ஒரு பேனாவின் பயணம் – 223 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 09 செப்டம்பர் 2019

ஆனால், சுதந்­திர தேவ­தையை நீங்­கள் எளி­தில் அடைய முடி­யாது. அவள் வழக்­கம் போல தன்னை நாடு­வோ­ரி­ட­மி­ருந்து தியா­கத்­தைக் கேட்­கி­றாள்.

நான் சிறைக்கு வந்து இன்­றோடு மூன்று மாதங்­க­ளா­கின்­றன. மூன்று மாதங்­க­ளுக்கு முன் இதே நாளில் டிசம்­பர் மாதம் 26ம் தேதி­யன்று என்னை ஆறா­வது தட­வை­யாக கைது செய்­தார்­கள். இக்­க­டி­தங்­கள் எழு­து­வதை என்­னால் உடனே ஆரம்­பிக்க முடி­ய­வில்லை. நிகழ்­கா­லம் நம் மனத்­தில் நிறைந்­தி­ருக்­கும்­போது கடந்து போன பழைய காலத்தை பற்றி சிந்­திப்­பது எவ்­வ­ளவு கஷ்­ட­மான காரி­யம் என்­பது உனக்­குத் தெரி­யா­த­தல்ல. வெளி­யில் நடக்­கும் காரி­யங்­க­ளைப் பற்­றிக் கவலை கொள்­வதை விடுத்து அமை­தி­யு­டன் எழுத ஆரம்­பிப்­ப­தற்கு சிறிது காலம் பிடிக்­கி­றது. இனி ஒழுங்­காக எழுத முயல்­வேன். ஆனால், இப்­போது நான் முன் இருந்த இடத்­தில் இல்லை. இந்த இடம் எனக்­குப் பிடிக்­க­வில்லை. என் வேலை­யை­யும், அது சிறிது தடை செய்­கி­றது. அடி­வா­னம் எனக்கு முன்­னை­யி­லும் உயர்ந்­து­விட்­டது. எனக்கு எதி­ரி­லி­ருக்­கும் சுவர், உய­ரத்­தைப் பொறுத்­த­வ­ரை­யி­லா­வது  சீனா­வின் பெரிய மதிலை ஒத்­தி­ருக்­கும் போலும். அதன் உய­ரம்  25 அடி இருக்­கும் என்று நினைக்­கி­றேன். சூரி­யனை ஒவ்­வொரு நாள் காலை­யில் பார்ப்­ப­தற்கு இப்­போது அதி­க­மாக ஒன்­றரை மணி நேரம் ஆகி­றது.

நமது திருஷ்டி சில காலம் கட்­டு­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­லாம். ஆனால் நீலக் கட­லை­யும், வான­ளா­விய மலை­க­ளை­யும், பாலை­வ­னங்­க­ளை­யும் பத்து மாதங்­க­ளுக்கு முன் நீயும் நானும் உன் அம்­மா­வும் செய்த கன­வுப் பிர­யா­ணத்­தை­யும் அது உண்­மை­யா­கவே இப்­போது தோன்­ற­வில்லை. நினைப்­பார்ப்­பது இனி­மை­யாக இருக்­கி­றது.

