ரயில்வே துறை போட்டி தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த ரயில்வே போர்டு உத்தரவு

பதிவு செய்த நாள் : 09 செப்டம்பர் 2019 19:40

புதுடெல்லி

ரயில்வே நிர்வாகம் நடத்துகிற தேர்வுகள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், இதனை தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

கட்சி வேறுபாடு இல்லாமல், ரயில்வே நிர்வாகத்திடம் இன்று திமுக தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டனர்.

அதைத் தொடர்ந்து ரயில்வே போர்டு இணை இயக்குனர் டி. ஜோசப் இன்று வெளியிட்டுள்ள உத்தரவின் நகல் கீழே தரப்பட்டுள்ளது. (No.E(NG)I/2018/PM 1/4, New Delhi, dated September 9, 2019, Language of Question Papers for GDCE - Clarification,)

இந்த உத்தரவு பிராந்திய மொழிகளில் ரயில்வேயில் துறைசார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்பதை உறுதி செய்துள்ளது.

ரயில்வே போர்டு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, திமுக போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் - தமிழ் மொழிக்காக தொடர்ந்து திமுக போராடும் எனவும் திமுக தலைவர் மு.க.  ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.