இன்னமும் நான் ஒரு குழந்தைதான்! – ‘பிரித்வி’ விராட்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019

“பொதுவா, எல்லா சீரி­யல்­கள்­ல­யும் ‘பெண்­களை’ மையமா வச்­சுத்­தான் கதை உரு­வாக்­கப்­ப­டு­றது வழக்­கம். அப்­படி ‘ஆண்­க­ளுக்கு’ முக்­கி­யத்­து­வம் தராத சின்­னத்­தி­ரை­யிலே எனக்கு முக்­கி­யத்­து­வம் தரப்­பட்­டி­ருக்­கி­றதை நினைச்சு ரொம்ப சந்­தோ­ஷப்­ப­டு­றேன்!” என்று ‘குஷி’­யாக சொல்­ப­வர் வேறு யாரு­மல்ல, ‘பேர­ழகி’ ஹீரோ விராட். அவர் ஒரு இசைக்­கு­டும்­பத்தை சேர்ந்­த­வர் என்­பது குறிப்­பி­டப்­ப­ட­வேண்­டிய விஷ­யம்.

அவ­ரு­டைய ‘கெத்’­தான பேட்டி:-

“அப்பா ஒரு போலீஸ் ஆபீ­சர். அவர் பேரு, பர­மேஸ். அம்மா பேரு, குரு­தேவி. நான் அவங்­க­ளுக்கு ஒரே வாரிசு. அத­னால, நான் ஆசைப்­பட்டு எதை கேட்­டா­லும் அது உடனே கிடைச்­சி­டும். அவ்­வ­ளவு செல்­லம் நான். எனக்கு எல்­லாமே அம்­மா­தான். எனக்கு பூர்­வீ­கம், கர்­நா­ட­கம். எங்க குடும்­பம் ஒரு இசைக்­கு­டும்­பம். அம்மா, சித்தி, மாமா அத்­தனை பேருமே நல்ல இசை ஞானம் உள்­ள­வங்க. அதன் கார­ணமா, எனக்­கும் இயற்­கை­யா­கவே இசை மேலே ஈர்ப்பு வந்­தி­டுச்சு. முறைப்­படி இந்­துஸ்­தானி இசையை கத்­துக்­கிட்­டேன். அப்­பு­றம், வீடியோ எடிட்­டிங், விஎப்­எக்ஸ் டிசை­னிங் இதி­லே­யும் ஆர்­வம் ஏற்­பட்டு கத்­துக்­கிட்­டேன். கன்­னட சினி­மா­விலே டிஜிட்­டல் மோஷன் போஸ்­டரை அறி­மு­கப்­ப­டுத்­தி­னதே நான்­தான்.  

   நான் 2006லிருந்து நடிச்­சுக்­கிட்டு இருக்­கேன். ‘பிளாக்’ கன்­னட படத்­திலே செக்­கண்ட் ஹீரோவா அறி­மு­க­மா­னேன். அடுத்­ததா ‘10த் கிளாஸ் ஏ செக்க்ஷன்’ படத்­திலே ஹீரோவா நடிச்­சேன். 2014லிருந்­து­தான் என் முழு கவ­ன­மும் நடிப்பு மேலே பரவ ஆரம்­பிச்­சிச்சு. ‘சுப விவாஹா’ கன்­னட சீரி­யல்­தான் என்­னோட பர்ஸ்ட் சீரி­யல். நடிச்­ச­தோடு பாட­வும் ஆரம்­பிச்­சேன். அதுக்கு நல்ல வர­வேற்பு கிடைச்­சிச்சு.

‘பேர­ழ­கி’க்­காக தமிழ் பேச கத்­துக்­கிட்­டேன். என்­னோட ‘பிரித்வி’ கேரக்­ட­ருக்­கும், ‘காயத்ரி’ கேரக்­ட­ருக்­கும் நிறைய ரசி­கர்­கள் உரு­வா­கிட்­டாங்க. எங்க ரெண்டு பேரோட ரொமான்சை ரொம்ப எதிர்­பார்க்­கி­றாங்க. ‘பேர­ழகி’ ஒரு டிப­ரண்ட்­டான சீரி­யல். ஒரு நல்ல ரொமாண்ட்­டிக் சீரி­யல்.  போகப்­போக, கதை­யிலே நிறைய டுவிஸ்ட்­டு­கள் ரசி­கர்­க­ளுக்கு காத்­தி­ருக்கு.

ஸ்கூல்ல படிக்­கும்­போது நான் பிரில்­லி­யண்ட் ஸ்டூடண்ட்­டெல்­லாம் கிடை­யாது. ஒரு சரா­சரி ஸ்டூடண்ட்­டு­தான். சின்ன பையனா இருக்­கும்­போது ரிமோட் கார் பொம்­மை­கள் மேலே ரொம்ப ஆசை இருந்­துச்சு. அப்போ ஏகப்­பட்ட ரிமோட் கார் பொம்­மை­களை வீட்ல வாங்கி கொடுப்­பாங்க. அந்த பொம்­மை­க­ளெல்­லாம் இன்­னும் எங்க வீட்ல பத்­தி­ரமா நிறைஞ்சு கிடக்கு. அந்த வகை­யிலே இன்­ன­மும் நான்  ஒரு குழந்­தை­யா­தான் இருக்­கேன். அப்­பு­றம், எந்த சோஷி­யல் நெட்­வொர்க்­கு­கள்­ல­யும் என்னை பார்க்­கவே முடி­யாது. அது நேரத்தை வீணாக்­கிற ஒரு விஷ­யம் அப்­ப­டீங்­கி­றது என்­னோட அபிப்­ரா­யம். மத்­த­படி, நிறைய படங்­கள் பார்ப்­பேன். ஒரு நாள் பூரா சினிமா பார்க்­க­வும் நான் ரெடி!

ஆக்­டிங்­கிலே கமல் சார், விக்­ரம் சார் இவங்க ரெண்டு பேரை­யும் தாறு­மாறா பிடிக்­கும். ‘இந்­தி­யன்’ கமல் சாரோட நடிப்பை கண்­ணாடி முன்­னால நின்னு நடிச்சு பார்த்­துட்­டுத்­தான் எந்த சினிமா ஷூட்­டிங்­குக்­கும் நான் போறது வழக்­கம். ‘அந்­நி­யன்’ படத்தை எத்­தனை தடவை பார்த்­தேன்னு ஞாப­க­மில்லே. அவ்­வ­ளவு ரசிச்­சேன்.

ஏ.ஆர். ரஹ்­மான், என்­னோட ஆல் – டைம் பேவ­ரிட் மியூ­சிக் டைரக்­டர். அதே சம­யம் இளை­ய­ராஜா, யுவன் சங்­கர் ராஜா­வோட சாங்க்­சை­யும் ரசிப்­பேன்.  சினி­மா­விலே பாட­ணும்னு ஆசைப்­ப­டு­றேன்.”