மேலை நாடு மனப்போக்கில் இருந்து விடுபட வேண்டும்

பதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2019

இந்திய நிலைக்கு தகுந்தாற்போல் தீர்வு தேவை

வேலை­வாய்ப்பை உரு­வாக்­கு­வ­தற்கு மத்­திய அரசு முயற்­சிக்­கி­றது. துர­திஷ்­ட­வ­ச­மாக மத்­திய அரசு ஹார்­வர்ட்­டில் படித்­த­வர்­க­ளையே நம்­பிக் கொண்­டுள்­ளது. இவர்­க­ளின் தவ­றான கொள்­கை­யால் இருக்­கும் வேலை­யும் பறி­போ­கின்­றன. நாம் மேலை நாடு­க­ளைப் போன்ற மனப்­போக்­கில் இருந்து விடு­பட வேண்­டும் என்று பார­திய மஸ்­தூர் சங்­கம் கூறி­யுள்­ளது. பார­திய ஜன­தா­வின் தொழிற்­சங்­க­மான பார­திய மஸ்­தூர் சங்­கம். சமீ­பத்­தில் இதன் தேசிய செயற்­குழு கூட்­டம் நடை­பெற்­றது. அதில் நிதி ஆயோக், இதன் கொள்கை வகுப்­பா­ளர்­கள் ஹார்ட்­வர்ட் சிந்­தனை போக்கு உள்­ள­வர்­க­ளாக இருப்­பது பற்­றிய தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.  

பார­திய மஸ்­தூர் சங்க தலை­வர் சாஜி நாரா­ய­ணன் ரீ டிப் இணை­ய­தள நிரு­பர் ஷோபா வாரி­யா­ருக்கு அளித்த பேட்­டி­யில் பொரு­ளா­தார நிலை, நிதி ஆயோக், மத்­திய அர­சின் கொள்­கை­கள் பற்றி விளக்­கி­னார்.

கேள்வி: தற்­போது இந்­திய பொரு­ளா­தா­ரம் சிக்­க­லில் உள்­ளது. பல்­வேறு துறை­கள் மோச­மான நிலை­யில் உள்­ளன. உற்­பத்தி துறை­யில் 49 சத­வி­கித பங்கு வகிக்­கும் வாகன துறை அதிக அளவு  பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் லட்­சக்­க­ணக்­கா­னோர் வேலை இழந்­துள்­ள­னர். இது எந்த அளவு மோச­மாக உள்­ளது?

பதில்: இத­னால் தான் டில்­லி­யில் சமீ­பத்­தில் நடை­பெற்ற பார­திய மஸ்­தூர் சங்க தேசிய செயற்­குழு கூட்­டத்­தில், இந்த நிலைக்கு கார­ணம் நிதி ஆயோக்­தான் என கடு­மை­யாக விமர்­சித்து தீர்­மா­னம் போடப்­பட்­டது.

கேள்வி: மத்­திய அரசை விமர்­சிக்­கா­மல், நிதி ஆயோக்கை ஏன் விமர்­சிக்­கின்­றீர்­கள்?

பதில்: ஏனெ­னில் இந்­தி­யா­வின் எதிர்­கா­லத்தை பற்றி தீர்­மா­னிக்­கும் கொள்­கை­களை வகுக்­கும் மிக உய­ரிய அமைப்பு நிதி ஆயோக். அவர்­க­ளின் கருத்­துக்­கள், அவர்­கள் சார்ந்­தி­ருக்­கும் கருத்­தி­யல் ஆகி­யவை தவ­றா­னவை. எங்­கள் கூட்­டத்­தில் நாடு இது­வரை சந்­திக்­காத அளவு சிக்­கலை சந்­தித்து வரு­கி­றது என்­பதை சுட்­டிக் காட்­டி­னோம். 2012–13ம் ஆண்டு பொரு­ளா­தார ஆய்­வ­றிக்­கை­யி­லும் இந்த நெருக்­கடி சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. நாங்­கள் விமர்­சித்த பிறகு நிதி ஆயோக் துணைத் தலை­வர் ராஜீவ் குமார், இந்த சிக்­கல் நீடிக்­கின்­றது என்று கூறி­யுள்­ளார். அவர் 2012–13ம் ஆண்டு பொரு­ளா­தார ஆய்­வ­றிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டி­ய­தில் இருந்து எவ்­வித முன்­னேற்­ற­மும் இல்லை என்­றும் கூறி­யுள்­ளார்.

