ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 25–9–19

25 செப்டம்பர் 2019, 02:56 PM

என் குரு தன்ராஜ் மாஸ்டர்!

(சென்ற வார தொடர்ச்சி...)

எனக்கு வெஸ்டர்ன் மியூசிக்குக்கு குரு­வாக அமைந்­த­வர், தன்­ராஜ் மாஸ்­டர். அவ­ரைப் பற்றி எவ்­வ­ளவு புகழ்ந்­தா­லும் அது அத்­த­னைக்­கும் தகுதி உடை­ய­வர் அவர்.

அவர் யாரி­டம் இசை கற்­றுக் கொண்­டார் என்­பது எனக்­குத் தெரி­யாது! அதை நான் அவ­ரி­டம் கேட்­கா­மல் போய்­விட்­டேன்.

அவ­ருக்கு வெஸ்டர்ன் மியூசிக்கில் அத்­த­னை­யும் அத்­துப்­படி. அத்­து­டன் இல்­லாது தமி­ழி­சை­யில் சிலப்­ப­தி­கா­ரத்தை ஓர் இசை நூல்­தான் என்று ஆணித்­த­ர­மாக, அதில் அமைத்­தி­ருக்­கின்ற வார்த்­தை­க­ளின் அர்த்­தங்­க­ளைச் சொல்­லியே வாதிட்­டுக் குழப்­ப­மின்றி விளக்­கக் கூடி­ய­வர். பண் ஆராய்ச்­சி­யிலே வரட்­டுத்­த­ன­மான Theoretical விவா­தங்­கள் இல்­லா­மல் இசை­யின் இயல்­பான தன்­மை­யோடு விளக்­கக்­கூ­டிய விற்­பன்­னர்.

அது­மட்­டு­மின்றி, பன்­னி­ரண்டு ராசி­க­ளின் அமைப்­பைப் படம் போட்­டுக் காட்டி, அதில் பன்­னி­ரண்டு சப்­தஸ்­வ­ரங்­கள் அமைந்­தி­ருக்­கும் இடை­வெ­ளியை கன­கச்­சி­த­மா­கக் குறிப்­பிட்டு ஒவ்­வோர் ஒலி­ய­சை­யும் (Frequency) எப்­படி அமைந்­தி­ருக்­கின்­றன என்­றும் எடுத்­துச் சொல்­லக்கூடி­ய­வர்.

அந்­தக் காலத்­தில் திரை இசைக்கு அதி­க­மான இசைக்­க­லை­ஞர்­க­ளுக்­குப் பயிற்சி அளித்து திரை இசைக் குழு­விற்கு அனுப்பி வைத்­த­வர்.

‘Trinity College of Music, London‘, ‘Royal College of Music, London‘ போன்ற இசைக் கல்­லூ­ரி­க­ளின் தேர்­வுக்கு Practical, Theory இரண்­டிற்­கும் மாண­வர்­க­ளைத் தயார் செய்து அனுப்பி, Individual Musician-களின் திற­மையை வளர்த்து, அதி­கப்­ப­டி­யான அள­வில் வெற்­றி­பெற வைத்­தார்.

