கங்கனா ‘சேலை’ சர்ச்சை

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2019

திரு­வி­ளை­யா­டல் படத்­தில், ‘சேர்ந்தே இருப்­பது?’ என்று ‘தருமி’ வேடத்­தில் நடித்த நாகே­ஷின் கேள்­விக்கு, ‘வறு­மை­யும், புல­மை­யும்’ என்று சிவன் வேடத்­தில் நடித்த சிவாஜி பதி­ல­ளிப்­பார்.

பாலி­வுட் பார்ட்­டி­க­ளி­டம் இந்த கேள்­வி­யைக் கேட்­டால், ‘கங்­கனா ரணா­வத்­தும் சர்ச்­சை­யும்’ என்­று­தான் பதி­ல­ளிப்­பார்­கள்!

லேட்­டஸ்ட் கங்­கனா சர்ச்சை இது: கங்­க­னா­வின் ஒரு போட்­டோவை டுவிட்­ட­ரில் வெளி­யிட்ட அவ­ரது சகோ­தரி ரங்­கோலி, ‘என்­னு­டைய சகோ­தரி அணிந்­தி­ருக்­கும் கைத்­தறி சேலை, கோல்­கட்டா­வில் தயா­ரா­னது. விலை, 600 ரூபாய்­தான்... இந்த அழ­கிய சேலை­யைத் தயா­ரிக்க நெச­வா­ளர்­கள் எவ்­வ­ளவு சிர­மப்பட்­டி­ருப்­பார்­கள், எவ்­வ­ளவு குறை­வா­கச் சம்­பா­தித்­தி­ருப்­பார்­கள் என்று அதிர்ச்­சி­ய­டைந்­தேன்’ என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இதற்கு நெட்­டி­சன்­க­ளின் தாளிப்பு: ‘கங்­கனா வைத்­தி­ருக்­கும் கைப்பை விலை ரூ.2 லட்­சம், அவர் அணிந்­தி­ருக்­கும் கூலிங் கி­ளாஸ் விலை ரூ. ஒரு லட்­சம், அவர் அணிந்­தி­ருக்­கும் ஓவர்­கோட்­டும் ஹைஹீல்ஸ் செருப்­பும் மிக அதிக விலை­யி­லா­னவை. இவ்­வ­ளவு ஆடம்­பர அயிட்­டங்­களை அணிந்­து­விட்டு, நெச­வா­ளர்­கள் மீது இரக்­கம் கொண்­ட­வர் போல பாவ்லா காட்­டு­கி­றீர்­களே!’