வெள்ளை மனதுடன் இருந்தால் முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: தினகரன் பேட்டி

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 14:40

சென்னை, 

  வெள்ளை மனதுடன்தான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெள்ளை அறிக்கை கேட்கின்றன என்றும், வெள்ளை மனது இருந்தால் முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமமுக துணைபொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர்களின் நன்மதிப்பை முதல்வர் பெற்றதை எதிர்க்கட்சித் தலைவரால் பொறுக்க முடியவில்லை என்றும், வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என்று மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமமுக துணைபொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெள்ளை மனதுடன் தான் வெள்ளை அறிக்கை கேட்கின்றன.  வெள்ளை மனதுடன் இருந்தால் முதலீடு குறித்து முதல்வர்

வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டிடிவி. தினகரன் கூறினார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அகம்பாவத்தில் பேசுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

முன்னதாக விருதுநகரில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "டிடிவி தினகரனுக்கு இனி அரசியல் வாழ்க்கை கிடையாது. அவர் கூடாரம் காலியாகி விரைவில் திமுகவில் சேர்ந்துவிடுவார்" என்று கூறியிருந் தது குறிப்பிடத்தக்கது.