திரை இசை அந்­தக் காலத்­தில் தர­மா­ன­தாக இருந்­த­தால், முறை­யா­கத் தயா­ரான சிறந்த இசைக் கலை­ஞர்­கள் இசைக்­கு­ழு­வில் இருக்­கும்­போது ஒன்­றும் தெரி­யா­மல் ஒரு­வர் இசை­ய­மைப்­பா­ள­ராக வந்து விட்­டா­லும், இவர்­க­ளு­டன் வேலை செய்­யும்­போது தங்­க­ளு­டைய தவற்றை அறிந்து, ‘ஐயோ! நமக்கு இது தெரி­யா­மல் போய் விட்­டதே!’ என்று வருந்தி அவர்­க­ளும், ஏதா­வது இதைப் பற்­றித் தெரி­யா­விட்­டால் பத்து பேர் முன்­னால் தரக்­கு­றை­வா­கி­வி­டும் என்று தம்­மைத் தயார்­ப­டுத்­திக் கொள்­ளும் ஒரு முனைப்பு வரு­வ­தற்­குக் கார­ண­மாக இருந்­த­வர் மாஸ்­டர் தன்­ராஜ். விஷ­யம் தெரி­யா­த­வர்­க­ளும் ஏதா­வது விஷ­யம் தெரிந்­த­வர்­க­ளாக தங்­களை உயர்த்­திக் கொள்ள நினைப்­பார்­கள். ஒவ்­வொரு ஸ்டூடி­யோ­விற்­கும் தனி ஆர்க்­கெஸ்ட்ரா இருக்­கும். ஏவி.எம்மி-ல் தனி ஆர்க்­கெஸ்ட்ரா, தனி இசை­ய­மைப்­பா­ளர், எல்­லோ­ருக்­கும் மாதச் சம்­ப­ளம்.

ஜெமினி,-வாஹி­னி­யில் தனித்­தனி ஆர்க்­கெஸ்ட்ரா, கோவை ஜூபி­டர் பிக்­சர்சிலும், சேலம் மாடர்ன் தியேட்­டர்சிலும் தனி ஆர்க்­கெஸ்ட்ரா என்று இசைக்­க­லை­ஞர்­கள் நிறைய இருந்­தார்­கள். அதன்­பின் வந்த மாற்­றத்­தால், நல்ல இசைக்­க­லை­ஞர்­கள் மட்­டுமே தங்­க­ளுக்கு வேண்­டு­மென்று பிர­ப­ல­மாக வந்த இசை­ய­மைப்­பா­ளர்­கள் தங்­க­ளுக்­கென்று தனி­யாக ஆர்க்­கெஸ்ட்ரா வைத்­துக் கொண்­டார்­கள்.

விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்தி, கே.வி. மகா­தே­வன், ஜி. ராம­நா­தன் இவர்­க­ளுக்­குத் தனி ஆர்க்­கெஸ்ட்ரா இருக்­கும்.

இதில் ஒரு குறிப்­பிட்ட வாத்­தி­யக் கலை­ஞர்­கள், அந்த வாத்­தி­யத்­திற்­கென்று ஓரி­ரு­வர் மட்­டும் இருந்­தால், அவர்­கள் மற்­றும் எல்லா இசை­ய­மைப்­பா­ளர்­க­ளுக்­கும் சென்று வரு­வார்­கள். அவர்­க­ளுக்கு எந்­தக் கேள்­வி­யும் இல்லை.

நான் சினி­மா­வில் நுழைந்த நேர­மும் அந்த மாதி­ரி­யான நேரம்­தான்! தனி இசைக் கலை­ஞர்­க­ளின் Standard of Playing மிக­வும் உயர்ந்த நிலை­யில் இருந்­தது.

ஒரு வாத்­தி­யம் வாசிப்­ப­வரை நேருக்கு நேராக பார்த்­துப் பேசு­வதே கஷ்­டம். மிக­வும் பய­மாக இருக்­கும்.

வாசிக்­கும்­போது, யாரா­வது தவறு செய்­து­விட்­டால் முன்­னால் இருப்­ப­வர் திரும்­பிப் பார்த்­தால் தவ­றாக இசைத்­த­வ­ருக்கு சர்வ நாடி­யும் அடங்­கிப் போய்­வி­டும். நான் தன்­ராஜ் மாஸ்­ட­ரி­டம் மாண­வ­னா­கச் சேர்ந்­தது 1969-ல் என்று நினைக்­கி­றேன். அதே வரு­டத்­தில்­தான் கர்­நா­டக சங்­கீ­தத்­திற்­காக எல்.வைத்­தி­ய­நா­தன், எல். சுப்­ர­மண்­யன், எல். சங்­கர் ஆகி­யோ­ரின் தந்­தை­யி­டம் மாண­வ­னா­க­வும் சேர்ந்­தேன்.