பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 8– 9–19

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2019

அத்­தி­வ­ர­தரை எல்­லோ­ரும் ஆசை­யோடு தரி­சிக்க சென்­றதை கண்டு ஒரு  வயது முதிர்ந்த வேத பண்­டி­தர் சொன்­னார். “நாற்­பது வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை தரி­ச­னம் தரு­வ­தால், அவரை எல்­லோ­ரும் போய்ப் பார்க்­கி­றார்­கள். ஆனால் சாசு­வ­த­மான அதி­ச­யங்­கள் நம்  ஆல­யங்­க­ளில் இருக்­கின்­றன என்­பதை ஊட­கங்­க­ளும் சொல்­வ­தில்லை. அத­னால்  மக்­க­ளுக்­கும் தெரி­வ­தில்லை”. அப்­ப­டியே அவர் ஒரு பட்­டி­ய­லை­யும் தந்­தார்.

1.ஸ்ரீரங்­கம் கோயி­லில் ராமா­னு­ஜ­ரின் உடல் 1000 வரு­டங்­க­ளாக கெடா­மல் அப்­ப­டியே உள்­ளது.

2.திரு­நெல்­வேலி பாளை­யங்­கோட்­டைக்­க­ருகே  திருச்­செந்­தூர் சாலை­யில்  உள்ள சிரட்­டைப் பிள்­ளை­யார் கோயி­லில் விநா­ய­க­ருக்கு விடலை போடும்­போது சிரட்­டை­யும் தேங்­கா­யும் பிரிந்து சித­று­கின்­றன.

3.தஞ்சை பிர­க­தீஸ்­வ­ரர் கோயி­லில்  72 டன் கல் கோபுர உச்­சி­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது.  கரு­வறை குளிர்­கா­லத்­தில் வெப்­ப­மா­க­வும்,  வெயில் காலத்­தில் குளி­ரா­க­வும் இருக்­கி­றது.

4.தாரா­சு­ரம்  ஐரா­வ­தீஸ்­வ­ரர் கோயி­லில்  உள்ள இசைப்­பட்­டி­க­ளில்  தட்­டி­னால் ‘சரி­க­ம­ப­த­நிச’ என்ற ஸ்வரங்­கள் வரு­கின்­றன.

5.கட­லுக்கு 3 ஆயி­ரத்து 500 அடி உய­ரத்­தில் வெள்­ளி­யங்­கிரி மலை­யில் சிவ­னின்  பஞ்­ச­வாத்­திய ஒலி கேட்­கி­றது.

6.கிருஷ்­ண­கிரி மாவட்­டம், தேன்­க­னிக்­கோட்டை அருகே கோட்­டை­யூ­ரில் நூற்றி ஒன்று சாமி­மலை குகை­யில் ஓரடி உய­ரம் கொண்ட கல்­லால் ஆன அகல் விளக்­கில் இள­நீர் விட்டு தீப­மேற்­றி­னால் பிர­கா­ச­மாக எரி­யும் அதி­ச­யம் நடக்­கி­றது.

7.சென்னை வியா­சர்­பாடி ரவீஸ்­வ­ரர் கோயி­லில் தின­மும் சூரிய ஒளி மூல­வர் மீது விழு­கி­றது.  காலை, மதி­யம், மாலை என மும்­முறை)

8.சுசீந்­தி­ரம் சிவன் கோயி­லில்  ஒரு சிற்­பத்­தின் காதில் குச்­சியை நுழைத்­தால் மறு காது வழி­யாக வரு­கி­றது.

9. திருப்­பூ­ரில் உள்ள குண்­ட­டம்  வடு­க­நாத பைர­வர் கோவி­லில் குழந்தை தாயின் வயிற்­றில் இருக்­கும் பொழுது, குழந்தை இந்த மாதத்­தில் இந்­தந்த வடி­வத்­தில் இந்த வித­மான பொசி­ஷ­னில் இருக்­கும் என்­பதை பல ஆண்­டு­க­ளூக்கு முன்பே கல்­லில் சிற்­பங்­க­ளாக வடித்து வைத்­துள்­ளார்­கள் நம் முன்­னோர்.

