பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை துவங்குகிறது

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 20:40

சென்னை,

   வரும் 2020-ம் ஆண்டு கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்கள் நாளை முதல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ஏற்கெனவே முடிந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

வெளியூர் செல்பவர்களுக்காக வரும் ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அதேபோல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புகிறவர்கள் ஜனவரி 19 மற்றும் 20ம் தேதிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 8 மணிமுதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தேதிக்கான முன்பதிவு செய்ய முடியும் என்ற தேதி வாரியான விவரம் பின்வருமாறு :

ஜனவரி 10-ம் தேதிக்கான முன்பதிவு - செப்டம்பர் 12-ம் தேதி

ஜனவரி 11-ம் தேதிக்கான முன்பதிவு - செப்டம்பர் 13-ம் தேதி

ஜனவரி 12-ம் தேதிக்கான முன்பதிவு - செப்டம்பர் 14-ம் தேதி

ஜனவரி 13-ம் தேதிக்கான முன்பதிவு - செப்டம்பர் 15-ம் தேதி

ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு - செப்டம்பர் 16-ம் தேதி

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் ஊர் திரும்புவோர் முன்பதிவு செய்வதற்கான தேதிகளின் விவரம் :

ஜனவரி 19-ம் தேதிக்கான முன்பதிவு - செப்டம்பர் 21-ம் தேதி

ஜனவரி 20-ம் தேதிக்கான முன்பதிவு - செப்டம்பர் 22-ம் தேதி

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் திட்டமிட்டப்படி பயணத்தை மேற்கொள்ளவும் தேதி வாரியாக வெளியான விவரத்தின்படி முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.