ஏற்­று­மதி உல­கம் : இந்­தி­யா­வின் ஜிடி­பி­யும், உள்­நாட்டு உற்­பத்­தி­யும், ஏற்­று­ம­தி­யும்

பதிவு செய்த நாள் : 09 செப்டம்பர் 2019

இந்­தி­யா­வின் ஜிடி­பி­யில் உள்­நாட்டு உற்­பத்தி 60 சத­வீ­தம் வகிக்­கி­றது.  இதி­லி­ருந்து உள்­நாட்டு உற்­பத்­தி­யின் முக்­கி­யத்­து­வத்தை தெரிந்து கொள்­ள­லாம். இவ்­வ­ளவு முக்­கி­யத்­து­வம் உள்­நாட்டு உற்­பத்­தியை சரி­யா­ன­படி உப­யோ­கிக்க வேண்­டும். அப்­போ­து­தான் அந்த உள்­நாட்டு உற்­பத்­தியை தயா­ரிக்­கும் கம்­பெ­னி­கள் பய­ன­டை­யும் நாடும் சுபிட்­சம் ஆகும்.

ஆனால் தற்­போது உள்­நாட்டு உற்­பத்­தி­யில் பிரச்­சனை ஏது­மில்லை. மக்­க­ளி­டம் வாங்­கும் திறன் குறைந்து இருக்­கி­றது அல்­லது வாங்­க­வேண்­டும் என்ற வாங்­கு­வதை  தள்­ளிப்­போட வேண்­டும் என்ற மன­நிலை அதி­க­ரித்து இருக்­கி­றது. இது­தான் விற்­பனை தேகத்­திற்கு கார­ணம்.

 ஆட்டோ செக்­ட­ரில் இருந்து பிஸ்­கட் வரை விற்­பனை தேக்­கம் ஏற்­பட்­டுள்­ளது. அர­சுக்­கும் கவ­லை­ய­ளிக் கடந்த மாத ஏற்­று­மதி புள்ளி வைத்தே தெரிந்து கொள்ள தெரிந்­து­கொள்­ள­லாம் ஏற்­று­ம­திக்­கும் சலு­கை­கள் வழங்­கப்­ப­டும் என அறி­வித்­துள்­ளார்­கி­றது தயா­ரிக்­கும் கம்­பெ­னி­க­ளுக்­கும் கவ­லை­ய­ளிக்­கி­றது.  

இதை சரி­செய்ய ஜிஎஸ்டி வரி­கள் குறைக்­கப்­பட வேண்­டும் என்ற கோரிக்கை எழுந்­துள்­ளது. அதா­வது ஆட்டோ செக்­டா­ருக்கு 28 சத­வீ­தத்­தில் இருந்து 18 சத­வீ­தம் வரை வரி குறைக்­கப்­பட வேண்­டும் என்­றும் மற்ற பொருட்­க­ளுக்­கும் இது­போல ஜிஎஸ்டி வரி குறைக்­கப்­பட வேண்­டு­மென்­றும், அப்­போ­து­தான் விற்­ப­னை­யில் முன்­னேற்­றம் இருக்­கும் என கூறப்­ப­டு­கி­றது.

வாரம் ஒரு­முறை வெள்­ளி­யன்று நிர்­மலா சீதா­ரா­மன் அவர்­கள் நடத்­தும் பத்­தி­ரிக்­கை­யா­ளர் சந்­திப்­பில் பல புதிய அறி­விப்­பு­கள் வெளி­யி­டப் படு­கின்­றன. இன்­னும் பல அறி­விப்­பு­கள் வெளி­யி­டப்­பட இருக்­கின்­றன என­வும் கூறி­யி­ருக்­கி­றார். இத­னால் விற்­ப­னை­யில் இருக்­கும் தொய்வு குறைக்­கப்­ப­டும் என நம்­ப­லாம். ஏற்­று­ம­தி­யி­லும் தேக்­கம் ஏற்­பட்­டுள்­ளது,  இது­வும் சரி செய்­யப்­ப­டும் என கூறி­யி­ருக்­கி­றார்.