மார்ச் 28, 1932

 உலக சரித்­தி­ரத்தை நாம் மறு­ப­டி­யும் விட்ட இடத்­தி­லி­ருந்து ஆரம்­பித்து கடந்த காலத்­தைச் சிறிது கவ­னிப்­போம். உலக சரித்­தி­ரம் ஒரு சிக்­க­லான பின்­னல் போன்­றது. அதைப் பிரித்­துத் தனித்­த­னி­யாக அறி­வது மிக­வும் அரிது. அதை முழு­மை­யா­கப் பார்ப்­பது கூட அரி­தா­யி­ருக்­கி­றது. இன்­னொரு அபா­ய­மும் அதில் இருக்­கி­றது. அத­னு­டைய ஒரு சிறு பகு­தியை எடுத்­துக் கொண்டு அதில் நம்மை மறந்து போய் அதன் தகு­திக்கு மீறிய ஒரு முக்­கி­யத்தை நாம் அதற்­குக் கொடுத்­து­வி­ட­லாம். அநே­க­மாக மக்­கள் எல்­லோ­ரும் தங்­கள் தங்­கள் தேச சரித்­தி­ரந்­தான் – அது எந்த தேச­மா­யி­ருந்­தா­லும் சரி – மற்ற தேசங்­க­ளின் சரித்­தி­ரங்­களை விட அதி­கப் பெருமை வாய்ந்­தது என்­றும், கற்க உரி­ய­தென்­றும் எண்­ணிக் கொண்­டி­ருக்­கி­றோம். இத்­த­கைய தவற்றை நீ செய்­யக் கூடாது  என்று நான்  முன்பு ஒரு முறை உன்னை எச்­ச­ரித்­தி­ருக்­கி­றேன். மீண்­டும் அதையே சொல்ல விரும்­பு­கி­றேன். இந்த வலை­யில் விழு­வது மிக­வும் எளிது. இது கூடாது என்­ப­தற்­கா­கத்­தான் நான் உனக்கு இக்­க­டி­தங்­களை எழுத ஆரம்­பித்­தேன். ஆனால், நானே இந்த தவற்றை சில சம­யங்­க­ளில் செய்­வது போல தோன்­று­கி­றது. எனக்கு அளிக்­கப்­பட்ட கல்வி குறை­யு­டை­ய­தா­க­வும், எனக்கு சொல்­லிக் கொடுக்­கப்­பட்ட சரித்­தி­ரம் தலை­கீழ் பாட­மா­க­வும் இருந்­தி­ருப்­பின் என்ன செய்­வது ? அந்­தக் குறையை நீக்­கு­வ­தற்­கா­கவே  நானே சிறை­யின் தனி­மை­யில் என் கல்­வி­ய­றி­வைப் பெருக்­கிக் கொண்­டேன். அதில் ஓர­ளவு வெற்­றி­யும் பெற்­றேன் என்று நினைக்­கி­றேன். ஆனால் இள­மை­யில் நான் என் மனத்­தி­ரை­யில் எழுதி வைத்த மனி­தர்­க­ளை­யும் நிகழ்ச்­சி­க­ளை­யும் பற்­றிய சித்­தி­ரங்­களை என்­னால் அழிக்க முடி­ய­வில்லை. முற்­றும் கற்­கா­த­தால் ஏற்­க­னவே குறை­யு­டை­ய­தாக இருக்­கும் என் சரித்­திர ஞானத்­தில் இந்த சித்­தி­ரங்­க­ளின் சாய­லும் பதிந்­து­வி­டு­கி­றது. ஆகவே, நான் எழு­து­வ­தில் பல பிழை­கள் இருக்­க­லாம். முக்­கி­ய­மாக பல விஷ­யங்­களை எழுத மறந்­து­வி­ட­லாம். முக்­கி­ய­மில்­லாத பல­வற்றை குறிப்­பி­ட­லாம். ஆனால் இக்­க­டி­தங்­கள் சரித்­திர நூல்­க­ளின் ஸ்தானத்தை அடை­வ­தற்­காக எழுந்­தவை அல்ல. இவற்றை உனக்­கும் எனக்­கும் இடையே நிக­ழும் சிறு சம்­பா­ஷ­ணை­க­ளா­கவே நான் மதிக்­கி­றேன். இப்­படி நினைத்­துக் கொள்­வ­தில் எனக்கு ஒரு இன்­பம் உண்­டா­கி­றது. இப்­போ­தி­ருப்­பது போல ஆயிர மைல் தூர­மும் பல திண்­மை­யான சுவர்­க­ளும் உன்­னை­யும், என்­னை­யும் பிரிக்­கா­ம­லி­ருந்­தால் கூட, நாம் இவ்­வாறு பேசிக் கொள்ள முடி­யும்.

