அகிலேஷ் சைக்கிள் மீண்டும் ஓடுமா?

பதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2019

லக்­னோ­வில் உள்ள சமாஜ்­வாதி கட்சி அலு­வ­ல­கம் வெறிச்­சோடி கிடக்­கி­றது. தேர்­த­லில் தோல்வி அடைந்த பிறகு, யாரும் வரு­வ­தில்லை. சென்ற லோக்­சபா தேர்­த­லில் சமாஜ்­வாதி கட்சி ஐந்து தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றது. தேர்­தல் முடிந்து மூன்று மாதங்­கள் முடிந்து விட்­டது. ஆனால் இது வரை தேர்­தல் தோல்வி குறித்த ஆலோ­சனை கூட்­டம் நடக்­க­வில்லை. கட்சி அலு­வ­ல­கத்­திற்கு வரும் தொண்­டர்­கள், கட்சி தலை­வர் அகி­லேஷ் யாதவ்வை பார்க்க முடி­ய­வில்லை என்­கின்­ற­னர்.

 அகி­லேஷ் யாதவ் கட்­சிக்கு இருந்த தோற்­றத்தை மாற்­று­வ­தற்கு ஏழு வரு­டங்­கள் மாநி­லம் முழு­வ­தும் பய­ணம் மேற்­கொ­ண­டார். தற்­போது அவ­ரது அர­சி­யல் எதிர்­கா­லம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. கடந்த லோக்­சபா தேர்­த­லில் கட்சி மோச­மாக தோல்வி அடைந்­தா­லும் கூட, அவ­ரது மனைவி டிம்­பிள் உட்­பட அவ­ரது குடும்­ப­தைச் சேர்ந்த மூன்று பேர், அவ­ரது அந்­தஸ்தை நிலை­நாட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டும் என்­கின்­ற­னர்.

உத்­த­ர­பி­ர­தே­சத்­தில் சமாஜ்­வாதி கட்சி நிர்­வா­கி­கள் கூண்­டோடு நீக்­கப்­பட்­டுள்­ள­னர். அதே போல் டில்­லி­யி­லும் நீக்­கப்­பட்­டுள்­ள­னர். இது பற்றி இரண்டு வித­மான கருத்­துக்­கள் நில­வு­கின்­றன. இத­னால் கட்­சியை மாற்றி அமைக்க முடி­யுமா. கட்சி தொண்­டர்­கள் மத்­தி­யில் விரக்தி ஏற்­ப­டுமா என்ற இரு கருத்­துக்­கள் ஏற்­பட்­டுள்­ளன. அகி­லேஷ் யாதவ் கட்சி வேலை செய்­யா­மல் பணம் சம்­பா­திப்­ப­தில் குறி­யாக இருந்த நிர்­வா­கி­களை நீக்­கி­யுள்­ளார். பத­வியை இழந்­த­வர்­கள் அகி­லேஷ் யாதவ்­வி­டம் நல்ல பெயர் சம்­பா­திக்க முயற்­சிப்­பார்­கள் என்­கின்­ற­னர். இது உண்­மை­தான். இளை­ஞர்­கள் அகி­லேஷ் பக்­கம் இருக்­கின்­றோம் என்று கூறு­கின்­ற­னர். அவரை சுற்றி இருப்­ப­வர்­கள்  கட்­சிக்கு அகி­லேஷ் முக்­கி­யம். அவர் அர­சி­யல் ரீதி­யாக மீண்டு எழு­வேண்­டும் என்­கின்­ற­னர். மற்­றொரு சாரார் கட்சி அமைப்­பு­கள் இல்­லா­மல் எதிர்­கட்­சி­யாக செயல்­ப­டு­வது கடி­னம் என்­கின்­ற­னர். இடைத் தேர்­தல், உள்­ளாட்சி தேர்­தல்­களை நடை­பெற உள்­ளன. இந்த தேர்­தல்­க­ளில் சுய­நல சக்­தி­கள் தங்­கள் சுய­லா­பத்­திற்­காக செயல்­பட்டு, கட்­சியை மீண்­டும் அழி­வுப்­பா­தைக்கு கொண்டு செல்­லும் ஆபத்­தும் உள்­ளது என்­கின்­ற­னர்.

