தீபாவளி முன்பே ரிலீஸ்!

10 செப்டம்பர் 2019, 06:13 PM

‘வாலு’ ,‘ஸ்கெட்ச்’ படங்களை தொடர்ந்து விஜய்சந்தர் இயக்கி யுள்ள படம் ‘சங்கத் தமிழன்’. விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். விஜய்யின் ‘பிகில்’, கார்த்தியின் ‘கைதி’ ஆகிய படங்களும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் ‘சங்கத்தமிழன்’ படத்தை தீபாவளிக்கு முன்னதாக ரிலீஸ் செய்ய படக் குழுவினர் திட்டமிட்டு ள்ளார்களாம்.