சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 9–9–19

பதிவு செய்த நாள் : 09 செப்டம்பர் 2019


இந்திய பங்குச் சந்தை நிலவரம்

புதிய புதிய அறி­விப்­பு­கள் வந்து கொண்­டி­ருந்­தா­லும் சந்­தை­க­ளில் பெரிய ஏற்­றங்­கள் இல்லை.  ஒன்று, வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் பங்­கு­களை விற்று பணத்தை எடுத்­துச் செல்­வது இந்த வாரம் மட்­டும் சுமார் 4000 கோடி ரூபாய் அள­விற்கு பங்­கு­களை விற்று பணங்­களை எடுத்­துச் சென்று கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

 இரண்­டா­வது, கடந்த ஆறு வரு­டங்­க­ளில் மிகக்­கு­றை­வான அள­வான ஜிடிபி நம்­பர்.  மூன்­றா­வது,காலாண்டு முடி­வு­கள் சந்தை எதிர்­பார்த்­தது போல இல்­லா­தது.  நான்­கா­வது, ஆகஸ்ட் மாத ஆட்டோ சேல்ஸ் இந்த மாத­மும் திருப்­தி­க­ர­மாக இல்­லா­தது.   இவை­யெல்­லாம் சேர்ந்து சந்­தை­க­ளில் இறக்­கங்­க­ளுக்கு வழி­வ­குத்­துக் கொண்­டி­ருக்­கின்­றன.

பாசி­டிவ் என்ன?

டால­ருக்கு எதி­ராக ரூபாய்   படு­மோ­ச­மாக விழுந்து கொண்­டி­ருக்­கி­றது.  இது ஐடி மற்­றும் பார்­மர் துறை­க­ளுக்கு சாத­க­மாக இருந்­தா­லும் இந்­திய அதிக அள­வில் கச்சா எண்­ணெய்யை இறக்­கு­மதி செய்­வது செய்­வ­தால்  இது பண வீக்­கத்தை கூட்­டும் வாய்ப்­பு­கள் அதி­க­மாக இருக்­கின்­றது.

நல்ல ஐ டி,  ஃபார்மா பங்­கு­கள் தற்­போது முத­லீடு செய்ய தகுந்­தவை.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை 337         புள்­ளி­கள்­கூடி     36981        புள்­ளி­க­ளு­ட­னும், தேசிய பங்­குச் சந்தை  75      புள்­ளி­கள்­கூடி       10946    புள்­ளி­க­ளு­ட­னும் முடி­வ­டைந்­தன.  மும்பை பங்­குச்­சந்­தை­யில் இது கடந்த வாரத்தை விட 351 புள்­ளி­கள் குறை­வா­கும்.

அமெ­ரிக்க சீனா பேச்சு வார்த்தை

அமெ­ரிக்கா, சீனா வர்த்த பேச்சு வார்த்தை அக்­டோ­பர் மாதம் முதல் துவங்­கும் என அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. கடந்த வாரங்­க­ளில் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் வரி­களை விதித்­துக் கொண்­டி­ருந்­தார்­கள். இது சந்­தை­க­ளுக்கு பாத­க­மான செய்­தி­யாக இருந்­தது. தற்­போது அக்­டோ­ப­ரில் பேச்சு வார்த்தை என்­பது ஒரு மகிழ்ச்­சி­யான செய்தி.

வங்­கிப் பங்­கு­கள்

10 பாங்­கு­கள் 4 பாங்­கு­க­ளான செய்தி மார்க்­கெட்­டில் வங்­கிப் பங்­கு­க­ளுக்கு ஒரு நல்ல திருப்­பத்தை தரும் என்ற நம்­பிக்கை இருந்­தது. ஆனால் ஜிடிபி நம்­பர்­கள் 6 வரு­டங்­க­ளில் இல்­லாத குறை­வான ஒரு நம்­ப­ராக இருந்­த­தால் வங்­கிப்­பங்­கு­க­ளில் வரு­மென எதிர்­பார்த்த லாபங்­கள் எல்­லாம காண­மல் போய்­விட்­டன.

பஞ்­சாப் நேஷ­னல் பாங்க் சிறிது சிறி­தாக வாங்­க­லாம்.

யெஸ் பாங்க்

யெஸ் பாங்க் இந்த வாரம் சிறிது ரெக­வரி ஆகி­யது. என்ன கார­ணம் என்று பார்த்­தால் செபி­யி­டம் இருந்து கிடைத்த சிறிய ரிலீப் தான். இத­னால் சுமார் 5 சத­வீ­தம் வரை கூடி­யது குறிப்­பி­ட­தக்­கது. நமக்கு வாச­கர்­க­ளி­ட­மி­ருந்து அதி­கம் கேள்­வி­கள் வந்­தது யெஸ் பாங்க் பற்றி தான். அதா­வது இவ்­வ­ளவு குறை­கி­றதே வாங்­க­லாமா என்று கேட்டு.

நாம் அனை­வ­ருக்­கும் கூறி­யது வாங்க வேண்­டாம் என்­பது தான். கார­ணம் இன்­னும் அங்கு பிரச்­ச­னை­கள் தீர­வில்லை. ஆத­லால் தான் அப்­படி கூறி­னோம்.

வெள்­ளிக்­கி­ழமை

பேட்­டியே அதி­கம் கொடுக்­காத நிர்­மலா சீதா­ரா­மன் தற்­போது வெள்­ளிக்­கி­ழமை தோறும் பேட்டி கொடுக்­கி­றார். சந்தை திங்­க­ளன்று ஏறு­கி­றது. அது மின் பட்­ஜெட்­டா­கவே இருக்­கி­றது.

அறி­விப்­பு­க­ளுக்கு பாக்கி இருப்­பது ஆட்டோ மற்­றும் ரியல் எஸ்­டேட் துறை­கள் தான். ஏதா­வது அறி­வுப்­பு­கள் வர­லாம் என்ற எதிர்­பார்ப்பு பல­ரி­டம் இருக்­கி­றது.

கெட்ட செய்­தி­கள் வரும் நேரம் முத­லீடு செய்ய தகுந்­ததா?

கெட்ட செய்­தி­கள் வரும் நேரத்­தில் தான் பங்­குச்­சந்­தை­க­ளில் முத­லீடு செய்­ய­வேண்­டும் என்­பது அடிப்­படை கோட்­பாடு ஆனால் அது போல யாரும் செய்ய மாட்­டார்­கள்.

என்ன செய்­ய­லாம்?  அடிப்­ப­டை­யில் நல்ல பங்­கு­களை பார்த்து முத­லீடு செய்­ய­லாம். இது­வும் படிப்­ப­டி­யாக செய்­ய­லாம். அது நீண்ட கால அடிப்­ப­டை­யில் நல்ல லாபங்­களை தரும்.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

மேலும் கீழு­மா­கத்­தான் இருக்­கும். மேலே சொன்­னது போல இறக்­கங்­களை ஒரு வாய்ப்­பாக பாருங்­கள். அது நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் லாபம் தரும்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com