10.செங்­கம் ஊரில் உள்ள, அனு­பாம்­பிகை உட­னுறை ரிஷே­பஸ்­வ­ரர் கோயி­லில் ஆண்­டுக்கு ஒரு முறை, பங்­குனி மாதம் மூன்­றாம் நாள், மாலை சூரிய அஸ்­த­ம­னத்­தின்­போது, அவர் தங்க நிறத்­தில் ஜொலிப்­பார்.

11. வட­சென்­னை­யில் ஐயா­யி­ரம் ஆண்­டு­கள். பழ­மை­யான வியா­சர்­பாடி ரவீஸ்­வ­ரர் விவ கோயி­லில் மூன்று வேளை­யும் சூரிய ஒளி சிவ­லிங்­கத்­தின் மீது மாலை போல் வந்து விழு­கி­றது.

12. ஜெயங்­கொண்­டத்­தில் உள்ள கங்கை கொண்ட சோழ­பு­ரம் கோயி­லில் உள்ள கிணற்­றிற்கு அரு­கில் ஒரு சிங்­கத்­தின் சிற்­பம்  இருக்­கும். சிங்­கத்­தின் வாயில் ஒரு கதவு தென்­ப­டும். அதன் மூலம் கீழே இறங்­கி­னால் கிணற்­றில் குளிக்­க­லாம். ஆனால் மேலே­யி­ருந்து பார்த்­தால் நாம் குளிப்­பது தெரி­யாது.

13.    ஈரோடு காங்­கே­யத்­துக்கு அருகே மட­வி­ளா­கம் சிவன்­கோ­யில் குளத்­தில், பன்­னி­ரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்­று­கி­றது.

14.மதுரை மீனாட்சி அம்­மன் தெப்­பக்­கு­ளத்­தில் மீன்­கள் வள­ராது.

15.    சேலம் தார­மங்­க­லம்  பெரு­மாள் கோயி­லில் ராமர் சிற்­பம் இருக்­கும் இடத்­தி­லி­ருந்து வாலி சிற்­பம் இருப்­பதை பார்க்க முடி­யும்.  ஆனால், வாலி சிற்­பம் இருக்­கும் இடத்­தி­லி­ருந்து ராமரை  பார்க்க முடி­யாத வண்­ணம் அமைந்­துள்­ளது.

16.சென்னை முகப்­பே­ரில் உள்ள கரி­வ­ர­த­ரா­ஜப்பெரு­மாள் கோயி­லில் விளக்­கு­களை அணைத்­து­விட்­டால் பெரு­மாள் நம்மை நேரில் பார்ப்­பது போல இருக்­கும்.

17.தென்­காசி அரு­கில் புளி­யங்­கு­டி­யில் சுயம்பு  நீரூற்று வற்றி தண்­ணீர் இல்­லா­மல் இருக்­கும்­போது பிரார்த்­தனை செய்து பால் அல்­லது இள­நீர் விட்­டால், மறு­நாள் ஊற்­றில் நீர் வந்­து­வி­டு­கி­றது.

18.தூத்­துக்­குடி மாவட்­டம் செட்­டி­யா­பத்து கிரா­மத்­தில் பெரி­ய­சாமி கோயி­லில் கோயி­லுக்கு நேர்ந்து விடப்­ப­டும் பன்றி கொடை விழா­வின்­போது அங்­குள்ள நீருள்ள தொட்­டிக்­குள் தலை தானா­கவே மூழ்கி இறந்­து­வி­டு­கி­றது.

19.குளித்­தலை அரு­கில் ரத்­தி­ன­கிரி மலை மேல் காகங்­கள் பறப்­ப­தில்லை.

20.தேனி அரு­கில் உள்ள சிவன்­கோ­யி­லில் அவ­ர­வர் உய­ரத்­துக்கு ஏற்­ற­வாறு சிவ­லிங்­கம் காட்சி அளிக்­கி­றது.

21.    தூத்­துக்­குடி மாவட்­டம்  வீர­பாண்­டி­ய­பு­ரத்­தில் அம்­மன்­கோ­யில் கொடை விழா­வின்­போது மண் பா­னை­யில் வைக்­கப்­ப­டும் கத்தி, சாமி கோயிலை வலம் வந்து சேரும் வரை செங்­குத்­தாக நிற்­கி­றது.