 சரித்­தி­ரத்­தில் பெரி­தும் பேசப்­ப­டும், புகழ் நிறுவி சென்ற பல­ரைப் பற்றி நான் எழு­தா­ம­லி­ருக்க முடி­யாது. அவர்­கள் தங்­க­ளுக்­கு­ரிய தனி முறை­யில்  நமது கவ­னத்­தைக் கவ­ரு­கி­றார்­கள். அவர்­க­ளின் மூலம் அவர்­கள் வாழ்ந்த கால இயல்­பை­யும் நாம் தெரிந்து கொள்ள் முடி­கி­றது. ஆனால், சரித்­தி­ரம் என்­பது பெரிய மனி­தர்­கள், அர­சர்­கள், சக்­க­ர­வர்த்­தி­கள் போன்­ற­வர்­கள் சாதித்த காரி­யங்­க­ளின் வர­லாறு மட்­டு­மல்ல. அப்­ப­டி­யா­னால் இப்­போது சரித்­தி­ரம் தன் கடை­யைக் கட்­டிக் கொண்டு போய்­வி­ட­லாம். ஏனெ­னில் உலக அரங்­கத்­தில் மன்­னர்­க­ளும், மன்­னர் மன்­னர்­க­ளும் வந்து கம்­பீர நடை பழ­கு­வது அநே­க­மாக நின்­று­விட்­டது. ஆனால் உண்­மை­யில் பெரி­யோ­ரா­யி­ருப்­போ­ரைக் காட்­டு­வ­தற்கு சிம்­மா­ச­னமோ, கிரீ­டமோ, ஆப­ர­ணங்­களோ, பட்­டப் பெயர்­களோ தேவை­யில்லை.  ஆனால், அர­சர்­க­ளுக்­கும் சிற்­ற­ர­சர்­க­ளுக்­கும், உண்­மையை மறைப்­ப­தற்கு உத­வும் அடை­யாள உடை­க­ளும்  ஆர­வா­ரங்­க­ளும் தேவை­யா­யி­ருக்­கின்­றன. ஏனெ­னில், அவர்­க­ளி­டம் தங்­கள் ராஜ்­ஜி­யம் அல்­லது நாட்­டைத் தவிர வேறொன்­றும் கிடை­யாது. துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக நம்­மில் பலர் இந்த வெளி ஆர­வா­ரத்­தைக் கண்டு மயங்கி ‘மகு­டந்­த­ரித்த மன்­ன­வ­ரெல்­லாம் மாண்­பு­டை­யார்’ என எண்ணி விடு­கி­றோம்.

