அவர் விலையுயர்ந்த காரில் செல்கிறார்!

10 செப்டம்பர் 2019, 06:15 PM

நடிகர் தனுஷ் ‘அசுரன்’ படவிழாவில் பேசும்போது நடிகர்கள் தயாரிப்பாளர்களிடம் சாதாரணமாக சம்பளம் பெற முடிவதில்லை என கூறினார். இது பல தயாரிப்பாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் பேசும்போது ‘‘தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள்’’ என கூறியுள்ளார்.மேலும் மற்றொரு பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் பேசும்போது ‘‘தனுஷ் விலையுயர்ந்த காரில் செல்கிறார். ஆனால் தயாரிப்பாளர் வீட்டு சொத்துக்களை இழந்து நிற்கின்றனர்’’ என கூறியுள்ளார்.