கேள்வி: அப்­ப­டி­யெ­னில் நிதி ஆயோக்­கின் பங்கு என்ன என்ற கேள்வி எழு­கி­றதே?

பதில்: இந்த சிக்­க­லான நிலை­மைக்கு எளி­தான விடை இல்லை. அவ­ரின் பதி­லில் இருந்து நாடு சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கும் நெருக்­க­டியை பற்றி அறிந்து கொள்­ள­லாம். அத்­து­டன் நிதி ஆயோக்­கின் குழப்­ப­மான நிலை பற்­றி­யும் அறி­ய­லாம்.

கேள்வி: இந்த நெருக்­க­டிக்கு தீர்வு இல்லை என்று பார­திய மஸ்­தூர் சங்­க­மும் கரு­து­கி­றதா?

பதில்: நிச்­ச­ய­மாக இல்லை. எல்லா பிரச்­னை­க­ளுக்­கும் தீர்வு உண்டு. கொள்கை வகுக்­கும் உய­ரிய அமைப்­பான நிதி ஆயோக், இந்த நெருக்­க­டி­யான நிலைக்கு எளி­தான தீர்வு இல்லை என்று கூறு­கி­றது. அப்­ப­டி­யெ­னில் இதன் அர்த்­தம் என்ன? நிதி ஆயோக் கண்ணை மூடிக் கொண்டு  முடிவு எடுக்­கின்­றதா. இத­னால் தான் தற்­போ­தைய நிலை­யில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டிய நேரம் என்று கூறு­கின்­றோம். இரண்­டா­வ­தாக அவர் இந்த நெருக்­க­டிக்கு மத்­திய அர­சு­தான் கார­ணம் என்­றும் கூறி­யுள்­ளார். அவர் ஜி.எஸ்.டி., பண மதிப்பு இழப்பு, நொடிந்த நிலை மற்­றும் திவால் குறி­யீடு சட்­டம் ஆகி­ய­வையே, தற்­போ­தைய நெருக்­கடி நிலைக்கு கார­ணம் என்று கூறி­யுள்­ளார். ஆனால் இது உண்­மை­யல்ல. கருப்பு பணத்தை ஒழிப்­ப­தற்­காக பண மதிப்­பி­ழப்பு, ஜி.எஸ்.டி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.  தனி­யார் துறை­யின் நிதி ஆதா­ரம் கருப்பு பணத்­தால் மட்­டுமே உள்­ளதா. அப்­ப­டி­யெ­னில், அது மிக­வும் ஆபத்­தா­னது. பார­திய மஸ்­தூர் சங்­கத்தை சேர்ந்த நாங்­கள், ஹார்­வர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் படித்­த­வர்­க­ளால் இந்த குழப்­ப­மும், நெருக்­க­டி­யும் ஏற்­பட்­டுள்­ளது என்று கரு­து­கின்­றோம். நமக்கு  இந்­திய நிலைக்கு தகுந்­தாற்­போல் தீர்வு தேவை. ஹார்­வர்ட் மாதி­ரி­யான தீர்வு அல்ல.

