பி.பி.சியின் செயற்கை குரல் சேவை

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2019

கூகுள், அமேசான் போன்ற செயற்கை நுண்ணறிவு ஜாம்பவான்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவ செயற்கை குரல் உதவியாளர்களை களமிறக்கியுள்ளனர்.

இதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், செய்தி நிறுவனமான பி.பி.சியும் இப்போது செயற்கை குரல்களை உருவாக்கி வருகிறது. 'பீப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குரல், பிரிட்டனின் ஆங்கிலத்தில் உள்ள பல பிராந்திய உச்சரிப்புகளையும் நயமாக பிரதிபலிக்கும் விதத்தில் இருக்கும் என, பி.பி.சி தெரிவித்துள்ளது.

பி.பி.சியின் செய்தி இணைய தளங்கள், பிறகு ஸ்ட்ரீமிங் சேவைகள் என்று படிப்படியாக பீப் குரலின் பல அவதாரங்களை, பி.பி.சி பயன்படுத்த உள்ளது. அதன்பின், வெளியாருக்கு அந்தக் குரல்களை கட்டண அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்கப்போகிறது பி.பி.சி.