22.விரு­து­ந­கர் மகான் திருப்­பு­கழ்­சாமி கோயில் திரு­வி­ழா­வின்­போது சுவா­மிக்கு படைக்­கப்­பட்ட சாதத்­தின் மேல் வேல் வைத்து பூஜை செய்­கின்­ற­னர். அதன்­பின் எத்­தனை பக்­தர்­கள் வந்­தா­லும் உணவு குறை­யா­மல் வந்து கொண்டே இருக்­கி­றது. வேலை எடுத்­த­வு­டன் குறைந்து காலி­யா­கி­வி­டும். இது போல் உணவு தட்­டா­மல் வரு­வது அத்­திரி மலை­யி­லும் நடை­பெ­று­கி­றது.

23.    திரு­மந்­தி­ர­ந­கர் (தூத்­துக்­குடி) சிவன்­கோ­யி­லில் சித்­தி­ரைத் திரு­வி­ழா­வின்­போது தேர் ஓடும் ரத­வீதி மட்­டும் சுடு­வ­தில்லை.

24.    சென்­னி­மலை முரு­க­னுக்கு அபி­ஷே­கம் செய்­யப்­ப­டும் தயிர் புளிப்­ப­தே­யில்லை.

25.    திருப்­பு­வ­னம் (சிவ­கங்கை மாவட்­டம்) அரு­கில் கல்­லும்டை திரு­நா­கேஸ்­வ­ர­மு­டை­யார் கோயி­லில் மீனாட்சி அம்­மன் இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு முறை நிறம் மாறு­கி­றது.

26.     திரு­நெல்­வேலி கடை­ய­நல்­லூர் அரு­கில் சுந்­தர்­ரேஸ்­ர­பு­ரம் சுந்­த­ரேஸ்­வ­ரர்  கோயி­லில் பிரா­கா­ரத்­தில் உள்ள விளக்­கு­களை அணைத்­து­விட்­டால் வெளியே உள்ள ஒளி மூல­வர் மீது விழு­வ­தைக் காண­லாம்.

27.ஸ்ரீவில்­லி­புத்­தூ­ரில் சிவ­ராத்­தி­ரி­யன்று கொதிக்­கும் எண்­ணெ­யில் கையை விட்டு வடை சுடு­கி­றார் ஒரு பாட்டி.

28. திரு­நல்­லூர் கல்­யா­ண­சுந்­த­ரேஸ்­வ­ரர் (பஞ்­ச­வர்­ணேஸ்­வ­ரர்) திருக்­கோ­வி­லில் சிவ­லிங்­கம் 6 நாழி­கைக்கு ஒரு வர்­ணத்­திற்கு மாறு­கி­றது.

29.    காசி­யில் கரு­டன் பறப்­ப­தில்லை. மாடு முட்­டு­வ­தில்லை. பிணம் எரிந்­தால் நாற்­றம் எடுப்­ப­தில்லை. பூக்­கள் மணம் வீசு­வ­தில்லை.

30. சிவ­கங்கை மாவட்­டம் திருப்­பு­வ­னம் அரு­கில் கல்­லும்டை திரு­நா­கேஸ்­வ­ர­மு­டை­யார் கோயி­லில் அரு­க­ருகே உள்ள தெய்­வானை சுனை­யில் நீர் எப்­போ­தும் குளிர்ந்த நீரா­க­வும், வள்­ளி­சு­னை­யில் நீர் இரவு, பகல் எந்­நே­ர­மும் வெந்­நீ­ரா­க­வும் இருக்­கின்­றன.

31.    திருக்­க­ழுக்­குன்­றத்­தில் தெப்­பக்­கு­ளத்­தில் 12 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை சங்கு தோன்­று­கி­றது. சிவ­னுக்கு படைக்­கப்­பட்ட பிர­சா­தத்தை கழுகு உண்­ணும் அதி­ச­யம் நடை­பெ­று­கி­றது.

32.    திரு­நா­கேஸ்­வ­ரம் சிவன் கோயி­லில் ராகு காலத்­தில் மட்­டும் சிவ­பெ­ரு­மா­னுக்கு செய்­யப்­ப­டும் அபி­ஷேக பால் நீல நிற­மா­கி­றது.

