குழந்­தை­யு­டன் சேர்த்து பொம்­மைக்­கும் சிகிச்சை

பதிவு செய்த நாள் : 07 செப்டம்பர் 2019

டில்­லி­யில் சிகிச்­சைக்கு ஒத்­து­ழைக்­கா­மல் அடம் பிடித்த குழந்­தை­யின் பொம்­மைக்­கும் சிகிச்சை அளித்த பிறகு, டாக்­டர்­கள் குழந்­தைக்கு சிகிச்சை அளித்­துள்­ள­னர்.

ஜிக்ரா மாலிக் என்ற குழந்தை வீட்­டில் மெத்­தை­யில் விளை­யா­டிக் கொண்­டி­ருந்த போது கீழே விழுந்து காலில் பலத்த காயம் ஏற்­பட்­டுள்­ளது. உட­ன­டி­யாக பெற்­றோர்­கள் லோக்­நா­யக் மருத்­து­வ­ம­னைக்கு குழந்­தையை அழைத்­துச் சென்­றுள்­ள­னர். அந்த குழந்­தை­யின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்­பட்­டுள்­ளது தெரி­ய­வந்­துள்­ளது.  ஆனால் அந்த குழந்தை சிகிச்சை அளிக்க ஒத்­து­ழைக்­கா­மல் மருத்­து­வர்­களை படாத பாடு படுத்­தி­யுள்­ளது.

எப்­படி குழந்­தைக்கு சிகிச்சை அளிப்­பது என்று தெரி­யா­மல் மருத்­து­வர்­கள் திகைத்து போயுள்­ள­னர். அப்­போது குழந்­தை­யின் தாய் பரீன் ஒரு யோச­னையை கூறி­யுள்­ளார். அதன்­படி குழந்­தைக்கு மிக­வும் பிடித்­த­மான பாரி என்ற பொம்­மையை மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வந்­த­னர்.

முத­லில் மருத்­து­வர்­கள் பாரி பொம்­மைக்கு சிகிச்சை அளிப்­பது போல் காலில் கட்டு போட்­ட­னர். இதனை பார்த்த குழந்தை ஜிக்­ரா­வும், மருத்­து­வர்­கள் தனது காலில் கட்டு போட ஒத்­துக் கொண்­டுள்­ளது. இதை­ய­டுத்து குழந்தை ஜிக்­ரா­வு­டன், பொம்மை பாரி­யும் நோயா­ளி­யாக மாறி­யுள்­ளது.