வேலூர், கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 16:43

சென்னை,

  வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 15-ஆம் தேதி மாநிலத்தின் ஒருசில இடங்களில் மழை எதிர்ப்பார்க்கலாம்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசும் உணரப்படும்.
இன்றைய  நிலவரப்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 செ.மீ மழை பதிவானது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவானது.