சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 409 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019

நடி­கர்­கள் : ராம், சாதனா, ஷெல்லி கிஷோர், ‘பூ’ ராமு, ரோகிணி ரகு­வ­ரன், பத்­ம­பி­ரியா மற்­றும் பலர். இசை : யுவன் ஷங்­கர் ராஜா, ஒளிப்­ப­திவு : அர்­பிந்து சாரா, எடிட்­டிங் : ஏ. ஸ்ரீகர் பிர­சாத், தயா­ரிப்பு : கவு­தம் மேனன், ரேஷ்மா கடலா, வெங்­கட் சோம­சுந்­த­ரம், திரைக்­கதை, இயக்­கம் : ராம்.

பட்­டறை ஒன்­றில் வேலை செய்­யும் கூலி தொழி­லா­ளி­யான கல்­யாண சுந்­த­ரம் (ராம்) தன் மக­ளி­டம் உயி­ராக இருக்­கி­றார். அவ­ரது மக­ளான செல்­லம்­மா­விற்கு (பேபி சாதனா) அப்­பா­தான் ஹீரோ. வச­தி­யாக வாழும் தாய், தந்­தை­யின் (ரோகிணி ரகு­வ­ரன், ’பூ’ ராமு) ஆத­ர­வில் கல்­யாண சுந்­த­ரம் தன் மனைவி வடிவு (ஷெல்லி கிஷோர்) மற்­றும் மக­ளோடு வாழ்­கி­றார். மக­ளின் படிப்பு மற்­றும் அத்­தி­யா­வ­சி­ய­மான செல­வு­களை கூட கல்­யாண சுந்­த­ரத்­தால் சமா­ளிக்க முடி­வ­தில்லை. இத­னால் எப்­போ­தும் கல்­யாண சுந்­த­ரம் மனைவி வடி­வும் அவ­ம­திக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

செல்­லம்­மா­விற்கு தான் படிக்­கும் தனி­யார் பள்­ளி­யின் கட்­டுப்­பா­டு­க­ளும், பாட முறை­க­ளும் பிடிக்­க­வில்லை. தன் வய­திற்­கு­ரிய குறும்­பு­ட­னும் எளிய கன­வு­க­ளு­ட­னும் வாழும் செல்­லம்மா படிப்­பில் பின்­தங்­கிய மாண­வி­யாக இருக்­கி­றாள். தேர்­வு­க­ளில் வெற்றி பெற முடி­யா­மல் செல்­லம்­மா­வும், பள்­ளிக்­கட்­ட­ணத்தை கட்ட முடி­யா­மல் கல்­யாணி சுந்­த­ர­மும் தவிக்­கி­றார்­கள். பள்­ளி­யில் ஆசி­ரி­யர்­கள், சக மாண­வர்­கள் என அனை­வ­ரா­லும் செல்­லம்மா ஒதுக்­கப்­ப­டு­கி­றாள். அவ­ளைப் பற்­றிய புகா­ருக்­காக பள்ளி வரும் கல்­யாண சுந்­த­ரம் மக­ளுக்கு ஆத­ர­வாக நிற்­கி­றார். செல்­லம்­மா­வின் வகுப்­பிற்கு வரும் புது ஆசி­ரி­யை­யான எவிட்டா (பத்­ம­பி­ரியா) செல்­லம்­மா­வின் பிரச்­னை­களை புரிந்து கொண்டு அவ­ளி­டம் பிரி­ய­மாக இருக்­கி­றார்.

ஆனால், அவர் பள்­ளியை விட்டு சென்­ற­தும் செல்­லம்­மா­விற்கு பிரச்­னை­கள் தொடர்­கின்­றன. கல்­யாண சுந்­த­ரத்­தின் தந்தை மற்­றும் வெளி­நாட்­டில் வேலை பார்க்­கும் சகோ­தரி என உற­வு­கள் அனைத்­தும் செல்­லம்மா இந்த பள்­ளி­யி­லேயே படிக்க வேண்­டும் என வலி­யு­றுத்­து­கி­றார்­கள். கல்­யாண சுந்­த­ரம் எவ்­வ­ளவு முயன்­றும் பள்­ளிக்­கட்­ட­ணத்­திற்­கான பணத்தை தயார் செய்ய முடி­ய­வில்லை. இத­னால் வீட்­டில் பிரச்­னை­கள் ஏற்­பட, வேலை தேடி வெளி­யூர் செல்­லும் கல்­யாண சுந்­த­ரம் செல்­லம்­மா­விற்கு பிடித்த நாய்க்­குட்­டியை வாங்­கித் தரு­வ­தாக வாக்­க­ளிக்­கி­றான்.  அத­னால் பல பிரச்­னை­களை சந்­திக்க வேண்டி வரு­கி­றது.

தான் தேர்­வு­க­ளில் பெயி­லாகி விட்­ட­தால்­தான் அப்பா வர­வில்லை என்று எண்­ணும் செல்­லம்மா, தன்­னால் அப்பா கஷ்­டப்­ப­டு­வதை எண்ணி வருந்­து­கி­றாள். அப்பா சொன்ன கதைப்­படி ஊரில் உள்ள குளத்­தில் இறங்கி தானும் தங்க மீனாகி விட முடிவு செய்­கி­றாள். ஊர் திரும்­பும் கல்­யாண சுந்­த­ரம் மகள் வரைந்த ஓவி­யத்­தைப் பார்த்து குளத்­திற்கு ஓடு­கி­றார். குளத்­தில் இருந்து காப்­பாற்­றப்­பட்டு கண் விழிக்­கும் செல்­லம்மா தனக்­காக அப்பா வாங்கி வந்­தி­ருக்­கும் நாய்க்­குட்­டி­யைக் கண்டு மகிழ்­கி­றாள்.

உற­வு­க­ளின் எதிர்ப்­பை­யும் மீறி கல்­யாண சுந்­த­ரம் செல்­லம்­மாவை ஆசி­ரியை எவிட்­டா­வின் ஆலோ­ச­னைப்­படி அர­சுப்­பள்­ளி­யில் சேர்க்­கி­றார். அங்­குள்ள மாண­வர்­க­ளோடு நன்­றா­கப் பழ­கும் செல்­லம்மா படிப்­பி­லும் முன்­னே­று­கி­றார். அம்மா, அப்பா கைதட்ட பள்ளி விழா­வில் செல்­லம்­மா­வின் கட்­டு­ரைக்கு முதல் பரிசு கிடைக்­கி­றது. குழந்­தை­களை அவர்­க­ளின் எளிய உணர்­வு­க­ளோடு ஏற்­றுக்­கொள்ள வேண்­டும், மகிழ்ச்­சி­யாக வாழ்­வதே வாழ்­வின் முக்­கிய வெற்றி என அரு­மை­யான கருத்­து­க­ளோடு படம் நிறை­வ­டை­கி­றது.