எஸ்.பி.ஐ வங்கி வட்டி விகிதத்தை 10அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 09 செப்டம்பர் 2019 16:32

மும்பை,

   ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான வட்டி விகிதத்தை நாளை முதல் 0.10சதவீதம் குறைப்பதாக இன்று அறிவித்துள்ளது

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  கடனுக்கு அடிப்படையான முதலீட்டுக்கு ஆகும் செலவின் அடிப்படையில் வட்டி விகிதத்தை தீர்மானிக்கிறது,  இந்த அடிப்படையில்  வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் (0.1சதவீதம்) இன்று குறைத்துள்ளது.  ஸ்டேட் வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 8.25 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.  இந்த குறைப்பு நாளை முதல் செப்டம்பர் 10-ம் தேதி அமலுக்கு வரும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

இதன் மூலம் வீடு, வாகனக் கடன், உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம்0.10% குறைகிறது.  அதுபோலவே வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 10 முதல் 25 பைசா வரையில் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா   இன்று அறிவித்துள்ள குறைப்பு 5வது வட்டி குறைப்பாகும்.நடப்பு நிதியாண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இதுவரை 40 அடிப்படை புள்ளிகள் அல்லது0.40 % வட்டியைக குறைத்துள்ளது குறிப்பிட்த் தக்கது.