சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 410 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 18 செப்டம்பர் 2019

நடி­கர்­கள்  :  சந்­தா­னம், சேது, ‘பவர் ஸ்டார்’ சீனி­வா­சன், விசாகா சிங், கோவை சரளா, விடிவி கணேஷ், சிவ­சங்­கர், தேவ­தர்­ஷினி மற்­றும் பலர்.

இசை : எஸ். தமன், ஒளிப்­ப­திவு : பால­சுப்­ர­ம­ணி­யம், எடிட்­டிங்: ஜி. ராமா­ராவ், தயா­ரிப்பு : சந்­தா­னம், ராம. நாரா­ய­ணன், திரைக்­கதை, இயக்­கம் : கே.எஸ்.மணி­கண்­டன்.

கால் கட்டு கலி­ய­பெ­ரு­மாள் (சந்­தா­னம்), பவர் குமார் (சீனி­வா­சன்), சிவா (சேது) மூவ­ரும் நிலை­யான வேலை­யில்­லா­மல் ஊர் சுற்­றும் இளை­ஞர்­கள். குடும்­பத்­தி­ன­ரின் வார்த்­தை­களை மதிக்­கா­மல் எப்­போ­தும் குடிப்­பது, காத­லிக்க பெண்­களை துரத்­து­வது என்று வாழ்­கி­றார்­கள். சிவா­வின் எதிர்­வீட்­டிற்கு புதி­தாக குடி­வ­ரும் குடும்­பத்­தில் உள்ள இளம் பெண் சவும்­யா­வால் (விசாகா சிங்) நண்­பர்­க­ளி­டையே சண்டை வரு­கி­றது. சவும்­யா­வின் காத­லைப் பெற மூவ­ரும் முயற்­சிப்­பது என­வும், சவும்யா யாரை விரும்­பி­னா­லும் மற்­ற­வர்­கள் அந்­தக் காத­லுக்கு உத­வு­வது என­வும் முடிவு செய்­கி­றார்­கள்.  

சிவா, சவும்­யா­வின் சித்­திக்கு (கோவை சரளா) உதவி செய்து அதன் மூலம் சவும்­யா­வின் மன­தில் இடம்­பி­டிக்க முயற்சி செய்­கி­றான். அது போலவே கலி­ய­பெ­ரு­மாள் சவும்­யா­வின் சித்­தப்­பா­வி­டம் (விடிவி கணேஷ்) பாட்டு கற்­றுக்­கொள்­ளும் சாக்­கி­லும், பவர் சவும்­யா­வின் அப்­பா­வி­டம் (சிவ­சங்­கர்) பர­த­நாட்­டி­யம் கற்­றுக்­கொள்­ளும் சாக்­கி­லும் சவும்­யா­வின் அபி­மா­னத்தை பெற முயற்சி செய்­கி­றார்­கள். சவும்­யா­வுக்­காக அவர்­கள் குடும்­பம் தரும் தண்­ட­னை­களை தாங்­கு­கி­றார்­கள். சவும்­யா­வி­டம் தன்னை நல்­ல­வ­னா­க­வும் மற்­ற­வர்­களை கெட்­ட­வர்­க­ளா­க­வும் காட்­டும்­படி ஒவ்­வொ­ரு­வ­ரும் நாட­க­மா­டு­கி­றார்­கள். ஒரு நாள் நண்­பர்­கள் மூவ­ரும் தங்­கள் காதலை சவும்­யா­வி­டம் தெரி­விக்­கி­றார்­கள். பக்­கத்து வீட்­டில் வசிக்­கும் தோழி­யின் (தேவ­தர்­ஷினி) மூலம் மூவ­ரைப் பற்­றி­யும் தெரிந்து கொள்­ளும் சவும்யா அவ­ரின் அறி­வு­ரைப்­படி, இவர்­க­ளி­ட­மி­ருந்து தப்­பிப்­ப­தற்­காக தான் நடி­கர் சிம்­புவை காத­லிப்­ப­தா­க­வும் தன்னை அவ­ரு­டன் சேர்த்து வைக்­கும்­ப­டி­யும் கேட்­டுக்­கொள்­கி­றார்.  

தங்­கள் ஆசை நிறை­வே­றாத கோபத்­தில் கலி­ய­பெ­ரு­மாள் சவும்­யா­வின் சித்­தப்­பா­வை­யும், பவர் சவும்­யா­வின் அப்­பா­வை­யும் தாங்­கள் பெற்ற தண்­ட­னை­க­ளுக்­கும் சேர்த்து அடித்து உதைக்­கி­றார்­கள். படு­கா­ய­ம­டைந்து வரும் தனது அப்பா மற்­றும் சித்­தப்­பாவை பார்த்து அதிர்ச்­சி­ய­டை­யும் சவும்யா தனது சித்­தி­யின் நிலையை நினைத்து கவ­லை­ய­டை­கி­றார். ஆனால் சிவா எப்­போ­தும் போல அவ­ரது சித்­திக்­கும், தம்­பிக்­கும் உத­வி­கள் செய்­கி­றார். சிவா­வின் வற்­பு­றுத்­த­லால் நண்­பர்­கள் சவும்­யா­விற்­காக நடி­கர் சிம்­புவை (எஸ்.டி.ஆர்.) சந்­தித்து பேச, சவும்யா யாரெ­னத் தெரி­யாது என்­றுக்­கூறி திருப்­பி­ய­னுப்­பு­கி­றார். சிம்­புவை கடத்த இவர்­கள் நிய­மிக்­கும் ’கொல­வெறி’ டேவிட் (ஸ்டண்ட் சில்வா) உண்மை தெரிந்து எரிச்­ச­லாகி சவும்­யா­வையே கடத்தி விடு­கி­றான். காத­லிக்­காக சிவா­வும், நண்­ப­னுக்­காக மற்ற இரு­வ­ரும் போராடி சவும்­யாவை காப்­பாற்­று­கி­றார்­கள். தனது காத­லில் மாறா­மல் இருந்த சிவாவை சவும்­யா­வும் விரும்ப, நண்­பர்­கள் மற்­றும் குடும்­பத்­தார் துணை­யு­டன் இரு­வ­ரும் மண­மு­டிக்­கி­றார்­கள்.