10-ம் வகுப்பு பொதுத்தேர்வு திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2019 19:24

சென்னை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 மார்ச் 17-ந் தேதி முதல் ஏப்ரல் 9-ந் தேதி வரை  நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் தேர்வு அட்டவணையில் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழ் மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் தாள் 1, 2 என இருந்தன. அந்த  இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்திடும் பொருட்டு திருத்தப்பட்ட மார்ச் / ஏப்ரல் 2020-க்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கால அட்டவணையை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தேர்வு அட்டவணைப்படி 10-ம் வகுப்பு  பொதுத்தேர்வு 2020,  மார்ச் 27-ந் தேதி தொடங்கி
ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெறும்.

திருத்தப்பட்ட  புதிய தேர்வு அட்டவணை

மார்ச் 27  - மொழிப்பாடம்

மார்ச் 28  - விருப்பமொழி

மார்ச் 31 - ஆங்கிலம்

ஏப்ரல் 3  - சமூக அறிவியல்

ஏப்ரல் 7 - அறிவியல்

ஏப்ரல் 13 - கணிதம்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவு 2020, மே 4-ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகல்வித்துறையின், அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் நகல் கீழே தரப்பட்டுள்ளது.