ஆயில் மீல் ஏற்­று­மதி குறை­கி­றது? ஏன்?

ஆயில் மீல் ஏற்­று­மதி ஆகஸ்ட் மாதம் 73 சத­வீ­தம், சென்ற வரு­டம் இதே மாதத்தை விட குறை­வாக இருக்­கி­றது. கார­ணம் என்ன? ஆயில் மீல் ஏற்­று­ம­திக்கு குறைந்த பட்ச ஏற்­று­மதி விலையை அர­சாங்­கம் கூட்­டி­யது தான்.

சவுத் கொரியா,வியட்­நாம், தாய்­லாந்து ஆகிய நாடு­கள் இந்­தி­யா­வில் இருந்து அதி­க­ள­வில் இறக்­கு­மதி செய்­கின்­றன.

உற்­பத்தி குறை­வாக இருப்­ப­தா­லும்,உள்­நாட்­டில் ஆயில் மீலுக்கு தேவை­கள் இருப்­ப­தா­லும் ஏற்­று­ம­திக்­கான குறைந்­த­பட்ச விலையை அர­சாங்­கம் கூட்­டி­யி­ருக்­கி­றது.

காலை சாப்­பாட்­டிற்கு ரெடியா?

ப்ரேக்­பாஸ்ட் புட் என்­பது உல­க­ள­வில் இன்­றைய தினத்­தில் பெரிய பிசி­னஸ். காலை­யில் இட்லி, தோசை, வடை, பொங்­கல், பூரி ஆகி­ய­யவை எல்­லாம் ப்ரேக்­பாஸ்ட் என்று இந்­தி­யா­வில் தான் அதி­கம் செல்­லும்­ப­டி­யா­கும். உல­கம் எல்­லாம் பாஸ்ட்­புட்­டில், ரெடி டூ ஈட் ப்ரேக்­பாஸ்ட் உண­வு­க­ளில் தான் அதி­கம் கவ­னம் செலுத்­து­கி­றது. உல­க­ள­வில் அதி­கம் காலை ரெட் டூ ஈட் உணவு தயா­ரிக்­கும் கம்­பெ­னி­களை பார்ப்­போம். ஒரு வேளை அவர்­க­ளி­ட­மி­ருந்து நீங்­கள் வாங்கி விற்­கவோ அல்­லது அவர்­க­ளுக்கு பொருட்­கள் விற்­கவோ அணு­க­லாம்.

Kraft Heinz

Cargill

Unilever

Kashi

B&G Foods

Bob’s Red Mill Natural Foods

Dorset Cereals

Hodgson Mill

Hain Celestial

MOM Brands

Nature’s Path

Kellogg

Weetabix

Back to Nature Food Company

Dr. Oetker

Carman’s Fine Foods

Freedom Foods Group

Quaqer

வால் நட் இறக்­கு­மதி

பெஸ்­டி­வல் சீசன் நெருங்கி வரு­வ­தால் வால் நட் உப­யோ­கம் கூடு­வது வாடிக்கை தான். இந்­தி­யா­வின் வால் நட்­டில் 90 சத­வீ­தம் உற்­பத்தி காஷ்­மீ­ரி­லி­ருந்து தான் நடை­பெ­று­கி­றது. அங்கு தற்­போது மொபைல் போன் களின் உப­யோ­கம் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தால் வால் நட் வியா­பா­ரம் வெகு­வாக குறைந்­துள்­ளது. விலை­யும் சுமார் 35 சத­வீ­தம் கூடி­யுள்­ளது குறிப்­பி­ட­தக்­கது.  அமெ­ரிக்கா, சிலி நாட்டு வால் நட் கள் இந்­திய  விலை­யில் ஒரு கிலோ ரூபாய் 900 வரை இருக்­கி­றது.

தற்­போது தான் காஷ்­மீ­ரி­லி­ருந்து வரத்து தொடங்­கி­யி­ருக்­கி­றது என் கிறார் காஷ்­மீ­ரின் பெரிய வால் நட் வியா­பா­ரி­யும், ஏற்­று­ம­தி­யா­ள­ரும் ஆன வி.கே.சி. நட்ஸ்.