தெரிஞ்சுக்குவோமே!

பதிவு செய்த நாள் : 10 செப்டம்பர் 2019

1. வாமனரின் பெற்றோர்.....

    காஸ்யபர், அதிதி.

2. வாமனருக்கு தானம் செய்த மகாபலி யாருடைய பரம்பரையைச் சேர்ந்தவன்?

    பிரகலாதன்.

3. மகாபலி நடத்திய யாகத்தின் பெயர்.......

    விஸ்வஜித்.

4. வாமனன் மகாபலியிடம் கேட்ட தானம்......

    மூன்றடி நிலம்.

5. உலகளந்த திருமாலின் பாதத்திற்கு அபிேஷகம் செய்தவர்......

    பிரம்மா.

6. வாமனருக்கு தானம் தர வேண்டாம் என தடுத்தவர்........

    சுக்கிராச்சாரியார்.

7. ..... மாறி சுக்கிராச்சாரியார் மகாபலியின் தானத்தை தடுத்தார்.

    வண்டாக.

8. அடியளந்த போது வாமனர் எடுத்த திருக்கோலம்..........

    விஸ்வரூபம்.

9. தானம் அளித்த மகாபலிக்கு திருமால் கொடுத்த பதவி....

    இந்திர பதவி.

10. மகாபலியின் மனைவியின் பெயர்..........

    விந்தியாவளி.