ஆன்மிக கோயில்கள் : குழந்தை பாக்கியம் அருள் மதுரை கூடலழகர்!

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2019

தல வர­லாறு :     பிரம்­மா­வின் புத்­தி­ர­ரான சனத்­கு­மா­ர­ருக்கு, பெரு­மாளை அர்ச்­சா­வ­தார (மனித ரூபம்) வடி­வில் தரி­சிக்க வேண்­டு­மென ஆசை எழுந்­தது. தன் விருப்­பம் நிறை­வேற, இத்­த­லத்­தில் பெரு­மாளை வேண்டி தவ­மி­ருந்­தார். சுவாமி ஸ்ரீதேவி, பூதே­வி­யு­டன் அவ­ருக்­குக் காட்சி தந்­தார். பின்பு சனத்­கு­மா­ரர், தேவ­சிற்பி விஸ்­வ­கர்­மாவை வர­வ­ழைத்து தான் கண்ட காட்­சியை அப்­ப­டியே வடி­வ­மைக்­கச் செய்­தார். அதை மிக அழ­கிய அஷ்­டாங்க விமா­னத்­தின்கீழ் பிர­திஷ்­டை­செய்­தார். அவரே ‘கூட­ல­ழ­கர்’ எனப்­பட்­டார். இத்­த­லம் கிரு­த­யு­கத்­தி­லேயே அமைக்­கப்­பட்டு விட்­டது. கிரு­த­யு­கம், திரே­தா­யு­கம், துவா­ப­ர­யு­கம், கலி­யு­கம் என நான்கு யுகங்­க­ளி­லும் சிறப்­புற்று விளங்­கு­கி­றது. எனவே இத்­தல பெரு­மாள் ‘யுகம் கண்ட பெரு­மாள்' எனப்­ப­டு­கி­றார்.

தல பெருமை:    

வெற்றி தரும் பெரு­மாள்: இங்­குள்ள உற்­ச­வர் ‘வியூக சுந்­தர்­ரா­ஜன்' என்று அழைக்­கப்­ப­டு­கி­றார். எந்த ஒரு செய­லை­யும் செய்­யும்­முன்பு, சரி­யாக திட்­ட­மிட்டு வியூ­கம் அமைத்து செயல்­பட்­டால் வெற்றி பெற­லாம். இவ்­வாறு எதி­லும் வெற்றி தரும் அழ­க­ராக இவர் திகழ்­வ­தால், இப்­பெ­ய­ரில் அழைக்­கப்­ப­டு­கி­றார். இப்­ப­கு­தியை ஆண்ட மன்­னர்­கள் போர் புரி­யச் செல்­லும் முன்பு, இவரை வேண்டி வெற்­றிக்­காக வியூ­கம் அமைத்­துக் கொண்­ட­னர். இத­னா­லும் இப்­பெ­யர் ஏற்­பட்­ட­தா­க­வும் சொல்­வர்.

முக்­கோல முகுந்­தன் : அஷ்­டாங்க விமா­னத்­தின்கீழ் தளத்­தில் கூட­ல­ழ­கர் ஸ்ரீதேவி பூதே­வி­ய­ரு­டன் அமர்ந்த கோலத்­தில் காட்சி தரு­கி­றார். இரண்­டா­வது நிலை­யில், சூரிய நாரா­ய­ணர் தேவி­ய­ரு­டன் நின்ற கோலத்­தில் அரு­ளு­கி­றார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்­பெ­ரும் தெய்­வங்­க­ளும், அஷ்­ட­திக் பால­கர்­க­ளும், ஓவிய வடி­வில் அரு­ளு­கின்­ற­னர். இத­னால் இந்த சன்­னி­தியை, ‘ஓவிய மண்­ட­பம்’ என்று அழைக்­கி­றார்­கள். மூன்­றா­வது நிலை­யில் பாற்­க­டல் நாதர், பள்ளி கொண்ட கோலத்­தில் தாயார்­க­ளு­டன் அரு­ளு­கி­றார். இவ்­வாறு, பெரு­மாள் இத்­த­லத்­தில் நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலங்­க­ளி­லும் காட்சி தரு­கி­றார். மேலும் பூவ­ரா­கர், லட்­சுமி நர­சிம்­மர், நாரா­ய­ணன், லட்­சுமி நாரா­ய­ணன், ஆழ்­வார்­கள், வைணவ ஆச்­சா­ரி­யர்­கள் ஆகி­யோ­ரை­யும் விமா­னத்­தில் தரி­சிக்­க­லாம். மலைக்­கோ­யில்­க­ளில் பவுர்­ண­மி­யன்று கிரி­வ­லம் போல், இங்கே பக்­தர்­கள் விமா­னத்தை வலம் வரு­கி­றார்­கள்.

