டி.வி. பேட்டி : நான் ஒரு அமைதிப்பூங்கா!

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2019

* “சுந்­தரி நீயும் சுந்­த­ரன் நானும்” (விஜய் டிவி) சீரி­ய­லின் கதா­நா­யகி ‘தமி­ழ­ர­சி’­யாக நடிப்­ப­வர், தேஜஸ்­வினி கவுடா.

*    கதைப்­படி, தன் தாயோ­டும் இரண்டு சகோ­த­ரி­க­ளோ­டும் வாழ்ந்து வரும் -  மன­ந­லம் குன்­றிய குழந்­தை­க­ளுக்­கான பள்­ளியை நடத்தி வரும் கனி­வான உள்­ளம் படைத்த பெண்­ணாக வரு­கி­றார்.

*    தேஜஸ்­வி­னிக்கு பூர்­வீ­கம், பெங்­க­ளூரு.

*    நவம்­பர் 22, 1993ல் பிறந்­த­வர்.

*    அவர் ஒரு மாட­லும் கூட!

*    பெங்­க­ளூ­ரு­வி­லுள்ள மேக்ஸ் முல்­லர் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் படித்­தார்.

*    அதன்­பின், பெங்­க­ளூ­ரு­வி­லுள்ள  ராஜ­ரா­ஜேஸ்­வரி காலேஜ் ஆப்   இன்­ஜி­னி­ய­ரிங்­கில் பி.இ. முடித்­தார்.

*    கன்­னட சின்­னத்­தி­ரை­யில், “பிலி ஹெண்ட்தி” சீரி­யல் மூலம் அறி­மு­க­மா­னார்.

*    அதே போல தெலுங்கு சின்­னத்­தி­ரை­யில், “கோயி­லம்மா” மூலம் அறி­மு­கம் கிடைத்­தது.

*    அதே போல், தமி­ழில் “சுந்­தரி நீயும் சுந்­த­ரன் நானும்” சீரி­யல் மூலம் அறி­மு­க­மா­கி­யுள்­ளார்.

*    அவர் ஆரம்­பத்­தில் ஒரு டப்ஸ்­மே­ஷ­ராக தன் கலைப்­ப­ய­ணத்தை தொடங்­கி­ய­வர்.

 *    சென்ற வருட கிரேட் இந்­தி­யன் பெஸ்ட்­டி­வல் கேம் ஷோவில் பங்­கேற்ற பெரு­மையை கொண்­ட­வர்.

*    இசை கேட்­ப­தை­யும், சினிமா பார்ப்­ப­தை­யும்  தன்­னு­டைய ஹாபீ­சாக வைத்­துள்­ளார்.

*    அவ­ருக்கு குல­தெய்­வம் யார் என்­பது தெரி­ய­வில்லை. ஆனால், மகா­லட்­சு­மி­யும், துர்க்­கை­யும் அவ­ரது இஷ்ட தெய்­வங்­கள்.

*    அவ­ரு­டைய வீட்­டில் நவ­ராத்­திரி பூஜையை மிக சிறப்­பாக கொண்­டா­டு­வார்­கள்.

*    எளி­மை­யாக இருப்­ப­தற்கு மிக­வும் விரும்­பு­வார்.

*    “எந்­த­வொரு இட­மாக இருந்­தா­லும் நான் இருப்­பதே தெரி­யாது. அந்த அள­வுக்கு ரொம்ப அமை­திப்­பூங்கா!” என்­கி­றார்.

*    சினிமா நடி­கை­க­ளில் கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்­வால், நயந்­தாரா ஆகி­யோரை மிக­வும் பிடிக்­கும்.

*    சினிமா நடி­கர்­கள்? “கமல், ரஜினி, அஜீத், விஜய் இந்த நாலு பேரும்­தான் என்­னோட பேவ­ரிட் ஸ்டார்ஸ்!”  

   – இரு­ளாண்டி