய்ந்துவிட்டன. பார்த்தார் யாரென்று ஆம் அவன்தான் ‘இன்று ஒரு பரீட்சை முடிந்தது; அர்ச்சுனன் ஒருவன் தான் தேறியிருக்கிறான்’ என்றார் துரோ ணர்.

‘இதோ இன்னும் ஒரு பரீட்சையும் நடத்திவிடப் போகிறேன்’ என்று சொல்லிக்கொண்டே மண்ணால் ஒரு குழந்தை செய்வித்து சிஷ்யர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலே கங்கை யில் போட்டார்.உடனே வேணுமென்று துணியினால் கண்களைக் கட்டிக் கொண்டு தண்ணீரிலுள்ள அந்தக் குழந்தை பதுமையைக் குறி வைத்து அடிக்குமாறு கட்டளையிட்டார்.

அந்த பரீட்சையில் துரியோதனன் முதலான சிஷ்யர்கள் தவறிவிட்டார்கள். தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்த பது மையை குறி தவறாமல் அர்ச்சுனனே அடித்து விட்டான். துரியோதனனுக்குப் பொறாமை விஷமேறுவது போல் ஏறிக் கொண்டிருந்தது.

மூன்றாவது பரீட்சையும் விரைவில் நடைபெற்றது. சிற்பி ஒருவன் குருவி போன்ற ஒரு புதுமையை அமைக்க, அதை மரத்தின் நுனியில் ஏற்றி வைத்தார்கள். குரு சிஷ்யர்களை நோக்கி, ‘நீங்கள் அனைவரும்  அந்தப் பட்சியை குறி வைத்துக்கொண்டு நில்லுங்கள். ஒவ்வொருவனாகக் கட்ட ளையிடுவேன். நான் கட்டளையிட்டதும் அதன் தலையை தள்ளிவிட வேண்டும் ‘ என்றார்.

முதலில் தர்மபுத்திரனை நோக்கி ‘பாணத்தைத் தொடு’ என்று உத்தரவு கொடுத்தார். தருமர் வில்லை வளைத்துக் குறி வைத்து நிற்க, துரோணர் ‘ராஜகுமாரா! மரத்தின் நுனியி லிருக்கும் அந்தக் குருவியைப் பார்க்கி றாயா? என்று கேட்டார். ‘பார்க்கிறேன்’ பதில் சொன்னார் குரு. ‘அந்த மரத்தை யும் பார்க்கிறாயா?’ என்று கேட்க, அதற்கு தருமர் ‘ஆம்’ என்றார். குரு அதி ருப்தியுடன் ‘அந்த லட்சியத்தை உன்னால் அடிக்க முடியாது’ என்று அவனை போகும்படி சொல்லிவிட்டார். அந்த குரலில் எவ்வளவு இகழ்ச்சி தொனித்ததென்று துரியோதனன் முத லானவர்கள் தங்களுக்குள் வியாக்கி யானம் செய்து கொண்டே மகிழ்ச்சிய டைந்தார்கள்.

பீமனும் அந்தப் பரீட்சையில் தவறிப் போனது துரியோதனனுக்கு விசேஷ மகிழ்ச்சியை அளித்தது. ‘அடடா! இந்த பாண்டவர்களுடைய தோல்வியே எனக்கு வெற்றி’ என்று நினைத்தான்.

திடிரென்று துரோணர் துரியோதன னையே அழைத்துப் பரீட்சித்தார். தரு மனை கேட்ட முறையாகவே கேட்டார். ‘பட்சியையும் மரத்தையும் என் சகோத ரர்களையும் பாண்டிவர்களையும், ஆசாரி யரையும் பார்க்கிறேன்’ என்று துரியோத னன் பலமுறை சொன்னான். ‘நீயும் தவறிவிட்டாய்’ என்று துரோணர் நிந்தித்து அவனையும் அனுப்பிவிட்டார்.

துரியோதனனுடைய தம்பிமாரும், பிறகு அன்னிய அரசர்களும் பரீட்சிக்கப்பட்டார்கள். அவர்கள் எல்லோரும் ‘எல்லாவற்றையும் பார்க்கி றோம்’ என்று உற்சாகமாய் சொன்ன போது ‘நீங்கள் அனைவரும் தவறிப் போனீர்கள்’ என்று சொல்லித் துரோ ணர் ‘இந்த என் பரீட்சையில் தேறக்கூடிய சிஷ்யன் ஒருவனாவது இல்லையா?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

உடனே அர்ச்சுனன் வந்தான். வில்லை மண்டலமாக வளைத்துச் சற்று நேரம் நின்றான். குரு அவனையும் முன் போலவே, ‘அர்ச்சுனா, என்னைப் பார்க் கிறாயா?’ என்று கேட்டார். ‘இல்லை, தங்கள் குரலைத்தான் கேட்கிறேன்’ என்று பதில் சொன்னான்.

‘துரியோதனன் முதலானவர்களைப் பார்க்கிறாயா? என்று கேட்டார் ‘இல்லை’ என்றான் அர்ச்சுனன். மறுபடி யும் குரு ‘உன் தமையனான தருமனைப் பார்க்கிறாயா?’ என்று கேட்டார். தன் சகோதரர்களையும் பார்க்க வில்லை யென்றான் அர்ச்சுனன். ‘மரத்தை பார்க் கிறாயல்லவா?’ என்று குரு கேட்க, ‘மரத்தையும் பார்க்கவில்லை’ என்று பதில் வந்தது. ‘அந்த பட்சியை மட்டுமே பார்க்கிறாயா? என்று துரோணர் கேட்டதும், ‘அர்ச்சுனன் அதன் தலையைப் பார்க்கிறேன்; உடலைப் பார்க்கவில்லை’ என்று மறுமொழி சொன்னான். ‘சுத்தப் பொய்’ என்று நினைத்தான் துரியோதனன். துரோண ருக்கு ஆச்சரியமாயிருந்தன. அவன் சொன்ன பதிலும் நின்ற நிலையும்.

‘விடு’ என்ற கட்டளை ஒரு கணம்; அதே கணத்தில் அந்தப் பதுமையில் தலையும் அறுந்து விழந்ததாகத் தோன்றியது. அவ்வளவு வேகமாகக் கூர்மையான அர்த்த சந்திரபாணம் ஒன்று அர்ச்சுனன் வில்லிலிருந்து பறந்து போய்விட்டது. குரு சிஷ்யனைக் கட்டிக்கொண்டார்.

‘பாஞ்சால மன்னனே! என்னை நீ அந்த சபையில் என்னை நீ அந்த சபை யிலே அவமானப் படுத்தினாயே. உனக்குத் தண்டனை விரைவில் வந்து கொண்டிருக்கிறது. என்று தமக்குள் தாமே சொல்லிக் கொண்டார். அர்ச்சு னனுக்கு நிகரற்ற சில அஸ்திர சாஸ்தி ரங்களை கொடுத்து அவற்றை பிரயோ கம் செய்யும் முறைகளையும் ரகசிய மாகக் கற்பித்து ‘உன்னைப் போன்ற வேறொரு வில்லாளி இருக்கவே முடியாது’ என்று வாய் குளிர மனம் குளிர வாழ்த்தினார். துரியோதனனுடைய பொறா மைக்கு அளவேயில்லை.

( தொடரும்)