 அங்­கும் இங்­கும் சில­ரைப் பற்றி கூறு­வது உண்­மை­யான சரித்­தி­ர­மா­காது ஒரு தேச மக்­கள் பாடு­ப­டு­கிற ஜனங்­கள், தங்­க­ளு­டைய உழைப்­பி­னால் சாதா­ரண வாழ்க்­கைக்கு அத்­தி­யா­வ­சி­ய­மான பொருட்­க­ளை­யும் ஆடம்­பர வாழ்க்­கைக்கு வேண்­டிய பொருட்­க­ளை­யும் உற்­பத்தி செய்­ப­வர்­கள். பல வேறு­பட்ட செயல்­கள் புரிந்து தங்­க­ளு­டைய செய­லி­னால் பிற­ரைப் பாதித்­தும்  பிற­ரு­டைய செய­லி­னால் தாங்­கள் பாதிக்­கப்­பட்­டும் வரு­கிற பொது ஜனங்­கள் இவர்­க­ளு­டைய சரி­தை­க­ளைக் கூறு­வ­து­தான் உண்­மை­யான சரித்­தி­ர­மா­கும். இத்­த­கைய மனித சரித்­தி­ரம் உண்­மை­யில் அற்­பு­த­மா­ன­தாக விளங்­கும். மனி­தன் யுக­யு­காந்­த­ரங்­க­ளாக இயற்­கை­யோ­டும், பஞ்­ச­பூ­தங்­க­ளோ­டும், காடு­க­ளோ­டும், காட்டு மிரு­கங்­க­ளோ­டும், எல்­லா­வற்­றிற்­கும் மேலாக தன்­னைச் சுரண்டி தின்று கொழுக்க முய­லும் தன் இனத்­தா­ரில் சில­ரோ­டும் நடத்தி வரும் போராட்­டத்­தின் கதை­யாக அது விளங்­கும். சுருங்­கச் சொல்­லின் மனி­த­னு­டைய வாழ்க்­கைப் போராட்­டத்­தின் கதை­யாக அது முடி­யும்.  மனி­தன் பிழைத்­தி­ருக்க வேண்­டு­மா­னால், உண்ண உண­வும், தங்க இட­மும், உடுக்க உடை­யும் வேண்­டு­மல்­லவா? ஆகவே இவ்­வத்­தி­யா­வ­சி­ய­மான பொருட்­கள் உடை­ய­வர்­கள் மனி­தனை அடக்கி ஆண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள். ஆட்சி புரி­வோ­ரும், எஜ­மா­னர்­க­ளும் வாழ்க்­கைக்கு அத்­தி­யா­வ­சி­ய­மான பொருட்­களை உடை­ய­வர்­க­ளா­க­வும் அல்­லது அவற்­றின் மீது ஆதிக்க செலுத்­து­வோ­ரா­க­வும், அவ்­வா­திக்­கத்­தின் கார­ண­மாக ஜனங்­களை பட்­டினி போட்­டுப் பணிய வைக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளா­க­வும் இருந்­த­ப­டி­யால் அவர்­கள் மக்­கள் மீது அதி­கா­ரம் செலுத்த முடிந்­தது.  ஆகவே, ஒரு சிலர் பெரும்­பா­லான மக்­களை சுரண்டி பிழைக்­கும் விப­ரீ­தக் காட்­சியை நாம் பார்க்­கி­றோம். சிலர் ஒரு வேலை­யும் செய்­யா­மல் நிறைய சம்­பா­திக்­கி­றார்­கள். பல கோடிக்­க­ணக்­கான மக்­கள் நன்­றாக உழைத்­தும் மிக­வும் குறை­வா­கவே சம்­பா­திக்­கி­றார்­கள்.