கேள்வி: இந்­தி­யா­வின் கொள்கை வகுப்­ப­வர்­கள் நாட்­டிற்கு வெளியே படித்து, வேலை செய்து இருப்­ப­தால், இங்­குள்ள யதார்த்த நிலையை பற்றி தெரி­ய­வில்லை என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்: ஆம். ஹார்­வர்ட் பல்­க­லை­க­ழ­கம் அல்­லது கொலம்­பியா பல்­க­லைக்­க­ழத்­தில் படித்து, அதன் படி யோசிப்­பதே எல்லா பிரச்­னை­க­ளுக்­கும் கார­ணம். இது முட்­டாள்­த­ன­மா­னது. இந்­தி­யா­வின் சிக்­க­லுக்­கான தீர்வு, இந்­தி­யர்­க­ளி­டம் இருந்து வர வேண்­டும். உதா­ர­ண­மாக தொழிற்­சங்­கம், விவ­சா­யி­கள், சிறு தொழில்­து­றை­யி­னர் ஆகி­யோர் மத்­தி­யில் பணி­யாற்­று­ப­வர்­கள், யதார்த்த கள நில­வ­ரத்தை அறிந்து கொண்­டுள்­ள­னர். மத்­திய அரசு இவர்­க­ளி­டம் யதார்த்த நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்­டும். இப்­படி நடப்­பது இல்லை. சமூ­கத்­திற்­கும், கொள்கை வகுப்­பா­ளர்­க­ளுக்­கும் இடையே தொடர்பே இல்லை. இத­னால் தான் தவ­றான கொள்­கை­கள் முடி­வு­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.    

கேள்வி: தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு என்ன கார­ணம் என்று கரு­து­கின்­றீர்­கள்?

பதில்: மக்­க­ளி­டம் வாங்­கும் சக்தி இல்லை என்­பதே முக்­கிய கார­ணம். மக்­க­ளி­டம் செலவு செய்ய பணம் இல்லை. நீங்­கள் ஊதி­யத்தை , கூலியை உயர்த்­தி­னால், பணப்­பு­ழக்­கம் அதி­க­மா­கும். இத­னால் பொரு­ளா­தார சுழற்சி ஏற்­ப­டும். பொரு­ளா­தார சுழற்சி ஏற்­ப­டும் போது, மக்­கள் செல­வ­ழிப்­பார்­கள். வாங்­கும் சக்தி அதி­க­ரிக்க வேண்­டும் எனில், ஊதி­யத்தை, கூலியை உயர்த்த வேண்­டும். மக்­க­ளி­டம் வாங்­கும் சக்தி இல்­லை­யெ­னில், பொரு­ளா­தார சுழற்சி இருக்­காது. பொரு­ளா­தார சுழற்சி இல்லை எனில், உற்­பத்­தி­யா­ளர்­க­ளால் அதிக ஊதி­யம், கூலி கொடுக்க முடி­யாது.

இதை வேறு மாதி­ரி­யா­க­வும் கூற­லாம். நீங்­கள் ஊதி­யம், கூலியை உயர்த்­தி­னால், மக்­க­ளின் வாங்­கும் சக்தி அதி­க­ரிக்­கும். மக்­கள் பொருட்­களை வாங்­கும் போது, அதன் தேவை அதி­க­ரிக்­கும். இத­னால் உற்­பத்­தி­யும் அதி­க­ரிக்­கும். உற்­பத்தி அதி­க­ரிக்­கும் போது, தொழிற்­துறை வளர்ச்சி அடை­யும். இத­னால் ஒட்டு மொத்த பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­ப­டும். பொரு­ளா­தார வளர்ச்சி ஏற்­ப­டும் போது, தொழிற்­து­றை­யின் வளர்ச்­சி­யும் உய­ரும். இத­னால் தொழி­லா­ளர்­க­ளின் ஊதி­யம், கூலி­யும் அதி­க­ரிக்­கும். இது நல்ல சுழற்சி. தீய சுழற்சி அல்ல. தொழி­லா­ளர்­க­ளுக்கு குறை­வான ஊதி­யம், கூலி கொடுப்­ப­தில் இருந்தே தொழிற்­து­றை­யின் வளர்ச்சி இருக்­கி­றது என்ற முத­லா­ளித்­துவ கொள்­கையே தீய சுழற்­சிக்கு அடிப்­படை. இது தவ­றான கொள்கை. ஊதி­யம், கூலி குறை­வாக இருக்­கும் போது, திறமை இல்­லாத தொழி­லா­ளர்­கள்­தான் கிடைப்­பார்­கள். இது உற்­பத்­தியை பாதிக்­கும்.

