சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 411 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 25 செப்டம்பர் 2019

நடி­கர்­கள் : சிவ­கார்த்­தி­கே­யன், ப்ரியா ஆனந்த், நந்­திதா, சதீஷ், ஜெயப்­பி­ர­காஷ், மனோ­பாலா, ஷரத் லோஹி­தஷ்வா, ரவி பிர­காஷ், சுரேகா வாணி, ‘பசங்க’ சிவ­கு­மார் மற்­றும் பலர். இசை : அனி­ருத் ரவிச்­சந்­தர், ஒளிப்­ப­திவு : வேல்­ராஜ், தயா­ரிப்பு : தனுஷ், திரைக்­கதை, இயக்­கம் : ஆர்.எஸ். துரை செந்­தில்­கு­மார்.

மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கும் சிவ­கா­மிக்கு (சுரேகா வாணி) பிர­ச­வத்­தில் சிக்­கல் ஏற்­ப­டு­கி­றது. வெளி­யில் காத்­தி­ருக்­கும் அவ­ரது கண­வர் (‘பசங்க’ சிவ­கு­மார்) குழந்தை பிறந்­தால் ‘குஞ்­சி­த­பா­தம்’ என்ற தனது குல­தெய்­வத்­தின் பெய­ரையே வைப்­ப­தாக வேண்­டிக்­கொள்­கி­றார். சிறு­வ­னாக வள­ரும் குஞ்­சி­த­பா­தம் தனது பெயரை சுருக்கி அனை­வ­ரும் கேலி செய்­வ­தால் வருந்­து­கி­றான். அவ­னது பெயரை மாற்­றிக்­கொள்ள நினைக்­கும் நேரத்­தில் அவ­னது தாய்க்கு உடல்­நிலை சரி­யில்­லா­மல் போகி­றது. தெய்­வத்­தின் பெயரை மாற்ற நினைத்­த­தால்தான் பிரச்னை ஏற்­பட்­ட­தாக கருதி பெயரை மாற்­றும் எண்­ணத்­தையே தாய்க்­காக கைவி­டு­கி­றான்.

சில வரு­டங்­க­ளூக்­குப் பிறகு, இளை­ஞ­னான குஞ்­சி­த­பா­தத்­தின் (சிவ­கார்த்­தி­கே­யன்) தாய் இறக்­கி­றார். நண்பனான பீட்­ட­ரின் (சதீஷ்) ஆலோ­ச­னைப்­படி ஜோதி­டர் குண­சே­க­ர­ரா­ஜாவை (மனோ­பாலா) சந்­தித்து தனது பெயரை ‘ஹரிஷ்’ என்று மாற்­றிக்­கொள்­கி­றான். ஆசி­ரி­யை­யாக வேலை பார்க்­கும் கீதாவை (ப்ரியா ஆனந்த்) சந்­தித்து காத­லில் விழு­கி­றான். கீதா­வும் ஹரிஷை விரும்­பத்­தொ­டங்க, உண்­மை­யான பெய­ரில் ஹரிஷ் வாங்­கிய பரி­சுச்­சீட்­டுக்கு தொலைக்­காட்­சிப் பெட்டி பரி­சாக கிடைக்­கி­றது. பரிசை வாங்­கிய பின் பழைய நண்பர்­கள் மூலம் கீதா­வுக்கு ஹரி­ஷின் உண்மை பெயர் தெரி­ய­வ­ரு­கி­றது. பொய் சொன்­ன­தற்­காக கோபப்­ப­டும் கீதா தன் மனதை ஜெயிப்­ப­தற்கு எதை­யா­வது சாதித்­துக் காட்­டும்­படி கூறு­கி­றாள்.

சென்னை மாரத்­தா­னில் கலந்து கொள்ள நினைக்­கும் ஹரிஷ் பயிற்­சி­யா­ள­ரி­டம் (ஜெயப்­பி­ர­காஷ்) செல்ல அவர் தனது பழைய மாண­வி­யான வள்­ளி­யி­டம் (நந்­திதா) அனுப்­பு­கி­றார். கடு­மை­யான பயிற்­சி­ய­ளிக்­கும் வள்ளி திற­மை­யான தட­கள வீராங்­க­னை­யாக இருந்­ததை தெரிந்து கொள்­ளும் ஹரிஷ் அவ­ளது முன்­க­தையை கேட்­கி­றான். வறு­மை­யான சூழ­லி­லும் மக­ளுக்கு ஊக்­க­ம­ளிக்­கும் பாச­மான வள்­ளி­யின் அப்பா (ஷரத் லோஷி­தஷ்வா) தன்  மக­ளின் முன்­னேற்­றத் திற்­காக விடா­மல் முயற்­சிக்­கி­றார். மாநில அள­வி­லான போட்­டி­யில் ஊழல் பயிற்­சி­யா­ள­ரான ராஜா சிங்­கின் (ரவி பிர­காஷ்) பணக்­கார மாண­வியை வள்ளி தோற்­க­டிக்­கி­றார். இத­னால் கடுப்­பா­கும் ராஜா சிங், வள்ளி பாலின தேர்­வில் மோசடி செய்­த­தாக குற்­றம் சாட்­டு­கி­றார். பண­ப­லத்­தால் வள்ளி போட்­டி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட மன­மு­டை­யும் அவ­ரது தந்தை மார­டைப்­பால் உயி­ரி­ழக்­கி­றார்.

வள்­ளி­யின் நிலை­யைக் கண்டு வருந்­தும் ஹரிஷ் வள்­ளிக்­காக இந்­தப் போட்­டி­யில் வெல்ல வேண்­டும் என உறு­தி­யெ­டுக்­கி­றான். மாரத்­தான் ஓட்­டத்­தில் ஹரீ­ஷுக்கு ராஜா சிங்­கின் மாண­வ­னால் பிரச்­னை­கள் ஏற்­ப­டு­கி­ன்றன.

தடை­க­ளைத் தாண்டி வெல்­லும் ஹரிஷ், மறைந்த தன் தாய், தந்­தை­யின் பெயரை பெரு­மைப்­ப­டுத்­தும் வித­மாக தனது உண்­மை­யான பெய­ரி­லேயெ விருது பெற்­றுக்­கொள்ள விரும்­பு­கி­றான். வெற்றி மேடை­யில் ராஜா சிங்­கின் பித்­த­லாட்­டங்­க­ளை­யும், வள்­ளி­யின் நியா­யத்­தை­யும் மீடி­யாக்­க­ளி­டம் அம்­ப­லப்­ப­டுத்­து­கி­றான். குஞ்­சி­த­பா­தம் என்ற பெய­ரில் அகா­டமி ஆரம்­பித்து நடத்­து­கி­றான். அதில் பயிற்­சி­யா­ள­ராக பணி­பு­ரி­யும் வள்­ளி­யி­டம், தின­க­ரன்(அட்­ட­கத்தி தினேஷ்) ஹரி­ஷின் அறி­வு­ரைப்­படி காத­லைத் தெரி­வித்து சம்­ம­தம் பெறு­கி­றான்.