அகி­லேஷ் யாதவ்­விற்கு அவ­ரது குடும்­பத்­தில் இருந்தே சவால்­க­ளும், எதிர்ப்­பும் உள்­ளன. அவ­ரது சித்­தப்பா சிவ்­பால் சிங் யாதவ், பிர­கா­தி­சில் சமாஜ்­வாதி கட்சி (லோகியா) என்ற தனிக்­கட்­சியை தொடங்­கி­யுள்­ளார். அகி­லேஷ் யாதவ் தந்தை முலா­யம் சிங் யாதவ் சோஷ­லிஸ்ட் கருத்தை மைய­மாக வைத்து அர­சி­யல் நடத்­தி­னார். ஆனால் இதற்கு மாறாக அகி­லேஷ் யாதவ் வளர்ச்­சியை மைய­மாக வைத்து அர­சி­யல் நடத்­தி­னார். இந்த மாற்­றம் பற்றி லக்­னோ­வில் உள்ள கிரி இன்ஷ்­டி­யூ­டிட் ஆப் டெவ­லப்­மென்ட் ஸ்டடிஸ் ஆய்வு நிறு­வ­னத்­தின் இணை பேரா­சி­ரி­யர் பிர­சாந்த் திரி­வேதி கூறு­கை­யில், “ அகி­லேஷ் யாதவ் குறிப்­பிட்ட ஜாதியை தாண்டி, எல்லா தரப்பு மத்­தி­ய­தர மக்­க­ளை­யும் மைய­மாக வைத்து அர­சி­யல் நடத்­தி­னார். அவ­ரது திட்­டங்­க­ளான மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக லேப்­டாப் கொடுப்­பது. மெட்ரோ ரயில் போன்­ற­வை­கள் பாரட்­டத்­தக்­கவை. அவர் நிதிஷ் குமார் அல்­லது நவீன் பட்­நா­யக்கை போல் இருக்க வேண்­டும் என்று கரு­தி­னார். இதற்­கான முயற்­சியை அவர் மேற்­கொண்ட போது, அர­சி­யல் போக்கே மாறி­விட்­டது. இத­னால் சமூக நீதிக்­காக கட்­சி­யில் இருந்­த­வர்­கள், அவரை விட்டு வில­கி­விட்­ட­னர். வளர்ச்­சியை எதிர்­நோக்கி இருந்­த­வர்­கள் பா.ஜ.,பக்­கம் போய்­விட்­ட­னர்” என்று தெரி­வித்­தார்.

அகி­லேஷ் யாதவ்வை சுற்றி தவ­றான ஆலோ­ச­கர்­கள் உள்­ள­னர். இவர்­க­ளுக்­கும் மாநில அர­சி­ய­லுக்­கும் எவ்­வித சம்­பந்­த­மும் இல்லை. இவர்­க­ளுக்கு நான்கு சோஷ­லிஸ்ட் தலை­வர்­கள் பெயர் கூட தெரி­யாது. இவர்­கள் அகி­லேஷ் யாதவ்வை கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் சந்­திக்க விடா­மல் குறுக்கே நிற்­கின்­ற­னர் என்று மூத்த தலை­வர்­கள் கூறு­கின்­ற­னர். முன்­னாள் பிர­த­மர் சந்­திர சேகர் மகன் நிராஜ் சேகர் கூறு­கை­யில், “நான் கட்­சி­யின் தேசிய செயற்­குழு உறுப்­பி­ன­ராக இருந்­தும் கூட, அகி­லேஷ்சை சந்­திக்க முடி­ய­வில்லை. அவ­ரி­டம் நேரம் ஒதுக்­கும்­படி கேட்டு பலர் பல வாரங்­கள், மாதங்­கள் காத்­துக்­கி­டக்­கின்­ற­னர். அவ­ரது தந்­தையை உடனே சந்­தித்­து­வி­ட­லாம்” என்று கூறி­னார். சமீ­பத்­தில் சமாஜ்­வாதி கட்­சி­யில் இருந்து வில­கிய நிராஜ் சேகர், பா.ஜ.வில் இணைந்­தார். இவர் மீண்­டும் ராஜ்­ய­சபா உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார்.    