கேள்வி: 2017–18 தொழி­லா­ளர் கணக்­கெ­டுப்­பு­படி நிரந்­த­ர­மாக வேலை பார்க்­கும் 45 சத­வி­கித தொழி­லா­ளர்­கள் குறைந்­த­பட்ச ஊதி­யத்தை விட குறை­வா­கவே ஊதி­யம் பெறு­கின்­ற­னர். புதிய தொழி­லா­ளர் கொள்­கை­யில் குறைந்­த­பட்ச ஊதி­யத்­தில் இரண்டு ரூபாய் மட்­டுமே உயர்த்­தப்­பட்­டுள்­ளதே?

இது சரி­யல்ல. புதிய தொழி­லா­ளர் கொள்­கை­யின் படி, கடைக்­கோடி தொழி­லா­ளிக்கு கூட குறைந்­த­பட்ச ஊதி­யம் வழங்­கப்­பட வேண்­டும். புரட்­சி­க­ர­மான புதிய தொழி­லா­ளர் கொள்­கை­யில் ஊதி­யம் நிர்­ண­யிக்­கும் அதி­கா­ரம் தொழிற்­சங்­கத்­தி­டம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. கிரா­மப்­பு­றங்­க­ளில் உள்ள தொழி­லா­ளர்­க­ளுக்கு குறைந்­த­பட்ச ஊதி­யம் வழங்­கப்­ப­ட­வில்லை எனில், அவர் நேர­டி­யாக மாஜிஸ்­தி­ரேட் கோர்ட்டை அணுகி, முத­லா­ளிக்கு, நிறு­வ­னத்­துக்கு எதி­ராக வழக்கு தொட­ர­லாம்.        

கேள்வி: குறைந்த பட்ச ஊதி­யம் பெறாத 45 சத­வி­கித நிரந்­தர தொழி­லா­ளர்­க­ளின் நிலையை, புதிய தொழி­லா­ளர் கொள்கை மாற்­றும் என்­கின்­றீர்­களா?

பதில்: ஆம். புதிய தொழி­லா­ளர் கொள்­கையை பற்றி தொழி­லா­ளர்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்ச்சி ஏற்­ப­டும் போது, அவர்­க­ளின் ஊதி­யம் அதி­க­ரிக்­கும். இத­னால் தொழி­லா­ளர்­க­ளின் வாழ்க்­கைத் தரம் உய­ரும்.

கேள்வி: இந்­திய பொரு­ளா­தார வளர்ச்சி மந்த நிலை­யில் இருப்­ப­தால், பார­திய மஸ்­தூர் சங்­கம் தேசிய செயற்­குழு கூட்­டத்தை கூட்­டி­யதா?

பதில்: ஆம். பார­திய மஸ்­தூர் சங்­கம் நெருக்­கடி இருப்­பதை மத்­திய அர­சின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ர­வும், மத்­திய அரசு கண்ணை மூடிக் கொண்டு இருக்க கூடாது என்­பதை உணர்த்­தவே கூட்­டம் நடத்­தப்­பட்­டது. இந்த நிலையை சமா­ளிக்க மத்­திய அரசு சில நட­வ­டிக்­கையை எடுக்க வேண்­டும்.  1991ல் இருந்து கடை­பி­டிக்­கும் தாரா­ள­ம­ய­மாக்­கம், தனி­யார் மய­மாக்­கம், உலக மய­மாக்­கம் ஆகி­ய­வை­க­ளால் தான் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. எனவே இந்­தி­யா­வுக்கு தகுந்த கொள்­கை­களை கடை­பி­டிக்க வேண்­டும். தங்­கள் நாட்­டிற்கு உகந்த கொள்­கை­களை கடைப்­பி­டித்த பல நாடு­கள் வளர்ச்சி அடைந்­தி­ருப்­பதை பாருங்­கள். சீனா, ரஷியா, வியட்­நாம் போன்ற கம்­யூ­னிச நாடு­க­ளும் கூட, அவை­க­ளுக்கு தகுந்த கொள்­கை­களை கொண்­டுள்­ளன. அந்த நாடு­கள் அனைத்­தும் வளர்ச்சி அடைய, அவை­க­ளுக்கு தகுந்­தாற்­போல் கொள்­கை­களை கொண்­டுள்­ளன.

