அரசியல்மேடை : கைதுகளும் விமர்சனங்களும்...!

பதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2019

எப்­போ­தா­வது மிகப்­பெ­ரிய அர­சி­யல் ஆளு­மை­கள், பிர­ப­லங்­கள் கைது செய்­யப்­ப­டும்­போது, அவை குறித்த எதி­ரும், புதி­ரு­மான விமர்­ச­னங்­கள் வரு­வது சக­ஜ­மாக உள்­ளது.

ஆட்சி, அதி­கா­ரத்­திற்கு வரு­கிற அர­சி­யல் கட்­சி­கள் அனைத்­துமே நாட்­டில் லஞ்ச, ஊழலை அறவே ஒழிப்­போம், எந்த வித முறை­கே­டு­க­ளை­யும் அனு­ம­திக்­க­மாட்­டோம். தவறு செய்­த­வர்­கள் யாராக இருந்­தா­லும், அவர்­கள் எத்­த­கைய பெரிய பொறுப்­பு­க­ளில் இருந்­தா­லும், அவர்­கள் எத்­தனை பெரிய மனி­தர்­க­ளாக, பிர­ப­லங்­க­ளாக இருந்­தா­லும் அவர்­கள் மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுப்­போம் என்­று­தான் ஓங்­கிக் குரல் கொடுக்­கி­றார்­கள்.

ஆனால், இது­வ­ரை­யி­லும் லஞ்ச, ஊழல், முறை­கே­டு­கள் குறைந்­த­பா­டில்லை. ஒரு கட்சி ஆட்­சிக் கட்­சி­யாக இருந்­தால், எதிர்க்­கட்­சி­யி­னர் அந்த கட்­சி­யி­னர் மீதும், ஆட்­சி­யா­ளர்­கள் மீதும் கடு­மை­யான விமர்­ச­னங்­களை, ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைக்­கி­றார்­கள். அடுத்து ஆட்சி மாற்­றம் வந்து பிர­தான எதிர்க்­கட்சி ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன் ஏற்­க­னவே, இவர்­க­ளால் குற்­றம் சுமத்­தப்­பட்­ட­வர்­கள் மீது எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் எடுப்­ப­தில்லை. விதி­வி­லக்­காக ஏதா­வது ஒன்­றி­ரண்டு பேர் மீது நட­வ­டிக்கை எடுப்­பார்­கள். அது­வும் வெறும் கண்­து­டைப்­பா­கவே இருக்­கும். அது­வ­ரை­யி­லும் ஆட்­சிக் கட்­சி­யாக வந்­த­வர்­கள், புதி­தாக ஆட்­சிப் பொறுப்­பேற்ற கட்­சி­யி­னர் மீது புகார் சொல்­வார்­கள். இது காலம் கால­மாக மாறி மாறி வரும் அர­சி­யல் சூழ்­நி­லை­யா­கவே தொடர்­கி­றது. இதற்கு எப்­போது, யாரால் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­ப­டும் என்­ப­தும் மிகப்­பெ­ரும் கேள்­வி­யா­கவே இன்­ற­ள­வும் தொடர்­கி­றது.

இந்­நி­லை­யில், அவ்­வப்­போது ஆங்­காங்கே மாநில அள­வி­லும், தேசிய அள­வி­லும் ஒரு சில புகார்­க­ளின் அடிப்­ப­டை­யில் சில முக்­கிய அர­சி­யல் புள்­ளி­கள், தொழி­ல­தி­பர்­கள் உள்­ளிட்ட பிர­ப­லங்­கள் கைது செய்­யப்­பட்டு, புகார் அடிப்­ப­டை­யில் விசா­ரணை நடத்­தப்­பட்டு தண்­ட­னை­யும் வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த வகை­யில் பீகார் மாநில முன்­னாள் முத­ல­மைச்­சர் லல்லு பிர­சாத் யாதவ், அரி­யான முன்­னாள் முதல்­வர் சவு­தாலா, தமிழ்­நாடு முன்­னாள் முத­ல­மைச்­சர் ஜெய­ல­லிதா, உள்­ளிட்­டோ­ரும், ஒரு சில பிர­மு­கர்­க­ளும்­கூட  புகா­ருக்கு ஆளாகி தண்­ட­னைக்­கும் உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