சமாஜ்­வாதி கட்சி நிறு­வ­னர்­க­ளில் ஒரு­வ­ரும், தற்­போது பிர­கா­தி­சில் சமாஜ்­வாதி கட்­சி­யின் செய்தி தொடர்­பா­ள­ரு­மான சந்­திர பிர­காஷ் ராய் கூறு­கை­யில், “அவ­ரது தந்தை போல் எதிர்த்து போரா­டும் குணம் அகி­லேஷ் யாதவ்­வி­டம் இல்லை. 1991ல் அயோத்­தி­யில் கர­சே­வ­கர்­கள் மீது துப்­பாக்கி சூடு நடத்­தப்­பட்­ட­தற்கு பிறகு தேர்­த­லில் சமாஜ்­வாதி கட்சி தோல்வி அடைந்­தது. இதன் முழு பொறுப்­பை­யும் முலா­யம் சிங் யாதவ் ஏற்­றுக் கொண்­டார்.அது கடி­ன­மான நேரம். தேர்­தல் முடி­வு­கள் வந்த ஒரு வாரத்­திற்­குள், கூட்­டத்தை நடத்­தி­னோம். துவண்டு விடு­வது சமாஜ்­வா­தி­கட்­சி­யின் வழக்­கம் அல்ல. ஒவ்­வொரு தேர்­தல் முடிவு அறி­விக்­கப்­பட்ட பிறகு, முடி­வு­கள் கட்­சிக்கு சாத­மாக இல்­லாத போது, முலா­யம் சிங் யாதவ் கட்­சிக்­கா­ரர்­களை ஏன் பார்க்க வர­வில்லை என்று கேட்டு அழைப்­பார். தேர்­தல் முடி­வு­கள் இறுதி முடிவ  அல்ல. நாம் போரா­டு­வ­தற்­கான வாய்ப்பை எதிர்­நோக்கி இருக்க வேண்­டும். இந்த இடை­வி­டாத முயற்­சி­யால் தான், 1993ல் முலா­யம் சிங் யாதவ் மீண்­டும் முத­ல­மைச்­ச­ரா­னார்” என தெரி­வித்­தார்.

“1977ல் முலா­யம் சிங் யாதவ் மாநில கூட்­டு­றவு மற்­றும் கால்­ந­டைத்­துறை அமைச்­ச­ராக இருந்­தார். இது முக்­கி­யத்­து­வம் இல்­லாத துறை. இருப்­பி­னும் அவர் இதை மாநி­லம் முழு­வ­தும் ஆத­ர­வா­ளர்­களை திரட்ட பயன்­ப­டுத்­திக் கொண்­டார். அப்­போது அவர் சோஷ­லிஸ்ட் கட்சி தலை­வர்­க­ளில் ஒரு­வ­ராக கூட இல்லை. ஆனால் அவர் என்­றும் தனக்கு யாரும் உதவி செய்­ய­வில்லை என்று கூறி­ய­தில்லை. அவர் யாரும் எளி­தில் அணுக்­கூ­டி­ய­வ­ராக இருந்­தார். அவர் பிரச்­னைக்கு தீர்வு காணா­விட்­டா­லும் கூட, காது கொடுத்து கேட்­பார். இப்­போது எல்­லாம் மாறி­விட்­டது” என்று அஜம்­கார்க்­கைக் சேர்ந்த சமாஜ்­வாதி கட்சி தலை­வர் ஹவால்­தார் யாதவ் கூறி­னார்.

அகி­லேஷ் யாதவ் பற்றி கூறப்­ப­டும் மற்­றொரு குறை, அவர் உடனே தனது ஆசையை வெளிப்­ப­டுத்தி விடு­வார் என்­பதே. அவர் முத­ல­மைச்­ச­ராக இருந்த காலத்­தில் (2012–2017), மூன்­றரை முத­ல­மைச்­சர்­க­ளில், அவர் பாதி முத­ல­மைச்­சர் என்று கேலி செய்­யப்­பட்­டார். அமைச்­சர்­க­ளான அஜம்­கான், சிவ்­பால் சிங் யாதவ், தர்­மேந்­திரா ஆகி­யோரே மூன்று முத­ல­மைச்­சர்­கள் என்று கூறப்­பட்­ட­னர். முலா­யம் சிங் யாதவ் கூட அதிக அதி­கா­ரங்­க­ளு­டன் இருந்­தார். ஆனால் தனது மகன் அகி­லேஷ்க்கு சாத­க­மா­கவே இருந்­தார். இந்த தோல்­விக்கு கார­ணம் குடும்­பத்­தி­னர், கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளின் ஆலோ­ச­னை­களை அகி­லேஷ் புறக்­க­ணித்­ததே என்­றும் கூறு­கின்­ற­னர்.  

சமாஜ்­வாதி கட்­சி­யின் தோல்­விக்கு பிறகு, வெகு சிலரே பகி­ரங்­க­மாக கருத்து தெரி­விக்க முன்­வ­ரு­கின்­ற­னர். அப்­படி முன்­வ­ரு­ப­வர்­க­ளில் ஒரு­வர் அபர்ணா பிஸ்ட். முலா­யம் சிங் யாதவ்­வின் இரண்­டா­வது மகன் பிர­கித்­தின் மனைவி. அவ­ருக்கு (அகி­லேஷ்) ஆலோ­சனை கூறு­ப­வர்­கள், கட்­சிக்கு நன்மை செய்­ப­வர்­கள் அல்ல. ஓரங்­கட்­டப்­பட்ட மூத்த தலை­வர்­களை மீண்­டும் அழைக்க வேண்­டும். தனி­ந­பர்­க­ளின் அபி­லா­ஷைக்கு கட்­சி­யில் இடம் இல்லை” என்று கூறி­னார்.