கேள்வி: நீங்­கள் தவ­றான பொரு­ளா­தார, தொழி­லா­ளர் கொள்­கை­களே, தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு கார­ணம் என்­கின்­றீர்­கள். அப்­ப­டி­யெ­னில், இந்­தியா எந்த மாதி­ரி­யான கொள்­கை­களை கடைப்­பி­டிக்க வேண்­டும்?

பதில்: நமது நாட்­டிற்கு மக்­களை மையப் படுத்­திய பொரு­ளா­தார கொள்கை வேண்­டும்.தற்­போது தொழில் துறை­யி­னர் நான்­கா­வது தலை­முறை தொழிற் புரட்சி பற்றி பேசு­கின்­ற­னர். தொழிற்­சா­லை­க­ளில் மனி­தர்­க­ளுக்கு பதி­லாக செயற்கை நுண்­ண­றிவை பயன்­ப­டுத்தி இயந்­தி­ரங்­களை இயக்­கி­னால் எழும் சூழ்­நி­லையை எதிர் கொள்ள நிதி ஆயோக் தயார் படுத்­திக் கொண்­டுள்­ளதா. நான்­காம் தலை­முறை தொழில் புரட்­சி­யால், தொழிற்­சா­லை­க­ளில் மனி­தர்­களே இல்­லா­மல் உற்­பத்தி செய்­வதை பற்றி பேசு­கின்­ற­னர். வேலை வாய்ப்பை அதி­க­ரிக்க வேண்­டும் என்று கூறு­ப­வர்­கள், நான்­காம் தலை­முறை தொழிற்­பு­ரட்­சியை எதிர் கொள்ள தயா­ராக உள்­ள­னரா. உண்மை என்­ன­வெ­னில், அவர்­கள் எல்­லோ­ரும் இருட்­டில் இருக்­கின்­ற­னர். அத­னால் தான் நாங்­கள் மக்­களை மைய­மாக வைத்து கொள்­கை­களை வகுக்க வேண்­டும் என்­கின்­றோம்.

கேள்வி: 140 கோடி மக்­கள் உள்ள நாடு, நான்­காம் தலை­முறை தொழிற்­பு­ரட்­சியை ஏற்­றுக் கொள்ள முடி­யுமா?

பதில்: இது தான் கேள்வி. இது மனி­தா­பி­மா­ன­மற்­றது. இத­னால் தொழி­லா­ளர்­கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட மாட்­டார்­கள். அவர்­க­ளின் மரி­யாதை கேள்­விக்­கு­றி­ய­தா­கி­வி­டும். தற்­போது எல்லா கொள்­கை­க­ளி­லும் மனி­தா­பி­மா­னம் என்­பது இல்­லா­மல் போய்­விட்­டது. இது முத­லா­ளித்­து­வத்­தின் தனித்­தன்மை. இது நிறுத்­தப்­பட வேண்­டும். எல்லா பிரச்­னைக்­கும் தீர்வு பொரு­ளா­தார சீர்­தி­ருத்த கொள்­கை­களே என்­கின்­ற­னர். அவர்­கள் ஒவ்­வொன்­றுக்­கும் ‘ரேட்­டிங்’ நிறு­வ­னங்­களை நம்­பி­யுள்­ள­னர். மத்­திய அரசு ரேட்­டிங் நிறு­வ­னங்­கள் என்ன கூறு­கின்­றது என்­பதை பார்க்­கா­மல் யதார்த்த நிலையை பார்க்க வேண்­டும்.

கேள்வி: பொரு­ளா­தார சிக்­கல், வேலை இழப்பு பற்­றிய உங்­கள் கவ­லையை தெரி­வித்­தற்கு மத்­திய அர­சின் கருத்து என்ன?