இப்­படி அந்த பெரி­ய­வர் அடுக்­கிக் கொண்டே போனார். அவர் வேதங்­க­ளில் திளைத்து ஊறி­ய­வர். இந்­தி­யா­வி­லுள்ள பல ஆல­யங்­க­ளுக்­குச் சென்று வந்­த­வர். அவர் சொன்ன பல விஷ­யங்­கள் இப்­போது அந்­தந்த கோயில்­க­ளில் நடக்­கி­றதா என்­பது தெரி­யாது. கார­ணம் அவ­ரு­டைய அனு­ப­வம் என்­பது பல ஆண்­டு­க­ளுக்கு முந்­தை­யது. உதா­ர­ண­மாக, திருக்­க­ழுக்­குன்­றத்­தில் முன்­பெல்­லாம் உச்சி வெயில் பொழு­தில் இரண்டு கழு­கு­கள் சிவ­னின் பிர­சா­தத்தை உண்ண வரும். குன்­றின் மேல் அந்த கோயில் அர்ச்­ச­கர் அமர்ந்து அவை வரும் வரை பாத்­தி­ரத்­தில் பிர­சா­தத்தை வைத்து காத்­தி­ருப்­பார். ஆனால் கடந்த சில வரு­டங்­க­ளாக கழு­கு­கள் வரு­வ­தில்லை. முன்பு இந்­தக் காட்­சி­யைப் பார்க்­கவே விடு­முறை நாட்­க­ளில் யாத்­ரீ­கர்­கள் அலை­ய­லை­யாக வரு­வார்­கள்.  சுற்­றுலா ஊர்­தி­கள் நடத்­தும் நிறு­வ­னங்­க­ளும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் மகா­ப­லி­பு­ரம், திருக்­க­ழுக்­குன்­றம், வேடந்­தாங்­கல் என்று ஒரு நாள் பய­ணம் மேற்­கொள்­வார்­கள். கூட்­ட­மும் அதி­க­மாக இருக்­கும். ஆனால், இப்­போது அந்த சுற்­று­லாவே கிடை­யாது. கார­ணம் திருக்­க­ழுக்­குன்­றத்­தில் எப்­படி கழு­கு­கள் வரு­வ­தில்­லையோ, அதே போல் வேடந்­தாங்­க­லி­லும்  முன்பு போல பற­வை­கள் வரு­வ­தில்லை.

 ரசித்­தது

 ஒரு அதி­கா­லைப் பொழுது – கண­வன், மனை­வியை எழுப்பி கேட்­டான்.

‘டியர் வாக்­கிங் போறேன். நீயும் வர்­றியா?’

கண­வனை வித்­தி­யா­ச­மாக பார்த்த மனைவி,  `நான் குண்டா இருக்­கேன். உடம்பை குறைன்னு சொல்­றீங்க அப்­ப­டித்­தானே?

கண­வன்: ‘அதில்லை, வாக்­கிங் உடம்­புக்கு நல்­லது’.

மனைவி: ‘அப்ப என்னை நோயா­ளின்னு சொல்­றீங்­களா?’

 கண­வன்: ‘இல்லை, இல்லை.  நீ வர­வே­ணாம், விடு.’

மனைவி : ‘அப்ப என்ன சோம்­பே­றின்னு சொல்­றீங்க?’

கண­வன் : ‘அப்­படி இல்லை. ஏன் எல்­லாத்­தை­யும் தப்­பாவே புரிஞ்­சுக்­கிறே?’

மனைவி: ‘இத்­தனை நாளா புரிஞ்­சுக்­கா­மத்­தான் இருந்­தேனா?’

 கண­வன் : ‘நான் அப்­ப­டிச் சொல்­லலை.’

 மனைவி : ‘அப்­ப­டித்­தான் சொன்­னீங்க. அப்­ப­டீன்னா நான் பொய் சொல்­றேனா?’

கண­வன் : ‘விடு. காலங்­காத்­தால ஏன் சண்டை?’

மனைவி : ‘ஆமாங்க, நான் சண்­டைக்­கா­ரி­தான்’.

கண­வன் : ‘நானும் போகலை.’

 மனைவி: ‘உங்­க­ளுக்கு போக அலுப்பு. அதுக்கு என்னை குத்­தம் சொல்­றீங்க’.

கண­வன் : ‘சரி, நீ தூங்கு, நான் தனியா போய்க்­கி­றேன்.’

 மனைவி:  உங்­க­ளுக்கு எங்கே போனா­லும் தனியா போய் சுதந்­தி­ரமா என்­ஜாய் பண்­ண­னும்’.

வெறுத்­துப் போன கண­வன் களைப்­பாகி படுத்­து­ விட்­டான்.                                         ***