வருங்கால கணவர் எப்படிப்பட்டவர்? – ஜோதிடர் டாக்டர் என். ஞானரதம்

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2019

உங்­கள் துணை எப்­ப­டிப்­பட்­ட­வர்? உங்­கள் ஜாத­கமே சொல்­லும்.

திரு­மண வய­தில் உள்ள எல்­லோ­ருக்­கும் தங்­கள் துணை (எதிர்­கால கண­வன்,எதிர்­கால மனைவி) எப்­ப­டிப்­பட்­ட­வ­ராக வரு­வார் என்று வழி மேல் விழி வைத்­துக் காத்­துக் கொண்­டி­ருப்­பார்­கள் அல்­லவா? அதா­வது தங்­கள் கண­வர் அல்­லது மனைவி எப்­ப­டிப்­பட்­ட­வர் என்று தெரிந்து கொள்ள எல்­லோ­ருக்­கும் ஒரு ஆவல் உண்டு அல்­லவா? அவர்­க­ளுக்­கா­கத்­தான் இந்த கட்­டு­ரையை நான் படைத்­தி­ருக்கிறேன். இனி ஒன்­றன் பின் ஒன்­றாக வரி­சை­யாக பார்க்­க­லாமா?

ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஏழாம் இடம் என்­பது களத்­திர ஸ்தானம் எனப்­ப­டும். அதா­வது, களத்­திர ஸ்தானம் என்­றால் தன்­னு­டைய துணை­யா­கக் கூடிய கண­வன் அல்­லது மனை­வி­யைக் குறிக்­கும் இடத்­தைத்­தான் களத்­தி­ரஸ்­தா­னம் என்­பர். ஒவ்­வொரு கோள்­க­ளுக்­கும் ஒரு தனித்­தன்மை இருக்­கின்­றது. அந்த கோளின் தன்­மைக்­கேற்ப களத்­தி­ரம் அதா­வது தங்­கள் கண­வன் அல்­லது மனை­வி­யைப் பற்றி தெரிந்து கொள்ள ஜாத­கம் வழி­வ­குக்­கின்­றது.

தங்­கள் ஜாத­கத்­தில் களத்­திர ஸ்தானத்­தில் சூரி­யன் நின்­றால்

அரசு உத்தியோ­கத்­தில் இருப்­பார். மிக­வும் சுய­ம­ரி­யாதை உள்­ள­வர். கவுர­வத்தை அதி­கம் எதிர்­பார்ப்­பார். சிவந்த நிறத்­து­டன் காணப்­ப­டு­வார். தலை­மு­டிக் குறை­வாக இருப்­பார். வங்கி மற்­றும் கவுரவ­மான வேலை­யில் இருப்­பார். நிர்­வா­கத்­தி­றன் படைத்­த­வ­ராக இருப்­பார். மிக­வும் கண்­டிப்­பு­டன் இருப்­பார். இவர் அதி­க­மாக சிரித்­துப்­பே­சும் இயல்­பில்­லா­த­வ­ராக இருப்­பார். பொறுப்­பு­டன் நடந்து கொள்­வார். அலட்­சி­யம் இவ­ரி­டம் இருக்­காது.

தங்­கள் ஜாத­கத்­தில் களத்­திர ஸ்தானத்­தில் சந்­தி­ரன் நின்­றால்

         

அதி­கம் பாசத்­தையே கொண்­ட­வ­ராக இருப்­பார். குறிப்­பாக, தாய் மீது அதிக அளவு அன்பு பாராட்­டு­வார். யார் வந்­தா­லும் நன்­றாக உப­ச­ரிப்­பார். அடிக்­கடி கூல் டிரிங்ஸ் அல்­லது டீ, காபி என அருந்­து­ப­வ­ராக இருப்­பார். தெரிந்த நப­ரையே திரு­ம­ணம் செய்­து கொள்ள ஆசைப்­ப­டு­வார். அதா­வது, பேசிப் பழ­கி­யபின் புரிந்து கொண்டு திரு­ம­ணம் செய்து கொள்ள ஆசைப்­ப­டு­வார். பெரும்­பா­லும் காதல் திரு­ம­ணத்­தையே அதி­கம் விரும்­பு­வார். விவ­சா­யம் அல்­லது பெட்­ரோல் இன்­ஜி­னி­யர் அல்­லது பால் வியா­பா­ரம் செய்­ப­வ­ராக இருப்­பார். கற்­ப­னை­ வ­ளம் கொண்ட தொழில்­க­ளில் இவர் ஈடு­ப­டு­வார்.

தங்­கள் ஜாத­கத்­தில் களத்­திர ஸ்தானத்­தில் செவ்­வாய் நின்­றால்

இவர் சற்று முன்­கோ­பக்­கா­ர­ராக இருப்­பார். திடீர் திடீர் என்று கோபம் வரும். இவரை புரிந்து கொள்­வது சற்­றுக் கடி­னம். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற குணம் உள்­ள­வர். சிவந்த கண்­களை உடை­ய­வர். பெரிய விழி­களை உடை­ய­வர். மாநி­றம் அல்­லது அதற்கு மேற்பட்ட நிறத்­தி­னைப் பெற்­றி­ருப்­பார். பேச்­சில் கறா­ராக இருப்­பார். எதற்­கெ­டுத்­தா­லும் சற்று முரட்­டுத்­த­ன­மா­கவே காணப்­ப­டு­வார். (இன்­பம் துன்­பம் காலங்­க­ளில் கூட) ராணு­வம் அல்­லது மின்சார வாரியத்தில் அசிஸ்­டன்ட் இன்­ஜி­னி­யர் அல்­லது நெருப்பு அணைக்­கும் நிலை­யங்­க­ளில் அல்­லது காவல் துறை­யி­ன­ரா­கக் கூட இருக்­க­லாம்.

தங்­கள் ஜாத­கத்­தில் களத்­திர ஸ்தானத்­தில் புதன் நின்­றால்

     

நன்கு படித்­த­வ­ராக இருப்­பார். அதி­க­மான தந்­தி­ர­சாலி மற்­றும் புத்­தி­சா­லி­யா­கத் திகழ்­வார். உட­லில் நரம்பு தெரி­யும்.         

(தொடரும்)