புல­வர் கூட­ல­ழ­கர் : ஒரு­ முறை மது­ரை­யில் தொடர்ந்து மழை பெய்­யவே, மக்­கள் கடும் பாதிப்­பிற்­குள்­ளா­யி­னர். தங்­களை மழை­யி­லி­ருந்து காத்­த­ரு­ளும்­படி பெரு­மாளை வேண்­டி­னர். அவர்­க­ளது வேண்­டு­தலை ஏற்ற சுவாமி, நான்கு மேகங்­களை ஏவி­னார். அவை, மது­ரை­யைச் சுற்றி நான்கு மாடங்­க­ளாக ஒன்றுகூடி, மழை­யி­லி­ருந்து மக்­களை காத்­தது. இவ்­வாறு, நான்கு மேகங்­கள் ஒன்று கூடி­ய­தால் இத்­த­லம், ‘நான்­மா­டக்­கூ­டல்’ என்­றும், ‘கூடல் மாந­கர்' என்­றும் பெயர் பெற்­றது. சுவா­மி­யும், ‘கூட­ல­ழ­கர்' என்று பெயர் பெற்­றார். எனவே இவரை, ‘புல­வர் கூட­ல­ழ­கர்' என்­றும் சிறப்­பித்­துக் கூறு­கி­றார்­கள்.

மீன் சின்­னம் ஏன்?: பாண்­டிய மன்­னர்­க­ளின் சின்­னம், மீன். இந்த சின்­னம் உரு­வா­ன­தற்கு இத்­த­லத்து பெரு­மாளே கார­ண­மா­வார். முற்­கா­லத்­தில் இக்­கோ­யி­லைச் சுற்றி வைகை நதி, கிரு­து­மால் நதி ஆகி­யவை ஓடின. இதில் கிரு­து­மால் நதி­ சு­ருங்கி ஓடை­யாகி விட்­டது. பாண்­டிய மன்­ன­னான சத்­தி­ய­வி­ர­தன், இத்­தல பெரு­மாள் மீது அதீத பக்தி செலுத்­தி­னான். ஒரு முறை அவன் கிரு­து­மால் நதி­யில் நீரா­டிய போது, பெரு­மாள் மீன் வடி­வில் தோன்றி உப­தே­சம் செய்­தார். தனக்கு அரு­ளிய சுவா­மி­யின் நினை­வாக மீன் சின்­னத்தை வைத்­துக்­கொண்­டான்.

பொது தக­வல்: பஞ்­ச­பூத தத்­து­வங்­களை உணர்த்­தும் வகை­யில் ஐந்து கல­சங்களு­டன் கூடிய ஐந்து நிலை ராஜ கோபு­ரம், எட்­டெ­ழுத்து மந்­தி­ரத்தை உணர்த்­தும் வகை­யில் எட்டு பிர­ாகா­ரங்­க­ளு­டன் அமைந்த கோயில் இது. ஆண்­டாள், சக்­க­ரத்­தாழ்­வார், நவக்­கி­ர­கம், ஆழ்­வார்­கள், ஆச்­சா­ரி­யார்­கள், மண­வாள மாமு­னி­கள், விஸ்­வ­க்ஷே­னர், ராமர், கிருஷ்­ணர், லட்­சு­மி­நா­ரா­ய­ணன், கரு­டன், ஆஞ்­ச­நே­யர், லட்­சுமி நர­சிம்­மர் ஆகி­யோ­ருக்­கும் சன்­னி­தி­கள் உள்­ளன.

பிரார்த்­தனை : திரு­ம­ணத்­தடை, குழந்தை பாக்­கி­யம், கல்­வி­ய­றி­வுக் பிரார்த்­தனை செய்­கி­றார்­கள்.    

நேர்த்­திக்­க­டன்: இங்கு தாயா­ருக்கு பால்­கு­டம் எடுத்து நேர்த்­திக்­க­டன் செலுத்­து­கி­றார்­கள்.

திரு­விழா: வைகுண்ட ஏகா­தசி, நவ­ராத்­திரி.      

திறக்­கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.    

முக­வரி: கூட­ல­ழ­கர் திருக்­கோ­யில், மதுரை - 625 001. மதுரை மாவட்­டம்