 ஆதி­யில் வேட்­டை­யா­டித் தனியே திரிந்த காட்­டு­மி­ராண்டி மனி­தன் பின்பு சிறிது சிறி­தாக ஒரு குடும்­ப­மாக மலர்ச்சி அடை­கி­றான். ஒரு குடும்­பத்தை சேர்ந்­த­வர்­கள் கூட்­டா­க­வும் ஒரு­வர் மற்­றொ­ருக்­கா­க­வும் உழைக்­கும் வழக்­கம் ஏற்­ப­டு­கி­றது. பல குடும்­பங்­கள் அல்­லது வீடு­கள் சேர்ந்து ஒரு கிரா­மம் உண்­டா­கி­றது. பல கிரா­மங்­க­ளி­லும் உள்ள வியா­பா­ரி­க­ளும் கைத்­தொ­ழி­லா­ளி­க­ளும் சேர்ந்து சங்­கங்­கள் அமைத்­துக் கொள்­கி­றார்­கள். இவ்­வாறு சிறிது சிறி­தாக  சமூ­கம் என்று வளர்ச்சி பெறு­கி­றது.  ஆரம்­பத்­தில் காட்­டு­மி­ராண்டி நிலை­யில் மனி­தன் தனி­யாக வாழ்ந்­தான். எந்­த­வி­த­மான சமூ­க­மும் இல்லை. அதற்கு அடுத்த நிலை குடும்­பம். அதன் பிறகு கிரா­மம். அதன் பிறகு பல கிரா­மங்­க­ளின் சேர்க்­கை­யா­லா­கிய ஒரு சமூ­கம்.  இந்­தச் சமூ­கம் இவ்­வாறு வளர்ந்த கார­ணம் என்ன?  பிழைப்­புக்­கா­கப் போராட வேண்­டி­யி­ருந்­த­தால்­தான் இந்த வளர்ச்சி ஒத்­து­ழைப்­பும் ஏற்­பட்­டன. யாவ­ருக்­கும் பொது­வான விரோ­தியை தாக்­கு­வ­தா­யி­னும் தனியே இருந்து அதைச் செய்­வதை விட எல்­லோ­ரும் சேர்ந்து செய்­வது அதி­கப் பலன் அளிக்­கக்­கூ­டி­ய­தா­யி­ருந்­தது. இதை­விட வேலை செய்­வ­தில் ஏற்­பட்ட ஒத்­து­ழைப்பு அதிக பல­னைக் கொடுத்­தது. தனி­யாக உழைப்­ப­தை­வி­டப் பலர் கூடி உழைத்­தால் அதி­க­மான உண­வுப் பொருட்­க­ளை­யும் இன்­னும் வாழ்க்­கைக்கு அவ­சி­ய­மான இதர பொருட்­க­ளை­யும் உண்­டாக்­க­லாம். தனக்­காக மட்­டும் வேட்­டை­யா­டிப் பிழைத்து வந்த காட்­டு­மி­ராண்டி நிலை­யி­லி­ருந்து மக்­கள் கூடி வேலை செய்ய தலைப்­பட்­ட­வு­டன் அந்த வேலை­யில் ஏற்­பட்ட ஒத்­து­ழைப்­புக் கார­ண­மாக அவர்­கள் பொரு­ளா­தா­ரத்­து­றை­யி­லும் வளர்ச்சி பெற்று வந்­தார்­கள். மனி­தன் பிழைப்பை உத்­தே­சித்­துச் செய்­யும் முயற்சி பெரு­கப் பெருக  பொரு­ளா­தா­ரத் துறை­யில் ஏற்­பட்ட இவ்­வ­ளர்ச்­சி­தான் சமூ­கம் என்று ஒன்று உண்­டா­வ­தற்­கும் அது வளர்ச்­சி­யு­று­வ­தற்­கும் கார­ணம் என்று சொல்­ல­லாம். நீண்ட கால­மாக வரும் சரித்­தி­ரத்­தைக் கவ­னித்­துப் பார்த்­தால் அத­னுாடே முடி­வில்­லாத போராட்­டத்­துக்­கும் துன்­பத்­துக்­கும் சில வேளை­க­ளில் பிற்­போக்­குக்­கும் இடை­யில், இவ்­வ­ளர்ச்­சி­யைக் காண­லாம். ஆனால் இவ்­வ­ளர்ச்­சி­யின் பய­னாக உல­கம் முன் இருந்­ததை விடப் பிர­மா­த­மாக முன்­னேற்­றம் அடைந்­து­விட்­ட­தென்றோ அல்­லது அதிக இன்­பம் பொங்­கு­மி­ட­மாக விளங்­கு­கி­ற­தென்றோ சொல்­ல­லாம். ஆனால், எல்லா குற்­றங்­க­ளும் நீங்­கிய உத்­த­ம­மான நிலையை அடை­வ­தற்கு வெகு தூர­மி­ருக்­கி­றது. எதை நோக்­கி­னும் துன்­பத்­துக்­குக் குறை­வில்லை.

