இளைய வயது; பெரிய மனசு!

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2019

இளம் வயதில் வாரியாருக்கு அவரின் தந்தை மல்லையதாசர் வீணை ஒன்றை வாங்கிக் கொடுத்து, ஆனைகவுனி தென்மடம் வரதாச்சாரியாரிடம் பயிற்சிக்கு அனுப்பினார். தினமும் காலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வீணையைச் சுமந்தபடி குருநாதர் வீட்டுக்குச் செல்வார் வாரியார். குருநாதரைக் கண்ட முதல் நாள் அவரது காலில் விழுந்து வணங்கினார். பயிற்சி முடிந்ததும் மீண்டும் காலில் விழுந்தார். '' என்னை இரண்டு முறை சாஷ்டாங்கமாக வணங்குகிறாயே ஏன்?'' எனக் கேட்டார் குருநாதர்.

''பெரியவர்களை எத்தனை முறை வணங்கினால்தான் என்ன... நன்மைதானே உண்டாகும்''என்று பெரிய மனதுடன் பதிலளித்தார். பயிற்சி பெற்ற காலத்தில் தினமும் இரு முறை வணங்க மறந்ததில்லை.