இந்த நிலை தொடர்ந்து, அர­சி­யல் தூய்­மைப்­பட வேண்­டும், ஆட்சி, அதி­கா­ரத்­தில் உள்­ளோர் நேர்­மை­யாக இருக்க வேண்­டும் என்­பதே மக்­க­ளின் விருப்­பம். இந்த விருப்­பம் நிறை­வேற மத்­திய, மாநில ஆட்சி, அதி­கா­ரத்­தில் இருப்­ப­வர்­கள் நேர்­மை­யும், ஒழுக்­க­மும், நியா­யத்­தின் மீது அக்­கறை கொண்­ட­வர்­க­ளா­க­வும், லஞ்ச ஊழலை, அதி­கார துஷ்­பி­ர­யோ­கத்தை அறவே வெறுப்­ப­வர்­க­ளு­மாக இருக்க வேண்­டும். அதற்­கான சாத்­தி­யக் கூறு­கள் இந்­திய தேசிய அர­சி­ய­லில் தென்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை.

தேச நலன், தலைமை பண்பு, சேவை மனப்­பான்மை, நாட்­டின் மீதும், மக்­க­ளின் மீதும் ஈடு­பா­டும் கொண்ட ஆளு­மை­மிக்க தலை­வர்­க­ளால் மட்­டுமே இவற்றை சாத்­தி­யப்­ப­டுத்த முடி­யும் என்­ப­தும் நாம் அறிந்த ஒன்று.

அண்­மைக்­கா­ல­மாக அர­சி­யல் என்­பது ஒரு மிகப்­பெ­ரிய ‘வியா­பா­ர­மாக’ மாறி வரும் பேரா­பத்­தும் ஏற்­பட்­டி­ருப்­பதை நாம் காண முடி­கி­றது. கொள்கை, லட்­சி­யம், நல்ல நோக்­கம், சித்­தாந்­தம் என்­ப­தெல்­லாம் உடைத்­தெ­றி­யப்­பட்டு, பணத்­திற்­காக, பத­விக்­காக எதை­யும் செய்­ய­லாம் என்ற போக்கு உரு­வா­கி­விட்­டது.

இத்­த­கைய சூழ­லில் அர­சாங்­கமோ, அது சார்ந்த விசா­ரணை அமைப்­பு­களோ ஏதா­வது ஒரு நட­வ­டிக்கை எடுத்­தால் அதற்கு அர­சி­யல் சாயம் பூசப்­ப­டு­கி­றது. மிகப்­பெ­ரிய விசா­ரணை அமைப்­பு­க­ளும், கொஞ்­சம் கொஞ்­ச­மாக நம்­ப­கத் தன்­மை­யை­யும் இழந்து வரு­கி­றது.

இந்த நாட்­டின் பாது­காப்­புத்­துறை அமைச்­ச­ரா­க­வும், நிதித்­துறை அமைச்­ச­ரா­க­வும் செயல்­பட்ட, காங்­கி­ரஸ் மூத்த தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான ப. சிதம்­ப­ரம் மற்­றும் கர்­நா­டக மாநில முன்­னாள் அமைச்­சர் டி.கே. சிவக்­கு­மார் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பது கடும் விமர்­ச­னத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறு­வ­னம் சுமார் 305 கோடி ரூபாய் அள­விற்கு வெளி­நாட்டு மூல­த­னம் பெறு­வ­தற்கு ப.சிதம்­ப­ரம் அமைச்­ச­ராக இருந்த கால­கட்­டத்­தில் நிதித்­துறை உதவி செய்­தி­ருக்­கி­றது. இதற்­காக அவ­ரது மகன் கார்த்தி சிதம்­ப­ரத்­துக்கு, அந்­நி­று­வ­னம் கணி­ச­மான தொகை வழங்கி இருக்­கி­றது என்­ப­து­தான் குற்­றச்­சாட்டு, இதற்­காக கைது செய்­யப்­பட்ட ப. சிதம்­ப­ரத்­தி­டம், சி.பி.ஐ. 10 நாட்­க­ளாக விசா­ரணை நடத்­தி­யுள்­ளது.