 பொரு­ளா­தார வளர்ச்­சி­யும் சமூக வளர்ச்­சி­யும் அதி­க­மாக ஆக ஆக, வாழ்க்­கை­யும் அதி­கச் சிக்­க­லுள்­ள­தாக மாறு­கி­றது. வியா­பா­ர­மும் வர்த்­த­க­மும் பெரு­கு­கின்­றன. பெற்­றுக் கொள்­ப­வ­னி­ட­மும் ஒன்­றை­யும் எதிர்­பா­ரா­மல் பண்­டங்­கள் கொடுத்து வந்­தது போய் பதி­லுக்கு வேறு பண்­டங்­க­ளைப் பெற்­றுக் கொள்­வது  என்­கிற பண்­ட­மாற்று முறை ஏற்­ப­டு­கி­றது. அதன் பிறகு பணம் புழங்க ஆரம்­பிக்­கி­றது. அத­னால் எல்­லா­வி­த­மான பேரங்­க­ளி­லும் பெரிய மாறு­தல் உண்­டா­கி­றது. வாங்­கின பொரு­ளுக்கு பொன் அல்­லது வெள்ளி நாண­யங்­க­ளைக் கொடுப்­பது மிக­வும் சுல­ப­மான முறை­யா­யி­ருப்­ப­தால் வியா­பா­ரம் பெரு­கி­றது. இதற்­குப் பிறகு  ஜனங்­கள் நாண­யங்­க­ளைக் கூட எப்­பொ­ழு­தும் உப­யோ­கிக்­கா­மல் அடை­யா­ளங்­களை உப­யோ­கிக்க ஆரம்­பிக்­கி­றார்­கள். இவ்­வ­ளவு பணம் கொடுக்­கப்­ப­டும் என்று ஒரு காகி­தத்­தின் உறுதி எழு­தப்­பட்­டி­ருந்­தால் அதுவே போதும் என்று கரு­தப்­ப­டு­கி­றது. இவ்­வாறு "பாங்கி நோட்டு’ களும் "பண­மு­றி’­க­ளும் வழங்­கத் தலைப்­ப­டு­கின்­றன. அதா­வது, பணம் கொடுக்­கப்­ப­டும் என்­கிற நம்­பிக்­கை­யின் மீது கடன் வியா­பா­ரம் செய்­யப்­ப­டு­கி­றது என்­பது அர்த்­தம் ( doing business on credit). இந்த நம்­பிக்­கை­யின் கார­ண­மா­க­வும் வியா­பா­ர­மும் வர்த்­த­க­மும் விருத்­தி­ய­டை ­கின்­றன. இக்­கா­லத்­தில் நோட்­டு­க­ளும் பண­மு­றி­க­ளும் அதி­க­மாக உப­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­பது உனக்­குத் தெரிந்­ததே. தெரிந்­த­வர் பொற்­கா­சு­கள் அல்­லது வெள்­ளிக் காசு­கள் கொண்ட பைக­ளைத் தூக்­கிக் கொண்டு போவ­தில்லை.

ஆகவே சரித்­திர ஆதி­கா­லத்தை விட்டு முன்­னே­றிச் செல்­லச் செல்ல மனி­தர்­கள் அதி­க­மா­கப் பொருட்­களை உற்­பத்தி செய்­கி­றார்­கள். ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு வியா­பா­ரத்தை எடுத்­துக் கொண்டு அதைச் செம்­மை­யா­கச் செய்­கி­றார்­கள். பிற­ரி­ட­மி­ருந்து பொரு­ளைப் பெற்­றுக் கொண்டு தங்­க­ளி­ட­முள்ள பொரு­ளைக் கொடுக்­கி­றார்­கள். இவ்­வாறு வியா­பா­ரம் விருத்­தி­ய­டை­கி­றது என்று நாம் காண்­கி­றோம். புதி­ய­ன­வும் சிறந்­த­ன­வு­ம­னான போக்­கு­வ­ரத்து சாத­னங்­கள் வளர்ச்­சி­யு­று­வ­தை­யும் நாம் காண்­கி­றோம். சிறப்­பாக, நீராவி இயந்­தி­ரம் வந்த பிறகு, கடந்த நூறு வரு­ஷங்­க­ளில்  இவை அதி­க­மாக விருத்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றன. பொரு­ளின் உற்­பத்தி அதி­க­மா­னால் உல­கின் செல்­வ­மும் அதி­க­மா­கி­றது. அத­னால் சில­ருக்­கா­வது அதிக ஒய்வி கிடைக்­கி­றது. இவ்­வா­றாக ‘நாக­ரி­கம்’ என்­பது தோன்றி வளர்­கி­றது.

