50% கடன் +30% சேமிப்பு +20% செலவு – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2019

இந்­திய பொரு­ளா­தா­ரம் ஐந்து சத­வீ­த­மாக குறைந்­து­விட்­டது. ஆங்­காங்கே வேலை­யி­ழப்பு ஏற்­பட்டு வரு­கி­றது. இந்த சூழ­லில் பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளில் கைநி­றைய சம்­ப­ளம் வாங்­கி­னா­லும் மாதக் கடை­சி­யில் நண்­பர்­க­ளி­டம் நிதி­யு­தவி கேட்­கும் நிலை­யில் பல­ரும் இருக்­கி­றார்­கள். கிரெ­டிட் கார்­டு­க­ளைப் பயன்­ப­டுத்தி நினைத்­த­தெல்­லாம் வாங்­கு­கி­றார்­கள். மாத சம்­ப­ளம் வாங்­கி­ய­தும் அதில் பெரும்­ப­குதி மாதத்­த­வ­ணைக்கே போய்­வி­டு­கி­றது. அதன்­பின் அன்­றாச்­செ­ல­வு­க­ளுக்­குப் பற்­றாக்­குறை ஏற்­ப­டு­வ­தால் கூடு­த­லா­கக் கடன் வாங்க வேண்­டி­யி­ருக்­கி­றது. இப்­ப­டி­யா­கச் சிறு­கச் சிறுக கடன் சேர்ந்து ஒரு­கட்­டத்­தில் பெரி­ய­ள­வில் கழுத்தை நெறிப்­பது போலா­கி­றது. மாதச் சம்­ப­ள­தா­ளர்­கள் எப்­படி பட்­ஜெட் போட்டு செல­வ­ழிப்­பது, வங்­கிக் கடன்­களை எப்­படி நிர்­வி­கிப்­பது என நிதி ஆலோ­ச­கர் சொக்­க­லிங்­கம் பழ­னிப்­ப­னி­டம் கேட்­டோம்.

"பொது­வாக மாதாந்­த­ரச் சம்­ப­ளம் வாங்­கும் நடுத்­தர வர்க்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் தங்­கள் வரு­மா­னத்­தைத் திட்­ட­மிட்டு நிர்­வி­கிக்க 50 சத­வீ­தம், 20 சத­வீ­தம், 30 சத­வீ­தம் என்ற பட்­ஜெட் முறை­யைப் பின் பற்ற வேண்­டும். இதன் அர்த்­தம் என்­ன­வென்­றால் ஒரு­வ­ரு­டைய வரு­மா­னத்­தில் 50 சத­வீத தொகையை மட்­டுமே  வீட்­டுக்­க­டன், வாக­னக்­க­டன் உள்­ளிட்ட மாதந்­த­ரத் தவ­ணை­க­ளைக்­குச் செல­வ­ழிக்க வேண்­டும்.  20 சத­வீ­தம் சேமிப்­பாக இருக்க வேண்­டும். இந்த சேமிப்­பில் முத­லீ­டு­க­ளும் அடக்­கம். 30 சத­வீ­தம் குடும்­பத்­துக்­கான அன்­றா­டச் செல­வு­க­ளுக்­கா­னது. இந்த கணக்­கீட்­டின் அடிப்­ப­டை­யில் வரு­மா­னத்­தைப் பகிர்ந்து செல­வி­செய்­தால், உங்­க­ளுக்கு நிதித் தட்­டுப்­பாடே இருக்­காது. வாழ்க்­கை­யும் பிரச்னை இல்­லா­மல் பய­ணிக்­கும்.

தேவை – விருப்­பம்

வாழ்க்­கை­யில், தேவை என்­ப­தற்­கும் விருப்­பம் என்­ப­தற்­கு­மான வித்­தி­யா­சம் தெரிய வேண்­டும். தேவை என்­ப­தில் உணவு, உடை, வீட்­டுப் பயன்­பாட்­டுப் பொருட்­கள், போக்­கு­வ­ரத்­துச் செலவு உள்­ளிட்­டவை அடங்­கும். விருப்­பம் என்­பது தேவை­யைத் தாண்டி, வாங்­கக் கூடி­யவை. எடுத்­துக்­காட்­டாக ஒரு வாக­னம் வைத்­தி­ருப்­பது தேவை என்­றால் இன்­னோரு வாக­னம் வாங்­கு­வது விருப்­பம் என்ற வகை­யில் வரும். வசிப்­ப­தற்கு ஒரு வீடு இருப்­பது தேவை. இன்­னோரு வீடு வாங்­கு­வது விருப்­பம். இந்த வித்­தி­யா­சத்­தைப் புரிந்­துக்­கொண்­டாலே, நமது மாதாந்­தர பட்­ஜெட்டை சிறப்­பாக வகுக்­க­லாம். இந்த அடிப்­ப­டையை குடும்­பத் தவை­ரும், குடும்ப தலை­வி­யும் புரிந்­துக்­கொள்ள வேண்­டும்.

