ஒரு ஸ்டார்ட் அப் கம்­பெனி ஆரம்­பிக்­கும் முன்பு நீங்­களே கேட்­டு­கொள்ள வேண்­டிய கேள்­வி­கள்

பதிவு செய்த நாள் : 09 செப்டம்பர் 2019

 ஒரு ஸ்டார்ட்­அப் கம்­பெனி ஆரம்­பிக்­கும் முன்பு நீங்­களே கேட்­டுக்­கொள்ள வேண்­டிய கேள்­வி­களை கீழே கொடுத்­துள்­ளோம். இந்­தக் கேள்­வி­க­ளுக்கு உங்­க­ளால் சரி­யாக பதில் அளிக்க முடிந்­தால் நீங்­கள் ஒரு நல்ல சக்­சஸ்­புல் ஸ்டார்ட் அப்  தொழி­ல­தி­ப­ராக மாறு­வ­தற்கு நல்ல வாய்ப்­பு­கள் இருக்­கி­றது.

 ஏன் நீங்­கள் ஒரு தொழி­ல­தி­ப­ராக மாற வேண்­டும் என்று விரும்­பு­கி­றீ­கள்? கார­ணங்­களை பட்­டி­ய­லி­டுங்­கள்.

 உங்­க­ளுக்கு ஸ்டார்ட் அப் மைண்ட் செட் இருக்­கி­றதா? அப்­படி இருக்­கு­மா­னால் அது ஸ்டார்ட் அப் வேலை­யாளி  ஆகும் மனோ­நி­லையா? அல்­லது ஸ்டார்ட் அப் தொழி­ல­தி­பர் ஆகும் மனோ­நி­லையா?

 உங்­க­ளி­டம் இருக்­கும் ஸ்டார்ட் அப் ஐடியா தொழில் ரீதி­யாக வெற்றி பெறுமா என்று சோதனை செய்து பார்த்­துள்­ளீர்­களா? இந்த சோதனை செய்­யா­மல் நீங்­கள் ஒரு கம்­பெனி ஆரம்­பிக்­கும் பட்­சத்­தில் அது உங்­க­ளு­டைய பேங்க் பேலன்சை மிக­வும் கடிக்­கும். கார­ணம் உங்­கள் சோதனை வெற்­றி­க­ர­மாக இல்­லா­மல் போயி­ருக்­க­லாம்.

உங்­க­ளு­டைய முதல் 100 வாடிக்­கை­யா­ளர்­க­ளைப் பெற என்­னென்ன முயற்­சி­கள் எடுக்­க­லாம் என்று தீர்­மா­னித்து உள்­ளீர்­கள்?

உங்­க­ளு­டைய தொழிலை மேம்­ப­டுத்த நினைக்­கும்­போது என்­னென்ன மாதி­ரி­யாக மேம்­ப­டுத்­த­லாம் எப்­படி மேம்­ப­டுத்­த­லாம் என்று தீர்­மா­னித்­துள்­ளீர்­கள்?

நீங்­கள் ஆரம்­பிக்க நினைக்­கும் ஸ்டார்ட் அப் தொழி­லுக்கு என்ன மாதி­ரி­யான முத­லீ­டு­களை பெற நினைக்­கி­றீ­கள்?

உங்­கள் தொழி­லின் ஐந்து வருட லாப நஷ்ட கணக்கு விவ­ரங்­கள்

உங்­க­ளு­டைய ஸ்டார்ட் அப் தொழி­லுக்கு என்ன மாதி­ரி­யாக மார்க்­கெட்­டிங் செய்ய விரும்­பு­கி­றீர்­கள்?

உங்­க­ளு­டைய ஸ்டார்ட்­அப் தொழி­லில் ஒரு­வேளை நஷ்­டம் வரு­மா­னால்,  உங்­க­ளு­டைய தாங்­கும் கெப்­பா­சிட்டி எவ்­வ­ளவு என்ற தீர்­மா­னத்­துள்­ளீர்­களா? அந்த அள­வை­விட தாண்டி தொடர்ந்து முத­லீ­டு­களை செய்து நஷ்­டங்­களை பெறக்­கூ­டாது