தமிழ்நாட்டில் மொகரம் பண்டிகைக்கான விடுமுறை நாள் மாற்றம்

பதிவு செய்த நாள் : 06 செப்டம்பர் 2019 13:35

சென்னை,

தமிழ்நாட்டில் மொகரம் பண்டிகைக்கான விடுமுறை நாள் செப்டம்பர் 10ம் தேதியிலிருந்து, செப்டம்பர் 11ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெருமக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொகரம் பண்டிகை வரும் செப்டம்பர் 10ம் தேதி கொண்டாடப்பட இருந்தது. இதையொட்டி 10ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிறை தெரியாததால் 10ம் தேதிக்கு பதிலாக 11ம் தேதியன்று விடுமுறை அறிவிக்கக் கோரி தலைமை காஜி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

காஜியின் கடிதத்தை ஏற்று செப்டம்பர் 11ம் தேதி புதன்கிழமை அன்று மொகரம் பண்டிகைக்கான அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு சார்பில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 

தமிழ்நாடு அரசு தலைமை காஜியின் கோரிக்கையின் படி மொகரம் பண்டிகைக்கான  அரசு விடுமுறை நாள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.