மாதாந்­தர தவணை உய­ரா­மல் பார்த்­துக்­கொள்­ளுங்­கள்

முன்பு சொன்­னது போலவே, திட்­ட­மிட்­ட­படி, 50 சத­வீ­தம் வரு­மான அள­வுக்­குள் உங்­க­ளு­டைய மாதத்­த­வணை இருக்­கும் சூழ­லில், திடீ­ரென வங்­கிக்­க­ட­னுக்­கான வட்டி விகி­தம் உயர்த்­தப்­பட்­டால் தவ­ணைக்­கான ஒதுக்­கீ­டும் அதி­க­ரிக்­கக் கூடும். அத்­தை­கைய சூழ­லில் ஒரு நிதி ஆலோ­ச­கரை அணுகி அதை சரிப்­ப­டுத்த முயற்சி செய்­ய­லாம். அடுத்­தத்­தாக வங்­கிக் கட­னைத் திரும்­பிச் செலுத்­து­வ­தற்­கான ஆண்­டு­களை அதி­க­ரிப்­ப­தால் மாதத் தவ­ணைத் தொகை உய­ரா­மல் பார்த்­துக் கொள்­ள­லாம். அல்­லது உங்­க­ளு­டைய வங்கி வைப்புநி­தி­யில் பணம் இருந்­தால் அதைக் கடன் சுமை­யைக் குறைக்­கப் பயன்­ப­டுத்­த­லாம். இதன்­மூ­லம் மாதத்­த­வணை உய­ரா­மல் பார்த்­துக் கொள்­ள­லாம். இது கட­னி­லி­ருந்து தப்­பிக்க ஒரு வழி.

ஆறு மடங்கு வைப்பு நிதி­யில்

பொது­வாக சம்­ப­ள­தா­ரர்­கள் தங்­க­ளு­டைய மாத சம்­ப­ளத் தொகை­யை­விட ஆறு­ம­டங்கு தொகையை வங்கி வைப்­பு­நி­தி­யிலோ, லிக்­விட் பண்­டிலோ, சேமிப்­புக் கணக்­கிலோ வைத்­துக்­கொள்­வது நல்­லது. ஏதே­னும் அவ­ச­ரத் தேவை அல்­லது பணி­யி­ழிப்பு போன்ற நேரங்­க­ளில் இது கைக்­கொ­டுக்­கும். கூடு­மா­ன­வரை தனி­ந­பர் கட­னைத் தவிர்க்க வேண்­டும். ஏனெ­னில் இதற்கு வட்டி விகி­தம் அதி­கம்.  இவை வாழ்க்­கைக்­கான முக்­கிய பார்­முலா ஆகும்.

பொது­வாக என்ன செய்­ய­வேண்­டும் என்­றால் தனி­ந­பர் கடன் வாங்­க­வேண்­டிய கட்­டா­யம் வரும்­பட்­சத்­தில் ஏற்­க­னவே இருக்­கும் வீட்­டுக் கட­னோடு சேர்த்து டாப்­அப் லோன் வாங்­கு­வது நல்­லது. இதற்­கான வட்டி விகி­தம் தனி­ந­பர் கட­னுக்­கான வட்­டி­வி­கி­தத்­தை­விட குறை­வாக இருக்­கும். தனி நபர் கட­னுக்­கான வட்டி செலுத்­தா­மல் போனால் வட்டி அச­லோடு சேர்ந்து கடன் தொகையை அதி­க­ரிக்க செய்­து­வி­டும்.

வட்டி விகி­தத்தை சரி­பா­ருங்­கள்

கடன் வாங்­கி­ய­வர் வங்­கிக்­க­ட­னுக்­கான வட்டி விகி­தம் என்ன என்­பதை மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு­முறை சரி­பார்த்­துக்­கொள்ள வேண்­டும். வட்­டி­வி­கி­தத்தை அதி­கப்­ப­டுத்­து­வ­தா­கத் தெரிந்­தால் உங்­க­ளு­டைய சேமிப்­பி­லி­ருந்து பணத்­தைக் கொடுத்து கடன் தொகை­யைக் குறைக்­க­லாம். அல்­லது வங்கி மேலா­ள­ரு­டன் பேசி வட்­டி­வி­கி­தத்­தைக் குறைக்­கப் பார்க்­க­லாம். இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் மூல­மாக வீட்டு பட்­ஜெட்டை நன்­மு­றை­யில் பார­மா­ரித்து வர­லாம். இது கடன் வாங்­கி­ய­வர் கட்­டா­யம் தெரிந்­துக்­கொள்ள வேண்­டிய ஒன்­றா­கும்.

நாம் அனை­வ­ரும் அரிந்­துக்­கொள்ள வேண்­டி­யது. இன்­றைய வாழக்கைச் சூழ­லில் எவ்­வ­ளவு சம்­பா­திக்­கி­றோம் என்­ப­தை­விட எப்­ப­டித் திட்­ட­மிட்டு அதைப் பயன்­ப­டுத்­து­கி­றோம். என்­ப­தில்­தான் ஒரு­வ­ரின் வளர்ச்சி இருக்­கி­றது. எனவே, நிதி நிர்­வா­கத்­தைத் திறன்­பட செயல்­ப­டுத்தி வாழ்­வின் அடுத்த வளர்ச்சி நிலையை நோக்கி பய­ணிப்­ப­தில் தெளி­வோடு இருக்­க­வேண்­டும். நிதி நிர்­வா­கத்­தில் ஏதே­னும் குழப்­பம் இருந்­தால் நிதி ஆலோ­ச­க­ரின் உத­வியை நாட தயங்க வேண்­டாம். இது வாழ்க்­கையை வள­மாக்­கும் வழி­யா­கும்.