 சிதம்­ப­ரம் மற்­றும் கார்த்தி சிதம்­ப­ரம் இந்த குற்­ற­சாட்­டிற்கு எந்­த­வித ஆதா­ர­மும் இல்லை, எங்­கள் மீது எந்த தவ­றும் இல்லை என வாதி­டு­கின்­றார். ஆனால், சி.பி.ஐ. மற்­றும் அம­லாக்­கத்­து­றையோ போது­மான ஆதா­ரங்­கள் உள்­ளன. எங்­க­ளது குற்­றச்­சாட்­டில் உண்மை உள்­ளது. இந்த வழக்­கில் தொடர்­பு­டை­ய­வர்­களே அப்­ரூ­வ­ராக மாறி குற்­றத்தை ஒப்­புக்­கொண்­ட­து­டன் சிதம்­ப­ரம், கார்த்தி சிதம்­ப­ரம் ஆகி­யோ­ருக்கு இதில் தொடர்பு உள்­ளது எனத் தெரி­வித்­துள்­ள­னர். அதன் அடிப்­ப­டை­யி­லேயே இந்த கைது மற்­றும் விசா­ரணை என்­கின்­ற­னர்.

சிதம்­ப­ரத்­திற்கு ஆத­ர­வாக களம் இறங்­கி­யுள்ள காங்­கி­ர­சார், பா.ஜ. அரசை கடு­மை­யாக விமர்­சித்து வரும் ப.சிதம்­ப­ரத்தை பழி­வாங்க வேண்­டும். அவ­ரது அர­சி­யல் செயல்­பாட்டை முடக்க வேண்­டும், அவ­ரது கிளீன் இமேஜை தகர்க்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில்­தான் பா.ஜ. அர­சாங்­கம் ப.சி.யை கைது செய்­துள்­ளது என்­கின்­ற­னர்.

ப.சி. போலேவே, காங்­கி­ரஸ் தலை­வர்­கள் பல­ரும் பா.ஜ.வை விமர்­சித்து வரும் நிலை­யில் இவரை மட்­டும் பா.ஜ. குறி வகை்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை. ப.சி. கைதுக்­கும், மத்­திய அர­சுக்­கும் எந்­த­வித தொடர்­பும் இல்லை.

சி.பி.ஐ. மற்­றும் அம­லாக்­கத்­து­றைக்கு கிடைத்த ஆதா­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில் அவர்­கள் எடுத்­துள்ள சட்­டப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­தான் இது என பா.ஜ. தரப்பு விளக்­கம் அளிக்­கி­றது. எது சரி என்­பது கோர்ட் விசா­ர­ணைக்கு பிறகு தெரிய வரும். அதே போல கர்­நா­டக மாநில முன்­னாள் அமைச்­சர் சிவக்­கு­மார் ஹவாலா மோசடி உள்­ளிட்ட பொரு­ளா­தாரா குற்­றங்­க­ளுக்­காக அம­லாக்­கத்­துறை கைது செய்­த­தை­யும் அர­சி­யல் பழி­வாங்­கும் போக்கு என்­று­தான் காங்­கி­ரஸ் தரப்­பில் விமர்­சிக்­கி­றார்­கள்.

கிரா­மப் பகு­தி­யில் ஒரு பழ­மொழி உண்டு. ‘‘இல்­லா­மல் பிறக்­காது அள்­ளா­மல் குறை­யாது’’ என்­பார்­கள். அதன்­படி இந்த கைது குறித்து பொது வெளி­யில் ஒரு கருத்து உண்டு. எது எப்­ப­டியோ, யார் செய்­தது சரி என்­பது நீதி­மன்ற விசா­ர­ணை­ க­ளுக்கு பிறகு தெரிய வரும். அது­வரை காத்­தி­ருப்­போம்.