இவை­யெல்­லாம் சாத்­தி­ய­மா­கி­விட்­டன. நாம் வாழும் இக்­கா­லம் கல்­வி­ய­றி­வி­லும் கலை­க­ளி­லும், விஞ்­ஞா­னத்­தி­லும் முற்­போக்­கு­டை­ய­தாக விளங்­கு­கி­ற­தென்­றும் தற்­கால நாக­ரீ­கம் சாதித்­துள்ள அதி­ச­யங்­கள் பல என்­றும் பலர் வான­ளா­வப் புகழ்ந்து சொல்­கி­றார்­கள். ஆயி­னும், ஏழை­கள் ஏழை­க­ளா­கவே இருந்து கஷ்­டப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். பெரிய தேசங்­கள் ஒன்­றோ­டொன்று போரிட்­டுக் கொண்டு கோடிக்­க­ணக்­கான மக்­க­ளைக் கொன்று குவிக்­கின்­றன. நமது தேசத்­தைப் போன்ற பெரிய தேசங்­கள் இன்­னும் அந்­நி­ய­ரால் ஆளப்­பட்டு வரு­கின்­றன. நமது சொந்த வீட்­டில் நமக்கு சுதந்­தி­ரம் இல்­லா­த­போது நாக­ரி­கத்­தால் நமக்கு என்ன  பயன்?  ஆனால், நாம் இப்­போது விழித்­தெ­ழுந்து முயற்சி செய்து வரு­கி­றோம்.

கிளர்ச்சி மிகுந்த இக்­கா­லத்­தில் வாழ நாம் எவ்­வ­ளவு பாக்­கி­யம் செய்­தி­ருக்­கி­றோம்! இந்­தியா மட்­டு­மன்றி  உல­கம் முழு­வ­துமே மாறு­த­ல­டைந்து கொண்­டி­ருப்­பதை நாம் பார்க்க முடி­வ­தோடு இந்­தப் பெரிய நாட­கத்­திலே நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் பங்கு எடுத்­துக் கொள்­ளக்­கூ­டி­ய­வர்­க­ளா­க­வும் இருக்­கி­றோம். நீ அதிர்ஷ்­டம் மிகுந்த பெண். ரஷி­யா­வில் புது சகாப்­தத்­தைத் தோற்­று­வித்த புரட்சி தோன்­றிய அதே வரு­ஷத்­தில், அதே மாதத்­தில் நீ பிறந்­த­தோடு உன் சொந்த நாட்­டி­லேயே இப்­போது நடக்­கும் புரட்­சி­யை­யும் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றாய். சீக்­கி­ரத்­தில் நீ அதில் பங்கு எடுத்­துக் கொள்­ள­வும் கூடும். உல­கம் முழு­வ­தி­லும் கொந்­த­ளிப்­பை­யும் மாறு­த­லை­யும் காண்­கி­றோம். கீழ்க் கோடி­யிலே ஜப்­பான், சீனா மீது பாய்­கி­றது. மேற்கே, ஏன் உல­க­மெங்­கி­னும், பழைய முறை ஆட்­டம் கொடுத்­துக் கீழே விழுந்து விடும் போலி­ருக்­கி­றது. ஆயு­தப் பரி­க­ரத்­தைப் பற்றி பல நாடு­க­ளில் பேசு­கி­றார்­கள். ஆனால், ஒவ்­வொரு நாடும் பிற நாடு­க­ளின் மீது சந்­தே­கம் கொண்டு பூரண ஆயுத பலத்­தைத் திரட்­டிக் கொண்­டி­ருக்­கி­றது.

( தொட­ரும்)