பதில்: யார் கருத்து தெரி­விப்­பது. நிதி ஆயோக்கா? தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­கரா? சிக்­கல் ஏற்­ப­டும் போதெல்­லாம், அவர்­க­ளி­டம் எவ்­வித பதி­லும் இருக்­காது. ஏனெ­னில் அவர்­கள் அனை­வ­ரும் குழப்­பத்­தில் உள்­ள­னர். இந்­தி­யா­விற்கு தெளி­வான பார்வை உள்­ள­வர்­களே தேவை. குழப்­ப­வா­தி­கள் அல்ல. துர­திஷ்­ட­வ­ச­மாக நாம் இப்­போது வேலை வாய்ப்பு இல்லா நிலையை பின்­பற்­று­கி­றோம். இதில் இருந்து முழு­மை­யாக மாற வேண்­டும்.

கேள்வி: நாட்டை ஆளும் அர­சி­யல்­வா­தி­க­ளி­டம் இருந்து பதில் என்ன?

பதில்: நாங்­கள் கூறு­வ­தெல்­லாம், இவர்­களை நம்பி இருக்க கூடாது. அவர்­கள் மக்­க­ளி­டம் தொடர்­பு­டைய அமைப்­பு­க­ளு­டன் கலந்­தா­லோ­சிக்க வேண்­டும். பல்­வேறு பிரச்­னைக்கு தீர்வு காண மக்­களை மைய­மாக கொண்ட அணு­கு­முறை வேண்­டும் என்­பதே.

கேள்வி: நீங்­கள் மத்­திய அரசு மக்­க­ளுக்கு எதி­ரா­னது என்­கின்­றீர்­களா?

பதில்: இல்லை. இல்­லவே இல்லை. மத்­திய அரசு வேலை வாய்ப்பை உரு­வாக்க முயற்சி செய்­கி­றது. ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக ஹார்­வர்ட் அறி­வா­ளி­களை நம்­பி­யுள்­ளது. இவர்­க­ளின் தவ­றான கொள்­கை­யால் வேலை பறி­போ­கின்­றது. மேலை நாடு­க­ளின் கருத்­தோட்­டத்­தில் இருந்து மத்­திய அரசு வெளி­யே­வர வேண்­டும். மேலை­நாட்­டின் கருத்­தோட்­டம், உலக பொரு­ளா­தார சரிவு, ஆசிய பொரு­ளா­தார சிக்­கல் போன்­ற­வை­க­ளால் பாதிக்­கப்­ப­டா­த­வாறு இருந்த,  இந்­தி­யா­வின் இயற்­கை­யான திறனை அழித்­து­வி­டும். 1991ல் இருந்தே திட்­ட­மிட்டு பொதுத்­துறை நிறு­வ­னங்­களை அழித்து வரு­கின்­ற­னர். பொதுத்­துறை நிறு­வ­னங்­களை கரு­ணைக்­கொலை செய்­வது போல் அழித்து வரு­கின்­ற­னர். இதற்கு சிறந்த உதா­ர­ணம் சில வரு­டங்­க­ளுக்கு முன் இலா­பத்­தில் இருந்த பி.எஸ்.என்.எல் நிறு­வ­னமே. தனி­யார் துறை­யு­டன் ஒப்­பி­டும் போது சிறந்த முறை­யில் இயங்­கும் பொதுத்­துறை நிறு­வ­னங்­களை கரு­ணைக் கொலை செய்­வதை நிறுத்த வேண்­டும். பொதுத்­து­றை­யில் 1 கோடியே 76 லட்­சம் பேர் வேலை பார்க்­கின்­ற­னர். தனி­யார் துறை­யில் 1 கோடியே 19 லட்­சம் பேர் மட்­டுமே வேலை பார்க்­கின்­றனர்.

இவ்­வாறு பேட்­டி­யின் போது பார­திய மஸ்­தூர் சங்க தலை­வர் சாஜி நாரா­ய­ணன் கூறி­னார்.

நன்றி: ரீ டிப் இணை­ய­த­ளம்.