அகி­லேஷ் யாதவ்­விற்கு ஆலோ­சனை கூறு­ப­வர்­க­ளில் முக்­கி­ய­மா­ன­வர் ராம் கோபால் யாதவ். இவர் முலா­யம் சிங் யாதவ்­வின் மைத்­து­னர். அத்­து­டன் கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ரும் கூட. கட்­சி­யின் தலை­வர் பத­வி­யில் இருந்து முலா­யம் சிங் யாதவ் நீக்­கப்­பட்­ட­தற்கு ஆத­ரவு தெரி­வித்­த­வர். தேர்­த­லின் போது முலா­யம் சிங் யாதவ் செயல்­ப­டா­மல் இருந்­த­தும், ராம் கோபால் யாதவ் செல்­வாக்கை செலுத்­தி­ய­துமே தோல்­விக்கு கார­ணம் என்­கின்­ற­னர்.

அகி­லேஷ் யாதவ் கட்­சியை புன­ர­மைக்க முயற்சி செய்­யும் போது, அதி­ருப்­தி­யா­ளர்­க­ளின் எதிர்ப்­பு­களை சமா­ளிக்க வேண்­டி­ய­தி­ருக்­கும். சமாஜ்­வாதி கட்­சி­யைச் சேர்ந்த பத்து எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ. தன் பக்­கம் இழுக்க பார்க்­கி­றது என்ற ஐய­மும் உள்­ளது. சமாஜ்­வாதி கட்­சியை விட்டு வில­கி­யுள்ள ராஜ்­ய­சபா உறுப்­பி­னர் சஞ்­சய் சேத் கூறு­கை­யில், “கட்­சியை புன­ர­மைத்து பலப்­ப­டுத்த முலா­யம் சிங் யாதவ்­வின் ஆலோ­ச­னை­கள், செல்­வாக்கு மிக அவ­சி­யம்” என்று தெரி­வித்­தார்.

முலா­யம் சிங் யாதவ்­வின் அர­சி­யல் நட­வ­டிக்­கை­கள் கட்­டுக்­குள் இருக்க வேண்­டும். அவரை தேர்­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டுத்­தா­தற்கு கார­ணம் ஞாபக சக்தி இழப்­பும், எதை பேசு­கின்­றோம் என்று தெரி­யா­மல் பேசு­வ­துமே என்­கின்­ற­னர். இந்த தேர்­தல் தோல்வி, கட்­சிக்கு சுமை­யாக உள்­ள­வர்­களை நீக்­க­வும், மூத்த தலை­வர்­க­ளின் பேரா­சைக்கு முடிவு கட்­ட­வும் வாய்ப்­பாக அமைந்­துள்­ளது என்று அகி­லேஷ் யாதவ் அமைச்­ச­ர­வை­யில் அமைச்­ச­ராக இருந்­த­வர் தெரி­வித்­தார்.

தற்­போது அகி­லேஷ் யாதவ் அமை­தி­யாக இருந்­தா­லும், அவர் தோல்­விக்கு பொறுப்பு ஏற்­றுக் கொண்டு, இதற்­கான கார­ணங்­கள் என்ன என்­பதை கூற­தான் வேண்­டும். இந்­தி­யா­வின் பெரிய மாநி­லம், மத்­திய ஆட்­சியை நிர்­ண­யிக்­கும் மாநி­லம் என்று உத்­த­ர­பி­ர­தே­சம் கரு­தப்­ப­டு­கி­றது. இந்த மாநி­லத்­தில் செல்­வாக்­குள்ள கட்­சி­யாக இருந்த சமாஜ்­வாதி கட்­சி­யின் தலை­வர் அகி­லேஷ் யாதவ், கட்­சியை புன­ர­மைத்து மீண்­டும் பழைய நிலைக்கு கொண்­டு­வ­ரு­வார? அகி­லேஷ் சைக்­கிள் மீண்­டும் ஓடுமா?

நன்றி: தி வீக் வார­இ­த­ழில் பூஜா அஸ்­வதி எழு­திய கட்­டு­ரை­யின்

 உத­வி­யு­டன்.