அரசியலில் தேன்மொழி!

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019

காதல், மோதல், சிரிப்பு உட்­பட எல்லா அம்­சங்­க­ளை­யும் கொண்ட ‘தேன்­மொழி’ புதிய சீரி­யல் விஜய் டிவி­யில் திங்­கள் முதல் சனி வரை மாலை 3 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. கதி­ர­வன் டைரக்ட் செய்­கி­றார்.

ஒரு அழ­கிய கிரா­மத்­தில் வாழும் தேன்­மொழி, கவ­லை­கள் ஏதும் வைத்து கொள்­ளாத ஒரு சுட்­டிப்­பெண். அப்­பா­வின் அள­வுக்­க­டங்­காத பாசத்தை கொண்ட தேன்­மொழி, சூழ்­நி­லை­கள் கார­ண­மாக கிரா­மத்து பஞ்­சா­யத்து தலை­வர் போட்­டிக்கு நிற்­கி­றாள். தேன்­மொ­ழிக்கு அருள் என்­னும் ஒரு அர­சி­யல் சார்ந்த பணக்­கார வீட்டு பையன்  மீது காதல் ஏற்­ப­டு­கி­றது. அவ­னுக்­கும் தன் மீது காதல் இருப்­ப­தாக நினைத்து கொள்­கி­றாள். தேன்­மொழி தேர்­த­லில் வெற்றி பெறு­வாள் என கணித்து அவளை அரு­ளுக்கு திரு­ம­ணம் செய்து தேன்­மொ­ழியை மரு­ம­க­ளாக ஆக்க நினைக்­கி­றது அரு­ளின் குடும்­பம். தேன்­மொ­ழிக்­கும் அரு­ளுக்­கும் திரு­ம­ண­மா­கி­றது.

அரு­ளுக்கு தேன்­மொழி மீது காதல் மல­ருமா? தேன்­மொழி தனது அர­சி­யல் வாழ்க்­கை­யில் வெற்றி பெறு­வாளா?

தொகுப்­பா­ள­ரும், நடி­கை­யு­மான ஜாக்­கு­லின் தேன்­மொ­ழி­யா­க­வும், அரு­ணாக சித்­தார்த்­தும் நடிக்­கின்­ற­னர்.